ஓட்டுனர் இல்லாமல் காரை ஓட்ட முடியுமா?
போன வருடம் நம்மூர் பெண்கள் கல்லூரி மாணவர்கள் செய்து காண்பித்தார்கள் அதையே மேம்படுத்தி ஊரை விட்டு ஊருக்கு போகச்சொல்லி அங்கிருக்கும் கார் நிறுத்தத்தில் நிறுத்திக்காண்பித்திருக்கார்கள்,அமெரிக்கர்கள்.
விரைவுச்சாலையில் Traffic Jam ஆகும் நேரத்தில் இதை முடிக்கிவிட்டு விட்டு பேப்பர் படிக்கலாம் தூங்கலாம் அல்லது வேறு வேலை செய்யலாம் என்று சொல்கிறார்கள்.இன்னும் புழக்கத்தில் வர சிறிது காலம் பிடிக்கலாம்.
இந்த விரைவுச்சாலையில் பயணிக்கும் போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்,சில வேலைகளில் ஓட்டுனர்கள் தூங்கி விபத்து நடக்க காரணமாகிவிடுவதுண்டு.அதே மாதிரி ஒரு நிகழ்வில் இருந்து தப்பினேன் அதிலிருந்து மதிய சாப்பாட்டுக்கு பிறகு இரண்டு மணி நேரத்துக்கு வெளி வேலையை தள்ளிப்போடுவேன்.
அடிக்கடி விரைவுச்சாலையில் பயணிக்கும் போது இந்த மாதிரி ஒரு அமைப்பு இருந்தால் கவலைப்பட வேண்டாம் என்று நினைப்பதுண்டு.ஆதாவது காரிலும், சாலை தடம் Markings
யிலும் காந்தம் இருக்கவேண்டும்.நேர் சாலை என்னும் பட்சத்தில் இந்த காந்த சக்தியை இயக்கவேண்டும்.இரு முனை காந்தம் வண்டியை தடம் மாறாமல் செலுத்த உபயோகப்படுத்த வேண்டும்.அதே மாதிரி முன்னும் பின்னும் வரும் வண்டிகளை தேவையான தூரத்தில் நிறுத்தவும் வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள காந்தம் வேலை செய்யவேண்டும்.இதில் நிறை குறைகள் உள்ளன,இருந்தாலும் கார் உபயோகிப்பார்கள்/தயாரிப்பார்கள் யாராவது சொன்னாலும் மண்டையின் உள் அரித்துக்கொண்டு இருக்கும் அரிப்பு அடங்கும்.:-)
2 comments:
இது நம்ம இந்தியாவுக்கு வராதுன்னு பட்சி சொல்லுது. மனுஷனுக்கே லாரி எந்த பக்கத்திலிருந்து வரும், ஆடு மாடு எந்த பக்கத்திலிருந்து வருமின்னு குத்துமதிப்பா கூட சொல்ல முடியாது. அப்படியிருக்குறப்போ கம்யூட்டர்??? நாம நிம்மதியா இருக்கலாம்.
ஆமாங்க காட்டாறு எந்த நேரத்தில் எந்த பக்கத்தில் வரும் என்று தெரியாத பட்சத்தில் இதில்(கணினி கட்டமைப்பில்) குழப்பம் வரக்கூடும்.
ப்ரோட்டோ முறையே நம்மக்கள் கண்டுபிடியத்திருக்கும் போது நம்மூருக்கு சரிப்பட்டு வரும் விகிதத்தில் வந்துவிடும் என்றே தோன்றுகிறது.
Post a Comment