பின்னூட்டம்.(Posting Comment)
நான் கணிணி பொறியாளன் அல்ல.அதனால் நான் கேட்கும் கேள்வி புரிந்தால் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய Templateயை எப்படி மாற்றினால் இந்த மாதிரி செய்யமுடியும்?
எப்போதும் போல் நாம் "Post Comment" சொடுக்கி அதில் தமிழில் பின்னூட்டம் இடுகிறோம்.இது Win XP, Linux உபயோகிப்பவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.ஆனால் win98,95 & Me வைத்திருப்பவர்களுக்கு eகலப்பை முதலியவற்றை உபயோகப்படுத்தி தான் பின்னூட்டம் இடமுடியும்.eகலப்பையில் கூட தமிங்கலத்தில்(phonetic முறையில்) அடிக்கமுடியவில்லை.என்னைப்போன்ற தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் இந்த தமிங்கல(phonetic) முறை தான் இப்போது கைகொடுக்கிறது. அப்படியில்லாமல் நமது வலைபூவிலேயே "ஒரு கட்டத்தில் தமிங்கலத்தில் அடித்து மற்றொன்றில் தமிழில் வருமாறு செய்து" (இது வரை சில வலைபூக்களில் பார்த்துள்ளேன்,நானும் உபயோகித்துள்ளேன்)அதற்கு கீழேயே "Post Comment" என்ற Button ம் வைத்துவிட்டால் மிக வசதியாக இருக்கும்.Cut & Paste வேலையும் குறையும்.
முடியுமா??
கணிணி வல்லுனர்களே! வாருங்கள்
5 comments:
இந்த மாதிரி சிலருடைய பதிவுகளில் இருக்கு. எதுன்றதுதான் 'சட்'னு நினைவுக்கு வரலை.
அதாவது வலைப்பக்கத்திலயே எழுத்துரு மாற்றி வசதியை எப்படிச் செருகுவது என்று கேட்கிறீர்களா?
அப்படியானால் எனது வலைப்பக்கத்தில் உள்ள வசதியைப் பாருங்கள். அதைத்தான் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் எனது பதிவொன்றில் பின்னூட்டமிடுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் தாருங்கள். உதவத் தயாராக உள்ளேன்.
பார்த்தேன் வசந்தன்.
இதைதான் எதிர்பார்த்தேன்.
உதவுங்கள்.
மரவண்டு கணேஷின் பழைய வலைப்பூவிலும் மதுமிதாவின் வலைப்பூவிலும் இவ்வசதி உண்டு. (ஆனா எப்படி செய்யறதுன்னெல்லாம் எனக்குத் தெரியாதுங்க :-))
நான் வேண்டுவதெல்லாம் இதுதான்.
பின்னூடம் இடுவதை சுலபமாக்கவேண்டும் அதுவும் 95,98 மற்றும் மில்லேனியம் உபயோகிப்பவர்களுக்கு.
உங்கள் வலைப்பூவில் phonetic முறையில் தட்டச்சு செய்யமுடிகிறது.அதுமுடிந்தவுடன் பெயரை பதித்தவுடன் ,"கருத்தை பதியை" சொடுக்கியவுடன் ,நான் தமிழில் தட்டச்சு செய்த விபரங்கள் Comment பெட்டிக்குள் போக வேண்டும். மறுபடியும் வெட்டு/ஒட்டு வேலை இருக்கக்கூடாது.
முடியுமா?
தங்கள் முயற்சிக்கு நன்றி.
Post a Comment