Tuesday, August 28, 2007

புகைப்படத்தில் இருந்து வீடியோ

எனக்கு தெரிந்த நண்பர் இந்த மென்பொருளை சுட்டிக்காட்டி மிகவும் நன்றாக இருப்பதாக சொன்னார்,சரி நாமும் உபயோகப்படுத்தி பார்க்கலாம் என்று உபயோகித்த படம் கீழே ஊள்ளது.

எப்படி இருக்கிறது பாருங்கள்.

உங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கொடுத்தால் போதும் டிவிடி/விசிடி யாகவோ அதுவே மாற்றிக்கொடுத்துவிடும்.பின்புலத்தில் இசை வேண்டும் என்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு புகைப்படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் மாறக்கூடிய Transition ஐயும் மாற்றிக்கொள்ளலாம்.

முயன்று பாருங்கள்.

இதோ என்னுடைய முயற்சி



இந்த மென்பொருளின் பெயர் : Memories on TV.

4 comments:

வவ்வால் said...

நல்லா இருக்கு உங்கள் சலனப்படம்,இதற்கு முன்னர் இப்படி ஒரு மென்பொருள் ஒன்றை ட்ரையல் வடிவில் பார்த்துள்ளேன் , அதுவும் இப்படித்தான் இருந்தது ,இந்த மென்பொருள் முழுவதும் இலவசமா?

எனக்கு இணைப்புலாம் போட்டு இருக்கிங்க , நன்றி, ஒரு சந்தேகம் உங்களுக்கு வேறு ஒரு வலைப்பதிவும் இருக்கா, நான் முன்னர் வேற எதோ ஒரு பதிவ படிச்ச நினைவு!

வடுவூர் குமார் said...

வாங்க வவ்வால்
இதுவும் காலவரையறைக்கு உட்படுத்தப்பட்டதே!
லினக்ஸ்க்கு என்று ஒரு பக்கம் உள்ளது.
http://kumarlinux.blogspot.com
அதில்லாமல் ஒன்றும் இருக்கு,உங்கள் பதிவில் சொல்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

Nallaa irukku Kumaar.
Ithai try seythu paarkkalaam.

வடுவூர் குமார் said...

சுலபம் தான் வல்லிசிம்ஹன்,செய்து பாருங்கள்.