Tuesday, January 22, 2008

ஜெயந்தி சங்கர் -பாகம் 2

போன பதிவில் “இன்பா” பற்றி சொல்லியிருந்தேன் அதில் அவர் சொல்லிய முக்கியமான விஷயம் ஒன்று விட்டுப்போய்விட்டது.

குழந்தைகள் பெரியோர்களை வயதான காலத்தில் கவனித்துக்கொள்வதில்லை என்ற பொதுவான கருத்து நிலவுதலை கொண்ட ஒரு கதையை(ஜெயந்தி சங்கர் எழுதியது) பற்றி குறிப்பிட்டு அதன் தொடர்பில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார்.

ஒருமுறை அலுவலகத்தில், முதியோர் நல அமைப்புக்காக நிதி திரட்டும் உண்டி குலுக்கிக்கொண்டு இருக்கும் போது (ஆர்சட் சாலை) ஒரு வெளிநாட்டவர் இவர் உண்டியலை பார்த்து எதற்கு நிதி சேர்க்கிறீர்கள் என்று கேட்டாராம்.பதில் சொன்னவுடன் 50 வெள்ளி உண்டியலில் போட்டுவிட்டு...

நீங்கள் குழந்தைகளுக்கு, பெரியவர்களை எப்படி கவனித்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறீர்களா? என்று கேட்டாராம்.பளார் என்று அறைந்தது போல் இருந்தது என்று சொன்னார்.எனக்கும் தான்... நாம் சரியாக சொல்லிக்கொடுக்கிறோமா?!!

அடுத்து வந்தவர் திரு பாஸ்கர்,இவர் எடுத்துக்கொண்ட புத்தகம் கவிதை மொழிபெயர்ப்பு ”சீனக்கவிதைகளின் பிரதமைகள்”இவர் இப்போது கணினி வரைகலை பிரிவில் வேலை செய்வதாகவும்,தூரிகாவில் குழந்தைப்படம் வரைந்ததாகவும் அக்குழந்தையும் இங்கு வந்திருப்பதாக சொன்னார்,தொகுப்பாளினி.ஆமாம் “தூரிகா” என்ன புத்தகமா? எனக்கு தெரியவில்லை.

பல பக்கங்களில் டேக் எனப்படும் துண்டுசீட்டை வைத்துக்கொண்டிருந்தார்.முழு புத்தகத்தையும் அலசி ஆராய்ந்தார்.திருமதி ஜெயந்தி சங்கர் இந்த புத்தகத்தை எழுதுவதற்கான பொறி கிடைத்ததையும் அதன் மூலம் எப்படி விரிவானது என்று சொன்னார்.கவிதைக்கும் எனக்கும் ஒரு காத தூரம் அதனால் அவ்வளவாக மனதில் கொள்ளவில்லை.அவ்வப்போது பேசும் மேஜைக்கு பக்கத்தில் அங்கும் இங்கும் நடந்துகொண்டு சொன்னதால் கவனம் ஒரே இடத்தில் இல்லாமல் காப்பாற்றப்பட்டது.

அடுத்து வந்தவர் “பால மனோகரன்”இவருக்கு முன்பு பேசியவர்கள் சிறிது நேரம் அதிகமாக எடுத்துக்கொண்டதால் பேசுவதற்கு முன்பே “நான் 10 நிமிடம் தான் பேசப்போகிறேன்” என்றார்.
நாவல்கள் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் ஜெயந்தி சங்கர் நாவல் மூலம் திரும்ப படிக்க ஆரம்பித்ததாக சொன்னார்.பொருளீட்டலில் காலம் ஓடிக்கொண்டு இருப்பதால் படிக்க அவ்வளவு நேரம் செலுத்த முடியவில்லை என்று சொன்னார்.இவர் எடுத்துக்கொண்ட நாவலின் பெயர் ஞாபகம் இல்லை.ஆனால் செந்தில் & குமார் என்று பெயர்கள் வந்ததன.அடுத்து களம் இறங்கியவர்,சற்றே 85 வயது ஆன இளைஞர் திரு ஈஸ்வர்.ஜெயந்தி சங்கரை பாராட்டி தன் பேத்தியாக விளித்து லேமினேட் செய்யப்பட்ட கவிதையை படித்த பிறகு கொடுத்தார்.கொஞ்ச நேரம் மட்டுமே பேசினாலும் சும்மா “நச்” என்று பேசினார்.வயது/அனுபவம் காரணமோ என்னவோபரிசு கொடுக்கும் போது.பேச வந்த அவ்வளவு பேர் அவரை பாராட்டிக்கொண்டு இருக்கும் போது திருமதி ஜெயந்தி சங்கர் என்ன செய்து கொண்டிருந்தார்? அடுத்த நாவலுக்கு குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். :-))கடைசியாக பேசியவர் திரு வரதராஜன்,இவர் என்னுடைய தாய் கம்பெனியில் வேலை செய்பவர்,தெரிந்திருந்தாலும் பேசவில்லை.இவர் பேசும் போது இரவு 7.45 ஆகிவிட்டதால் நான் கிளம்பும் நேரம் வந்தது.திரு ஜெயக்குமாரிடம் பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பும் போது என்னை ஜெயந்தி சங்கரிடம் அறிமுகம் செய்துவைத்தார்.

உங்களை நான் முன்னமே பார்த்திருக்கேனே! என்றார்.பிறகு அவரே ஓ! உங்களை வலைப்பக்கத்தில் உள்ள படத்தில் பார்த்திருப்பேன் என்றார்.வரதராஜன் பேச்சு நன்றாக் இருக்கும் கேட்டு விட்டு கிளம்பலாமே? என்றார்.நான் கிளம்பி சிரங்கூன் சாலைக்கு போய்விட்டு அங்கிருந்து வீட்டுக்கு போக சிங்கப்பூரை அரை சுற்று சுற்ற வேண்டும் என்பதால் கொஞ்சம் முன்னமே கிளம்பவேண்டியதாகிவிட்டது.

என்ன பார்வையாளர்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையா?கண்ணாடிக்கு வெளியே இருந்தும் பார்க்கும் சீனப்பெண் கிழே.

மிச்சத்தை வேறு யாராவது எழுதினால் சொல்லுங்கள்.

4 comments:

துளசி கோபால் said...

சூப்பர்.

நன்றி குமார்.

ஒருமுறை வெளியீட்டுக்கு வரப்போறேன்.

விடப்போறதில்லை:::-)))))

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
இதுவே போன வருடமே வெளியாகி இருக்க வேண்டிய புத்தங்களாம்,இந்த வருட புத்தகங்கள் எப்போது வெளியிடுவார் என்று ஜெயந்தி சங்கர் சொல்வார்.

மெளலி (மதுரையம்பதி) said...

படங்களுடன், நல்ல வர்ணனை.

இன்னும் எனக்கு இந்த புத்தகங்கள் அனுப்பவில்லை. ஜெயந்தி சங்கரிடம் சற்று ஞாபகப் படுத்துங்கள் குமார். :)

வடுவூர் குமார் said...

I will inform her,Madurayampathi.