போன வாரம் பொட்டனிகல் கார்டன் போன போது எதேச்சையாக இந்த மலர் கண்ணில் பட்டது அதோடு நம் திரு.நா.கண்ணன் அவர்கள் இதை வைத்து ஒரு கவிதைப் பதிவு போட்டது ஞாபகம் வந்தது.
அதையே நாமும் செய்தால் நன்றாக இருக்காது அத்தோடு நமக்கு கவிதை எழுதிக்கொடுக்க யார் இருக்கா??கவிதையெல்லாம் ஊற்றுத்தண்ணீர் மாதிரி “பொசுக்” என்று வரவேண்டும்,கேட்டால் எல்லாம் கிடைக்காது என்பது என் அபிப்பிராயம்.சரி சரி எனக்கு தெரியாதது/வராததை பற்றி என்ன பேச்சு??
தலைப்புக்கு சம்பந்தமாக ஏதாவது சொல்லு, என்கிறீர்களா?
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
மேலே உள்ள படம் சாதரணமாக எடுத்தேன்.அடுத்த இடத்துக்கு போகலாம் என்று நினைக்கும் போது அந்த பூவின் உள்ளே உற்றுப்பார்த்த போது...
திருடன் அகப்பட்டுவிட்டான்.
5 comments:
பூக்களே கவிதைதானே?
அப்புறம் தனியா ஒரு கவிதை எதுக்கு?
படம் நல்லாவே இருக்கு...
பூக்களே கவிதைதானே?
அப்புறம் தனியா ஒரு கவிதை எதுக்காம்?
படம் நல்லாவே இருக்கு.
துளசி
பூக்களே கவிதை என்பதால் என்னவோ அந்த எரும்பும் கவிதை மயக்கத்தில் இருக்கிறது போலும்..
அந்த திருட்டுப்பயலை கண்டுபிடிச்ச போலீஸ்காரரே... macro அழகா வந்திருக்கு. ஒன்னு கவனிச்சீங்களா? பூ மாதிரியே பல கால்கள் கொண்ட திருடன். வெகு நேர்த்தி!
வாங்க காட்டாறு
இது தான் வித்தியாசமான பார்வை என்பது.
Post a Comment