Friday, February 16, 2007

காற்றில் இணையம்

இணையம் முதன் முதலில் மோடத்துடன் ஆரம்பித்தது,அதன் ஒரு முனை கணினியின் RS232 போர்ட் உடன் மற்ற முனை மோடத்துடன் இருந்தது.தொலை பேசி கேபிளை இணைத்து டையல் அப் முறையில் இணைந்தோம்.

பிறகு அதை மேம்படுத்தி இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்ட புதுவித மோடத்தை (ADSL) USB போர்ட் உடன் இணைத்தோம்.

இதற்கு பிறகும் தாகம் அடங்காமல் இங்குள்ள ஸ்டார் ஹப் என்ற கம்பெனி கேபிள் டிவி வழக்ங்கும் அதே கேபிளின் மூலம் அதிவேக இணைய இணைப்பை வழங்கியது,வழங்கி வருகிறது.

இது வரை சொன்ன அவ்வளவுக்குமே உங்கள் வீட்டில் உள்ள தொலைபேசி கேபிளையோ அல்லது கேபிள் டிவி கேபிளையோ தான் உபயோகப்படுத்த வேண்டியிருக்கும்.

இதையெல்லாம் தூக்கி சாப்பிடக்கூடிய தொழிற்நுட்பம் இப்போது சிங்கையில் உள்ள ஒரு தொலைபேசி நிறுவனம் வழங்கத்தொடங்கியுள்ளது.அந்த நிறுவனத்தின் பெயர் M1.

இவர்கள் 3G-HSDPA என்ற முறையின் கீழ் கீழே உள்ள படத்தின் இருப்பது போல் ஒரு கம்பியில்லா மோடம் கொடுக்கிறார்கள்.அதை சிங்கப்பூரில் எங்கு வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்.





உங்களிடம் இருக்க வேண்டியதெல்லாம் USB 2 போர்ட்,Win XP or Win 2000.இதன் அளவு ஒரு செல் போன் அளவுக்குத்தான் இருக்கிறது.அதனால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துப்போக வசதியாக உள்ளது.தேவையான டிரைவர்கள் அதை இணைக்கும் போதே எடுத்துக்கொள்ளும் வகையில் உள்ளது.Mac யையும் இது சப்போர்ட் பண்ணுகிறது.

வேகம்??

3வித பிளான்கள் உள்ளது.உங்கள் பர்சின் உள்ளே இருப்பதற்கு தகுந்தமாதிரி 22,38 மற்றும் 69 வெள்ளிகளுக்கு உள்ளது.

அவ்வப்போது இணைபின் வேகம் மாறுபடுவதால் சில சமயம் தடுமாறுகிறது,இருந்தாலும் Dail-up வை விட மேம்பட்ட வேகம்.

இதெல்லாவற்றிலும் இவர்கள் கேட்பது 6 மாத ஒப்பந்தம் தான்.சிம் கார்டுக்கு 26.25 வெள்ளி மட்டுமே கட்டி 3 நாட்கள் காத்திருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.இந்த 3 நாட்கள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே.

கடந்த 2 நாட்களாக உபயோகிக்கிறேன்.நன்றாக உள்ளது.போகப்போக பார்ப்போம்.

இந்த மாதிரி மோடங்கள் வின் டோஸ்க்கு மாத்திரம் தேவையான் டிரைவர்கள் வழங்குகின்றன.லினக்ஸ்க்கு?

சும்மா இருபாங்களா நம் ஆட்கள்.சில தேசங்களில் இதை வேலை செய்ய வைத்துவிட்டார்கள்.பல முறை படித்து செயல்படுத்த உள்ளேன்.

No comments: