எனக்கு எப்போதும் வானொலி கேட்பது பிடித்தமான விஷ்யங்களில் ஒன்று.அறையில் இருக்கும் போது வானொலி ஓடிக்கொண்டு இருக்கும்.
ஏன்? இப்போது அலுவலகத்தில் இருக்கும் போது தமிழ் வானொலி கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன்.
தவறாமல் வானொலியில் செய்திகள் கேட்பது என் சின்ன வயதில் இருந்து தொடர்ந்துகொண்டிருக்கிறது.
சிங்கப்பூர் வந்ததில் இருந்து இங்குள்ள தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே ஆதரவு “ஒலி 96.8” தான்.இதன் சுட்டியை கொடுக்கலாம் என்று பார்த்தால் கடந்த 4 மாதங்களாக தூங்கிக்கொண்டு இருக்கிறது.அமெரிக்காவில் இருப்பவர்களால் ஒரு காலத்தில் பரவலாக கேட்கப்பட்டு வந்தது பிறகு ஏதோ பிரச்சனையால் அவர்களால் இணையம் மூலம் கேட்கமுடியவில்லை.
இன்று காலை சமையலை முடித்து லன்ஞ் பெட்டியில் சாப்பாடு வைத்துக்கொண்டு இருக்கும் போது,காலை நிகழ்ச்சி படைக்கும் “திரு” என்னும் திருச்செல்வி நகைச்சுவை சொல்பவர்களை பேசவிட்டு துணுக்குகளை ஒலிபரப்புவார்.அப்படி ஒன்று இன்று கேட்டது.
உரையாடல் அப்பாவுக்கும் பிள்ளைக்கும்.
அப்பா கொஞ்சம் பழைய கால ஆசாமி, தேவையில்லாமல் செலவு செய்வதை விரும்பாதவர்.அவரிடம் பல முறை மோதி நல்ல பெயர் எடுக்கமுடியாத பிள்ளை.
ஒரு நாள்...
அப்பா: டேய்! அந்த பானையில் உள்ள புளியை எடுத்து வேறு பானையில் போடு .
மகன்: சரிப்பா
மகன் அந்த வேலையை செய்து முடித்த பிறகு திடிரென்று ஒரு ஐடியா தோன்றியது.புளியை மாற்றும் போது பத்து விரல்களிலும் புளி ஒட்டிக்கொண்டு இருந்தது.அப்போது சாம்பார் வைக்க புளி கரைக்க முற்படும் போது கையில் இருக்கும் புளியை உபயோகித்து அப்பாவிடம் சொல்லி நல்ல பெயர் எடுத்துவிடலாம் என்று நினைத்து அப்படியே செய்தான்.
அப்பா வந்ததும் அவரிடம் அதைச் சொல்லி நான் ரொம்ப சிக்கனமாய் செய்துவிட்டேன் என்றான்.
அப்பாவிடம் இருந்து பளார் என்று அறை விழுந்தது.
ஏண்டா! பத்து விரலையும் ஒரே தடவையில் நனைத்தாய்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விரலாக நனைத்தால் பத்து நாளைக்கு வங்திருக்கும் அல்லவா? என்றாராம்.
இதெப்படி இருக்கு??
எழுதியதில் பிடித்தது என்று ஒரு பதிவைப்போடச்சொல்லி “காட்டாறு” சொல்ல்லியிருந்தாங்க .தலை என்று வேறு சொல்லியிருக்காங்க,போடாவிட்டால் எப்படி? :-)
சற்று முன் எழுதிய பதிவு,அதனால் இப்போதைக்கு இது தான் பிடிச்சிருக்கு.
தாமதித்ததுக்கு மன்னிக்கவும்.
5 comments:
//சற்று முன் எழுதிய பதிவு,அதனால் இப்போதைக்கு இது தான் பிடிச்சிருக்கு//
:))
நல்லாத் தான் சமாளிக்கறீங்க
வாங்க டுபுக்கு
முதல் வருகைக்கு நன்றி.
சமாளிப்பெல்லாம் சரியா கண்டுபிடிச்சீட்ட்ங்களே!! பயங்கரமான ஆளுங்க. :-)
ஹா ஹா ஹா....சூப்பர் அப்பா!
குமார் அண்ணாச்சி....நான் கேட்டதுக்காக எழுதிய உங்களுக்கு நன்றி சொல்ல மாட்டேன். :-) இது அழுகுணி ஆட்டம். நான் ஒத்துக்க மாட்டேன். இதுக்கு முன்ன எழுதின பதிவுகள் என்னாச்சி? 2007 துவக்கத்தில், அதாவது நான் வலையுலகுக்கு வந்த போது ஊக்குவித்து மறுமொழி கொடுத்த நீங்கள், இன்னக்கி சோம்பல் முறிப்பது போல் சத்தம் கேக்குது.
இப்போதைக்கு சர்வேசன் பதிவுல இந்த பதிவை சேர்த்து விடுறேன். சீக்கிரமா பழைய பெட்டிய தூசி தட்டி உங்க சூப்பர் பதிவை சொல்லுப்போடுங்க. ஆமா.... சொல்லிட்டேன்.
வாங்க காட்டாறு
இதுகெல்லாம் காரணம் டுபுக்கு தான்.
அவர் கண்டுபிடிச்சதை போட்டு உடைச்சிட்டார். :-)
உங்க கணக்குக்கு ஒன்று தானே போட முடியும்,இனி முடியாதே!! :-)
சின்ன புள்ளைய ஏமாத்திடீங்க... அடுத்த முறை வரும்.. வரணும். அப்போ... அப்போ பார்த்துக்குறேன்.
:-)
Post a Comment