Friday, February 23, 2007

சென்னையில் வீடு

அவ்வப்போது செய்திதாள்களில் இதை பார்த்திருக்கலாம்.
வீடு கட்டித்தர பணம் வாங்கிகொண்டு தலை மறைவு,
வாங்கிய வீட்டுக்கு பத்திரம் இல்லை.அனுமதிக்கப்பட்ட உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டிவிட்டார்.
அனுமதியில்லாமல் வீட்டில் கட்டுமானப்பணிகள் மேற்கொண்டதால் "இடிப்பு"
இவை அனைத்தும் கொஞ்சம் பெரிய சிட்டிகளில் அனாயாசமாக நடந்துவருகிறது,அதற்கு பலரும் உடந்தை.
இந்த பட்டனை தட்டுங்க.
இதில் சொல்லப்பட்டது உண்மையாக இருந்தால்,உழைத்த வர்கத்தின் வேர்வைப்பணம் எப்படி சுருட்டப்பட்டு இருக்கிறது என்று தெரியும்.
அப்ப இதுக்கு என்ன வழி?
நான் இப்ப வீடு வாங்கப்போவதில்லை,அதனால் யோசிக்கவில்லை.:-))
ரொம்ப அவசியமாக வேண்டுமென்றால்..
ஒரு 2 வருடம் காத்திருங்க,நான் வந்து கட்டிக்கொடுக்கிறேன்.
என்னை எப்படி நம்புவது என்று கேட்கிறீர்களா?
கஷ்டம் தான் - பதில் சொல்வது.
நல்ல தரமான கட்டுமான வேலை செய்பவர் வேண்டுமென்றால் தனி மடலில் கேட்கவும்.

17 comments:

 1. சொந்தமா ஒரு வீடு வேணும்ங்கிறது எவள்ளவு நியாமான ஆசை.. இதை முதலெடுத்து.. இப்படி ஏமாத்தியிருக்காங்களே.. பாவம் இந்த மாதிரி builders / contractors/developers கிட்டே பணம் குடுக்கிறவங்க பெரும்பாலும் leagal-knowledge & know-how இல்லாதவங்களா தான் இருப்பாங்கங்கிறது என்னோட அபிப்பராயம்..நாய்-வித்த காசு குலைக்காது ன்னு சொல்லிகேட்டிருக்கேன்..இந்த developer க்கும் வாய்யை கட்டி - வயித்தை கட்டி வந்த காசு அள்சர் தராதுன்னு சுருட்டிட்டாரோ ... :-?

  ReplyDelete
 2. 2 வருஷமா........ சரி நான் வெயிட் பண்ணுறேன். வாங்க......

  ReplyDelete
 3. உண்மை தான் குமார் அண்ணன். கஷ்டப்பட்டு ஒரு வீடு வாங்கனும் என்று நினைப்பவர்கள் சரியான ஆட்கள் தானா என்பதை கவனிக்காமல் விட்டு விடுகின்றார்கள்.

  ReplyDelete
 4. ஆமாம் தீபா,
  இந்த தொழிலில் இருப்பவர்கள்,பெரும்பாலும் உண்மை பேசுவதில்லை.அது தொழிலில் ஏற்படும் நிர்பந்தங்கலாகக்கூட இருக்கலாம்.
  கற்பனையில் இருக்கும் வீடு இப்படி பணமும் கையைவிட்டு போனால்???
  கொடுமையட சாமி.

  ReplyDelete
 5. வாங்க சிவா
  வீடு வாங்கும் அவசரத்தில் பலவற்றை கண்காணிக்க மறந்துவிடுகிறோம்.
  ஏழை மக்கள் தங்கள் சேமிப்பை இப்படி இழக்கும் போது,கோபம் இன்னும் அதிகமாகிறது.
  இந்த தொழிலில் நிறையவே லிங்கில் உள்ள மாதிரி ஆட்கள் இருக்கிறார்கள்.
  நல்லவர்களும் உள்ளார்கள்,தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்.

  ReplyDelete
 6. நானும் வெயிட் பண்றேன். நல்ல ஒரு வீடு கட்டிக் கொடுங்க குமார்.

  ReplyDelete
 7. ரெண்டு வருஷம் காத்துருக்கறதா முடிவு செஞ்சாச்சு:-)

  ReplyDelete
 8. நிச்சயமாக வல்லிசிம்ஹன்.
  ஊருக்கு போனவுடன் சொல்கிறேன்.

  ReplyDelete
 9. வாங்க துளசி
  தமிழ்மணத்தில் இணைந்தவர்களுக்காக ஸ்பெசலாக செய்துவிட வேண்டியது தான்.

  ReplyDelete
 10. அந்த எழுத்துரு இல்லைங்க. நான் இந்த கணினியில் போடவும் முடியாது. மேட்டர் என்னான்னு சொல்லிடுங்க. என்னமோ தப்பு தண்டா அது மட்டும் புரியுது.

  நீங்க வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான் போல! இருந்திருவோம்.

  ReplyDelete
 11. இ.கொத்தனார் உங்களுக்கே நான் சொல்லவேண்டியுள்ளது!!:-))
  இவர் செய்தது, பல புறப்போகு நிலங்களை சுபகரித்துக்கொண்டு மக்களுக்கு வீடு போட்டு வித்து கோடிக்கணக்குல சம்பாதித்து,மாட்டிகிட்டார்.

  ReplyDelete
 12. //இ.கொத்தனார் உங்களுக்கே நான் சொல்லவேண்டியுள்ளது!!:-))//

  நல்ல விஷயமுன்னா எனக்கே தெரியும். இந்த பித்தலாட்டமெல்லாம் தெரியாதா. அதான். :))

  ReplyDelete
 13. எழுத்துரு பிரச்சனை உள்ளவர்களுக்கா!!

  வீடு கட்டி தருவதாக கோடி கோடியாய் மோசடி 'புறம்போக்கு' கண்டக்டர் கைது
  பிப்ரவரி 22, 2007

  சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பொது மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

  அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி மோசடி செய்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் மதன் குமார் (52). இதையடுத்து ரியல் எஸ்டேட் பிசினஸில் இறங்கினார். அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி விற்க ஆரம்பித்தார்.  இந் நிலையில் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் வீடுகள் கட்டித் தருவதாகவும், நிலம் வாங்கித் தருவதாகவும் விளம்பரங்கள் செய்தார். தனக்கு சொந்தமான 2 கிரவுண்டு நிலத்தில் 22 அடுக்கு மாடி வீடுகள் கட்டித் தருவதாக அறிவித்தார்.

  இதையடுத்து வீடுகளை புக் செய்ய இவரிடம் பலர் லட்சக்கணக்கில் அட்வான்ஸ் தந்தனர். ஆனால், வீடே கட்டித் தரவில்லை.

  இதே போல இன்னொரு 3 கிரவுண்டு நிலத்தில் பிளாட்கள் கட்டித் தருவதாக விளம்பம் செய்தும் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தார். ஆனால், அவர்களையும் ஏமாற்றினார்.

  மேலும் பலருக்கு வீடுகளை தந்தாலும் அதை ரிஜிஸ்தர் செய்து தராமல் இருந்து வந்தார். காரணம், வீடு கட்டப்பட்ட இடம் மோசடியாக மதன்குமாரால் சுருட்டப்பட்டது என்பதே.

  இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் மதன்குமாரை நெருக்க ஆரம்பிக்கவே ஆள் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து இவரிடம் ஏமாந்த 16 பேர் மாநகர கமிஷ்னர் லத்திகா சரணை சந்தித்து புகார் கொடுத்தனர்.

  இதையடுத்து துணை கமிஷ்னர் தர்மராஜன் தலைமையில் தனி போலீஸ் படை மதன் குமாரை கைது செய்தது. அவரிடம் இருந்து பல கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  இவருக்கு சீதாகுமாரி, பெரியவதனா, மாலா என 3 மனைவிகளாம். முதல் மனைவி ஓடிப் போய்விட்டார். இரண்டாவது மனைவி விவாகரத்து வாங்கிச் சென்றுவிட்டார். 3வது மனைவி தி.நகர் பள்ளியொன்றில் ஆசிரியையாக உள்ளார்.

  பொது மக்களிடம் இவர் வசூலித்த கோடிக்கணக்கான ரூபாயை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  அதிமுகவைச் சேர்ந்த மதன் குமார் இத்தனை நாட்களாக தனது அரசியல் செல்வாக்கை வைத்து தப்பி வந்தார். கண்டக்டராக பணியாற்றியபோது அண்ணா தொழிற்சங்கத்தில் மிகத் தீவிரமாக இருந்தார்.

  அப்போதே அரசு புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போட்டு வந்தார். டிஸ்மிஸ் ஆன பின் தான் வளைத்துப் போட்ட புறம்போக்கு நிலங்களையே முதலீடாகக் கொண்டு ரியல் எஸ்டேட் பிஸினசில் இறங்கிவிட்டார்.

  பல்லாவரம் பகுதியில் புறம்போக்கு நிலத்தை சுருட்டுவதில் திமுகவைச் சேர்ந்த நந்து என்ற பிரமுகருக்கும் இவருக்கும் தான் கடும் போட்டியாம்.

  ReplyDelete
 14. சென்னையில் இருக்கறவங்களுக்குத்
  தான் கட்டி தருவீங்களா?
  சிங்கையில் இருந்தே வேலை ஆர்டர்
  எடுக்கறீங்க.புத்திசாலிங்க நீங்க.

  ReplyDelete
 15. வாங்க முத்துலட்சுமி
  அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.2 வருடங்களுக்கு பிறகு எப்படி இருக்கோ அப்ப பார்க்கலாம்.
  ஆனால் தமிழ்மணத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  ReplyDelete
 16. /நல்ல விஷயமுன்னா எனக்கே தெரியும். இந்த பித்தலாட்டமெல்லாம் தெரியாதா. அதான். :))//

  தோடா இத பாருடா கொடுமைய

  ReplyDelete
 17. வாங்க சிவா,
  பாவம் இ.கொத்தனாரை உண்மையை கூட சொல்லவிடமாட்டேன் என்கிறீர்களே!!:-))
  அப்படித்தானே இ.கொத்தனார்?
  காலை வாரிடாதீங்க.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?