Sunday, February 25, 2007

பாட்டு பிடிக்கும் வேலை

நாம் பல சமயம் பாடல்/பேச்சு இவைகளை இணையத்தின் மூலம் கேட்கிறோம்.அப்படி கேட்க்கும் போது,இதை நம் கணினியில் சேமிக்க முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று நினைத்திருப்போம்.

இந்த மாதிரி சில பாடல்கள்/பேச்சுக்கள் தரவிரக்கம் செய்யக்கூடிய சூழ்நிலையை அந்தந்த வலைப்பக்கங்களே செய்துகொடுத்திருப்பார்கள்.

சிலர் கேட்க மட்டும் அனுமதித்திருப்பார்கள்.

அவுங்க என்ன பண்ணா,எனக்கென்ன? எனக்கு அது வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தை நீங்கள் என்றால், இதோ அதற்கு ஒரு வழி.
தெரிஞ்சவங்க அப்படியே அப்பீட் ஆகிங்கிங்க!!

கீழே உள்ளது சவுண்ட் Card. இதில் உள்ள ஒரு நுழைப்பான் Line In என்று உள்ளது பாருங்க,அதைத்தான் நான் உபயோகிக்க போகிறோம்.


இந்த தொழிற்நுட்பம் மிகவும் எளிது. கணினிக்கு சவுண்டு போக ஒரு நுழைப்பானும்,வாங்கிக்கொள்ள மற்றொன்றும் இருந்தால் போதும்.

கீழே உள்ள மாதிரி ஒரு அடாப்டர் வாங்கிக்கொள்ளுங்கள்.இது இங்கு சிங்கையில் 1 வெள்ளிதான்.(Get Stereo Type)


இதை சவுண்ட் கார்டில் உள்ள speaker in யில் பொருத்தவும்.ஒரு நுழைப்பில் Speaker cable உம் மற்றொன்றில் கீழே காண்பித்துள்ள கேபிளையும் சொருகவும்.

இந்த கேபிளின் மறுமுனை சவுண்ட் கார்டின் Line in உள் நுழைக்கவும்.
அம்புடெதேன்.
இப்ப பாட்டு பிடிக்க என்ன மென்பொருள் வேனும் என்று பார்ப்போம்.
XP வைதிருப்பவர்களுக்கு Sound Recorder என்ற மென்பொருள் இருக்கு,அதில் வெரும் 1 நிமிடம் தான் பிடிக்க முடியும். வேலைக்கு ஆகாது.
அடுத்து Real Player, இதில் மேம்படுத்தப்பட்ட சேவைக்கு மாத்திரம் தான் இருக்கிறது. அதற்கு பணம் கட்ட வேண்டும்.அதனால அப்பால போக்லாம்.
நான் உபயோகப்படுத்தியது.

ஆடா சிட்டி(தொடுப்பை சுட்டு,எடுத்துக்கங்க)

அதில் உள்ள Settings உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து "Record"ஐ அமுத்த வேண்டும்.அதற்கு முன் நீங்கள் கேட்கவிரும்பும் இடத்துக்கு போய் பாடலை/பேச்சை ஓட விடுங்கள்.

MP3 ஆக சேமிக்க அங்கு வழி சொல்லப்பட்டுள்ளது.


தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்,அவ்வளவு தான்.

4 comments:

இலவசக்கொத்தனார் said...

நீங்க என்னை மாதிரி விரல் நகத்தைக் கடிக்க மாட்டீர்கள் போல!

ஆடா சிட்டியின் மூலமாக சேமித்த பாட்டைக் கேட்டால் ஆட வருமா? :))

SP.VR. SUBBIAH said...

ஆகா, இது எனக்கு மிகவும் தேவையானதாயிற்றே - செய்து பார்க்கிறேன் மிஸடர் குமார். ந்ன்றி!

இதே போல நம் கணினியில் உள்ள பாட்டை வலைப் பதிவிற்கு ஏற்ற என்ன வழி உள்ள்து - கொஞ்சம்
சொல்லிக்கொடுங்கள்

நன் தற்சமயம் musicplug.in இணையத்திலிருந்து பாட்டைத் தேர்வு செய்து வலையில் பதிவிடுகிறேன்

ஆனால் என் கோப்பிலுள்ள பாட்டை வலைக்குக் கொண்டுபோகும் வழி தெரியவில்ல!

ந்ன்றி!

வடுவூர் குமார் said...

வாங்க இ.கொத்தனார்.
வலைப்பூவில் ஏற்றிய பிறகு தான் இந்த நகத்தை கவனித்தேன்.
பரவாயில்லை என்று விட்டுவிட்டேன்.
பி.குறிப்பு: கட்டுமானத்துறையில் இருப்பவர்கள் கொஞ்சம் வைத்திருந்தால் ஸ்குரு டிரைவர் கிடைக்காத சமயத்தில் உபயோகமாக இருக்கும்.
வாப்பா கொஞ்சம் ஸ்டிரிக்ட்:நகமெல்லாம கடிக்கக்கூடாது,எச்சல்.:-))

வடுவூர் குமார் said...

ஐயா
இதுவரை பாடல்களை வலையேற்றியதில்லை.
திரு.ஞானவெட்டியான மற்றும் ரவிசங்கர் வலைப்பதிவில் பார்த்திருக்கேன்.
வலையில் மேய்ந்த பிறகு சொல்கிறேன்.