Sunday, January 20, 2008

ஜெயந்தி சங்கர் -பாகம் 1

இரண்டு வாரங்களுக்கு முன்பு இருக்கும்,ஒரு மின் அஞ்சல் திரு ஜெயகுமார் என்பவரிடம் இருந்து அதைத்தொடர்ந்து ஜெயந்தி சங்கரிடம் இருந்து வந்தது
யார் இந்த ஜெயந்தி சங்கர்?

தமிழ் பதிவுகளை படித்திருப்பவர்களுக்கு இவரை தெரியும் (சமீபத்தில் அவர் பதிவுகளை பார்க்கமுடியவில்லை) அதோடு சிங்கையில் தமிழ் புத்தகங்களை படிப்பவர்களுக்கு இவரை அறிமுகம் செய்ய தேவையில்லை.அவ்வளவு பிரபலம்.

என்னை பொருத்தவரை அவரை அவ்வளவாக தெரியாது.போன வருடம் கூகிளாந்தவரிடம் ஏதோ தேடிக்கொண்டிந்த போது ஒரு புகைப்படம் கிடைத்தது அதில் குழலியுடன் இவரை பார்க்க நேர்ந்தது.

போன வருடம் இவருடைய சில வலைப்பதிவுகளையும் படித்தேன் அவ்வப்போது தமிழக வார இதழ்களில் இவர் பெயர் அடிபடும் போது இவரின் பிரபலம் புரிந்தது.

அந்த மாதிரி சமயங்களில் தான் இவரின் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது அது "நாலே கால் டாலர்"- ஞாபக மறதியாக ஒரு வாழ்த்து அட்டையை சிங்கப்பூர் கடைகளில் காசு கொடுக்க மறந்துவிட்டு படும் ஜெயில் அனுபவத்தை கருவாக கொண்டு படைக்கப்பட்ட கதை.கதை முழுவதும் நம்மையும் கூடவே அழைத்துப்போயிருப்பது அவரிடன் எழுத்தின் பலம்.

அப்படிப்பட்டவரின் மேலும் சில நூட்கள் அறிமுக விழா என்று சொல்லி மின்னஞ்சல் வந்தது. அது நடக்கும் இடம் "அமோகியோ" (அங் மோ கியோ) நூலக அறை என்று குறிப்பிட்டு இருந்தது.அந்த விழாவுக்கு நேற்று போய் வந்தேன் அதிலிருந்து சில படங்களும் & மேலும் சிலரின் பேச்சுகளையும் முடிந்த அளவு குறைத்து கொடுக்கிறேன்.

மாலை சுமார் 5.15 க்கு கிளம்பி மின் வண்டி பிடித்து யோ சு காங்க் போய் அங்கிருந்து அப்படியே பொடி நடையாக போய் சேர்ந்த போது மணி 6.10 ஆகிவிட்டிருந்தது.நுழைந்தவுடனேயே கேசரியும் & எப்போதும் நன்றியுடன் இருக்குமாறு ஞாபகப்படுத்தும் "பகோடாவும்" மற்றும் காபியும் கொடுக்கப்பட்டது.

வந்தவர்களில் பலர் நாற்பதை கடந்தவர்கள்.பல தமிழ் சார்ந்த நிகழ்வுகளுக்கு வரும் கூட்டத்தை காட்டிலும் அதிகமாகவே இருந்தது.

தொகுப்பாளினியாக திருமதி சித்ரா ரமேஷ் ,ஒவ்வொருமுறையும் அழைக்கும் பேச்சாளர்களை பற்றி சிறிய குறிப்பை சொல்லிவிட்டு அழைத்தார்.ஜெயந்தி சங்கரின் சில புத்தகங்களை ஆய்வுரை செய்ய சிலரை அழைத்திருந்தார்கள்,அவர்களில் முதல்வர் "இன்பா" பேசியதிலும் முதல்வராக இருந்தார்.பெயரை கேட்ட மாத்திரத்திலேயே “வேட்டையாடு விளையாடு”(அது இலா) தான் ஞாபகம் வந்தது.இவர் இயற்பெயரே வித்தியாசமாக இருப்பது பற்றி விளக்கம் சொல்லிவிட்டு சிங்கை வாழ் மக்கள் எளிதாக கூப்பிடுவதற்காக சுருக்கி வைத்துக்கொண்டதாக சொன்னார்.

சுமார் 10 பக்கள் எழுதி வைத்துக்கொண்டு ஆய்வுக்கட்டுரை சொன்னார்.எழுத்தும் அழகாக இருந்தது.ஓரளவு குறிப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு வந்திருப்போரை பார்த்து பேசினால் நல்ல பேச்சாளராக வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கவிதையை நன்கு அனுபவித்து படிப்பார் போலும் அதுவும் அப்துல் ரகுமான் கவிதைகள் அவரை வெகுவாக பாதித்துள்ளது போலும். ஒரு சில கீழே (பலவற்றை ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன் அதனால் 100% சரியாக இருக்காது)

குழந்தைகளுக்காக எழுதுங்கள்
குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள்.

இந்த மலரை பறித்தது யார்?
காம்பில் கண்ணீர் தெரிகிறதே!!

இப்படி பல

இவர் எடுத்துக்கொண்ட நாவல் இவரை அதிகம் பாதித்த “மனுஷி”.அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அலசினார் அப்படியே மற்ற கதைகளையும் தொட்டு பேசினார்.ஆண்களை வைத்துக்கொண்டே பெண்ணியம் பற்றி ஜெயந்தி சங்கர் சொல்லியுள்ளதையும் சொன்னார். :-))

பதிவின் நீளம் கருதி மற்றவற்றை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

8 comments:

இலவசக்கொத்தனார் said...

//நுழைந்தவுடனேயே கேசரியும் & எப்போதும் நன்றியுடன் இருக்குமாறு ஞாபகப்படுத்தும் "பகோடாவும்" மற்றும் காபியும் கொடுக்கப்பட்டது.//

அருமை!!

வடுவூர் குமார் said...

நன்றி,இ.கொத்தனார்.

துளசி கோபால் said...

என் இன்னுயிர்த்தோழி ஜெயந்தி சங்கரின் நூல் அறிமுகவெளியீட்டு விழாவை அழகா அருமையாச் சொல்லி இருக்கீங்க.

அதுக்கே ஒரு ஸ்பெஷல் நன்றி.

அவுங்க தன்னடக்கம் காரணமா, விழா நல்லா நடந்ததுன்னு எப்பவும் ஒருவரியோட முடிச்சிருவாங்க.

ஒரு முறையாவது புத்தக வெளியீட்டு சமயம் அங்கே வரலாமுன்னா......

ரொம்பா நன்றி குமார்.
அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.

துளசி கோபால் said...

ஆமாம். துளி உப்பு கூடுனா தப்பா? தப்பான்னு கேக்கறேன்:-)))))

வடுவூர் குமார் said...

கூடிய விரைவில் எழுதுகிறேன்.துளசி.

வடுவூர் குமார் said...

துளியா?
கடல் அளவு.
கொடுத்தவர் ஜாக்கிரதையா ஒரே ஒரு துண்டு மட்டும் வைத்து புண்ணியம் தேடிக்கொண்டார். :-))

மெளலி (மதுரையம்பதி) said...

செய்திக்கு நன்றி குமார். அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

வடுவூர் குமார் said...

வாங்க மதுரயம்பதி
நான் மறந்து போவதற்குள் போட்டுவிடுகிறேன்.