Sunday, January 27, 2008

இணைய வேகம்

என்னுடைய "ஆப்பிள் கணினி" பதிவில் நம் சக பதிவாளர் "திவா" சிங்கப்பூரில் இணைய வேகம் எவ்வளவு இருக்கும் என்று கேட்க மாட்டேன் என்று சொல்லியிருந்தார்.

//இங்கு சிங்கையில் தேவைக்கு அதிகமாகவே வேகம் கிடைக்கிறது.//
எவ்வளவு என்று கேட்டு பெருமூச்சு விட நான் தயார் இல்லை!
:-)

அவர் கேட்காட்டி என்ன சொல்ல வேண்டியது நம்ம கடமை இல்லையே?

கீழே இருக்கும் படத்தை பாருங்கள்.



கடந்த 2 மாதங்களாக முட்டி மோதி ஒருவழியாக லினக்ஸில் கம்பியில்லா சேவையை கொண்டுவர முடிந்தது.இணைய இணைப்பு கிடைத்தவுடன் லினக்ஸின் பதிப்பை மேம்படுத்த சுமார் 350 MB தரவிரக்கம் செய்ய வேண்டிவந்தது.மேலே உள்ள படத்தில் காட்டியபடி 300kb/second என்ற கணக்கில் ஏறக்குறைய 11 நிமிடங்களில் இறக்கிவிட்டது.

நான் இணையம் உபயோகிக்க ஆரம்பித்த போது டையல் அப் மோடத்தில் 6 kb வந்தாலே படு ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு இருப்பேன்.அதையும் இதையும் ஒப்பிட்டு பார்க்கையில் இன்னும் அதிக வேகம் கூடும் என்றே தோன்றுகிறது.

4 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இங்க நெதர்லாந்தில் எனக்கு 2 MB / sec வரை தரவிறக்க வேகம் கண்டிருக்கிறேன் :) . விண்டோசைக் காட்டிலும் உபுண்டுவில் தரவிறக்க , ஏற்ற வேகம் கூடுதலாக இருப்பதாக உணர்கிறேன்.

வடுவூர் குமார் said...

வாங்க ரவிசங்கர்
வேகம் என்னவோ 11mbps என்று காட்டினாலும் கிடைப்பது என்பது பல விஷயங்களில் இருக்கிறது.ஒருவேளை மோடத்துடன் நேரிடையாக கனெக்ட் பண்ணினால் கிடைக்குமோ என்னவோ!
2 mb யா? தொடர்ந்து கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும்.
நீங்கள் சொல்லிய மாதிரி உபுண்டுவில் விண்டோஷை விட அதிகமாகத்தான் தெரிகிறது.

திவாண்ணா said...

ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..
விடமாட்டீங்களே!
டயல் அப் நாட்களை நினைத்தால் இபோதைய 256 கேபிபிஎஸ் பயங்கர வேகமா தோனுது! அதை நினைச்சு சந்தோஷப்பட்டுக்கிறேன்.
:)
(எப்பவுமே அது 256 ஆ இருப்பதில்லை. அதுதான் வேதனை. புத்திசாலித்தனமா டாடா ஒன் அப் டு அப்படின்னு போட்டாங்க!)

திவாண்ணா said...

லினக்ஸ் அப்டேட் எப்பவுமே வேகம் அதிகம்தானே!