Tuesday, January 08, 2008

கோவில் எப்படி இருக்கனும்?

போன வாரம் நம்ம KRS இரு பதிவுகள் போட்டு சச்சின் மாதிரி விளாசிட்டாரு உடனே நம்ம என்றென்றும் அன்புடன் பாலா எதிர்ப்பதிவு போட்டு சிலது சரியில்லை என்றார்.எனக்கு படிக்க மட்டும் தான் தெரியும்,வாக்குவாதம் என்றால் ஓடிவிடுவேன்.அதனால் அதன் உள்ளே நுழையவிரும்பவில்லை.

சரி,நான் இருக்கும் சிங்கையில் கோவில் என்றால் கோவில் மட்டும் தானா? பார்ப்போமா..

இங்கு ஒரு அங்குலம் கூட சும்மா இருக்கக்கூடாது அப்படியே கோவில்களும்.காலையும் மாலையும் பூஜை வேலை நடந்து கொண்டிருந்தாலும் அங்கு வேறு இடத்தில் பாட்டு/நடனம்/தியானம் என்று பல நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கிவிடுவார்கள்.

ஆதாவது கோவில் என்பது சமூக கூடமாகவும் வேலை செய்யும்.எதற்காக உருவாக்கப்பட்டதோ அதனை நன்குணர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.இட(ம்) ஒதுக்கீடும் ஆனது சமூகத்தையும் இணைக்கும் பணிக்கு உதவியாகிவிட்டது.

வருகிற 27ம் தேதி நடக்கப்போகிற ஒரு கோவிலின் கும்பாபிஷேகத்துக்காக சிங்கை அதிபர் திரு.S.R. நாதன் வருகை தந்து சில வார்த்தைகள் தமிழில் பேசி அசத்துகிறார்கள் பாருங்கள்.

சற்று முன் செய்தியில்.இனிமேல் இந்திய மற்றும் பங்களாதேஷ் வேலை தொழிலாளிகளை மலேசியாவில் எடுக்கப்போவதில்லை என்று சொன்னார்கள்.ஏற்கனவே உள்ள வேலைப்பதிவுகளை அதன் காலாவதி தேதிக்கு பிறகு புதிப்பிக்க போவதில்லை என்றும் சொல்லிவிட்டார்களாம்.அவர்கள் காரணம் அவர்களுக்கு.

இங்கு குடியேறுபவர்களை எப்படி பார்க்க/நடத்த வேண்டும் என்பதை திரு நாதன் சொல்வதையும் கேளுங்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்.

8 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நம்ம KRS இரு பதிவுகள் போட்டு சச்சின் மாதிரி விளாசிட்டாரு//

நல்ல காலம் ஹர்பஜன் சிங்-னு சொல்லாமப் போனீங்களே, குமாரண்ணா! :-)

வீடியோ பார்த்தேன்! நல்லா இருந்திச்சு! நல்ல விரிவான இடமுள்ள கோயில். நம்மூரில் இடமும் பிரச்சனை, கூட்டமும் பிரச்சனை!
ஆனாத் தீர்க்க முடியாது-ன்னு எல்லாம் ஒன்னுமில்ல! மனசு தான் வேணும்!

//கோவில் என்பது சமூக கூடமாகவும் வேலை செய்யும்....சமூகத்தையும் இணைக்கும் பணிக்கு உதவியாகிவிட்டது//

இது தான் முக்கியம். சமூகத்தை இணைத்தல் என்பது மன அழுத்தங்கள் நிறைந்த இக்காலங்களில் மிகவும் முக்கியமானது. ஆலயத்துக்குப் போனா அமைதி கிடைக்கும் என்பது போய், இருக்குற அமைதியைத் தொலைச்சிட்டு வருவது போல் ஆகிவிடக் கூடாது!
ஆன்மீகப் பெரியவர்கள் இதை உடனடிப் பணியாகக் கொண்டால், நம் பண்பாடு இன்னும் பல்லாண்டு நிலைச்சி இருக்கும்!

வடுவூர் குமார் said...

நன்றி KRS.

துளசி கோபால் said...

கோயில் அட்டாகாசமா இருக்குங்க.

அதிபர் சொன்னது முழுக்கச் சரிதான்.

கோயிலுக்குப்போனா மனசு நிம்மதி கிடைக்கணும். அது இல்லைன்னு வையுங்க........ பேசாம வீட்டுலேயே இருந்துறலாம்9-:

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
கும்பாபிஷேகம் 27 தேதி தான் அப்படியே வந்துட்டு போயிடுங்க.

காட்டாறு said...

எங்கே மனசு அமைதியா இருக்குதோ... அவ்விடமே கோயில் தானே...

நீங்க சொன்ன மாதிரி இங்கும் சில இடங்களில் (கோயில்களில்)... //ஆதாவது கோவில் என்பது சமூக கூடமாகவும் வேலை செய்யும்//

வடுவூர் குமார் said...

வாங்க காட்டாறு
நான் கேள்விப்பட்ட வரை பல அன்னிய தேசங்களில் கோவிலை இப்படி தான் உபயோகிக்கிறார்கள்.

குமரன் (Kumaran) said...

குமார். கோவில் ரொம்ப நல்லா இருக்கு. மறு சீரமைப்புன்னு சொல்றாங்க. நாம புனரமைப்புன்னோ திருப்பணின்னோ சொல்லியிருப்போம்.

திரு.நாதன் யார்? ஏன் அவரை அதிபர் திரு.நாதன் என்று சொல்கிறார்கள்?

வடுவூர் குமார் said...

வாங்க குமரன்
நாளை இந்த கோவிலில் கும்பாபிஷேகம்.
சில சமயம்,இங்கு தமிழ் இலங்கை தமிழ் எடுத்தாளப்படும்,அந்த வகையில் சொல்லப்படுகிறது என்று நினைக்கிறேன்.
இங்கு President ஐ அதிபர் என்று தான் சொல்கிறார்கள்.