Thursday, October 18, 2007

சிங்கை "சியான்"

நம்மூரில் சியான் என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் இங்கு??

ஆங்கிலத்தில் சொன்னால் பலரும் புரிந்துகொள்வார்கள்.அந்த விஷயத்துக்கு பிறகு வருவோம்.

நேற்று இரவு சிங்கைக்கு வந்து சேர்ந்தது A380 ரக விமானம்.இரட்டை அடுக்கு கொண்ட விமானம் 12 மணி நேர பிரயாணத்துக்குப் பிறகு ஃபிரான்ஸ்- டோலோஸ் நகரில் இருந்து சுமார் 6.40க்கு சிங்கை முனையம் 3 க்கு வந்து சேர்ந்தது.அதை வர வேற்க பிரதமர் உட்பட பலர் வந்திருந்தனர்.இதைப் போல இன்னும் 19 விமானங்கள் வாங்க இருக்கிறது சிங்கப்பூர் ஏர் லயன்ஸ். அதற்குப் பிறகு தன்னிடம் உள்ள சில 747 ரக விமானங்களை விற்க உள்ளது.யாருக்காவது வேண்டுமானால் அவர்களை தொடர்புகொள்ளவும். :-)



இந்த விமானத்துக்காகவே கட்டப்பட்டது போல உள்ளது முனையம் மூன்று.இது சுமார் 1.9 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.





இதன் வரவை ஒட்டி பேசிய முதல்வர் SIA வின் வெற்றிக்கு கடும் உழைப்பை காரணமாக சொல்லியுள்ளார். கவனிக்க "உழைப்பை".சுற்றி உள்ள பெரிய பெரிய தேசங்களால் இன்னும் முடியாததை சிங்கை செய்துகாட்டியுள்ளது பெருமைக்குரியது.சிங்கப்பூர் மகுடத்தில் இது இன்னொரு வைரக்கல்.

சியான் பற்றி வருவோம்.நம்மூரில் சியான் என்றால் ஒரு "தல" மாதிரி இமேஜ் தானே??

அப்படி என்றால்.. Mr. Lee Hsien Loong கூட சிங்கையின் தல தான்.இம்மாம் பெரிய விமானத்தை முதல் முதலில் கொண்டு வந்த "தல". அவர் தான் பிரதம மந்திரி.

சிங்கை சும்மா நிமிர்ந்து நிற்கிறது.

No comments: