முந்தய பதிப்புகள் (1) (2)
இந்த Siteஐப் பற்றிய சிறிய முன் குறிப்பு.
பெயர்:துர்கா சிமின்ட்ஸ்
மதிப்பு:1 கோடிசொச்சம்(சரியாகத்தான் சொல்கிறேன் என்று நினைக்கிறேன்-எங்கள் ஒப்பந்தம் மட்டும்)
காலம்:28 மாதங்கள்இந்த சிமின்ட் ஆலைக்கு வேண்டிய கட்டிடங்களின் கான்கிரீட் வேலை மட்டும் எங்களுக்கு கொடுக்கப்பட்டது.
Mechanical வேலை BABA engineering என்ற கம்பெனிக்கும்
ஆர்கிடெக்சர் வேலை வேறொரு நிருவனத்துக்கும் கொடுக்கப்பட்டது.
Site வாழ்கையின் முதல் நாள்.
காலை 7 மணிக்கு சிற்றுண்டி முடித்துவிட்டு 7.15க்கு மகேன்திரா ஜீப்பில் கிளம்பினோம்.நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து சுமார் 8 K.M.கொஞ்சதூரம் தான் தார் சாலை அப்புறம் நம் கிராமத்துச்சாலை தான்.பாதி புழுதி ஜீப் உள்ளேயே திரும்பவரும்.
L&T-ECC siteகள் காலை 8 மணிக்கு வேலை ஆரம்பிக்கும்,முடியும் நேரம்....எனக்கு தெரிந்தவரை அதை நாங்களே முடிவுசெய்துகொள்ள வேண்டும்.இதைப்பற்றி பிறகு விபரமாக சொல்லுகிறேன்.
நான் போன சமயம் ஒரு 20 பேர் மட்டும் இருந்ததால் அனைவரிடமும் எங்களை introduce பண்ணிவைத்தார்கள்.சில பெரிய siteகளில் இது முடியாத காரியம் அதனால் போகப்போக நாமே நம்மளை தெரியப்படுத்திக்கொள்ளவேண்டும்.
Siteயில் இறங்கியவுடன் எங்களை வரவேற்றது "பொட்டல்காடு".ஆமாம் ரொம்ப தூரத்துக்கு மரம் என்ற ஒன்று கூட தென்படவில்லை.Lime stone rocks அங்கங்கே பூமியிலிருந்து துருத்திக்கொண்டு இருந்தது.இதைதவிர அந்த Siteயின் முதலாளி அவர்களுக்கு வேண்டிய அலுவலகத்தின் கட்டுமான் பணிகளை வேறு ஒரு குத்தகைகாரர் உதவியுடன் அப்போது தான் கட்ட ஆரம்பித்தார்கள்.
அப்போது எங்களுக்கு என்று இருந்தது ஒரு "Tent" தான்.அதில் ஒரு பெரிய மேஜை,சில நாற்காலிகள் மற்றும் வரைபடங்கள் மட்டும் தான்.முதல் நாள் என்பதால் அங்கிருந்த வரைப்படங்களை பார்த்து Siteயை பற்றி தெரிந்துகொள்ள சொன்னார்கள்.
பல வரைப்படங்களை பார்த்துக்கொண்டு வந்தபோது ஒரெ ஒரு கட்டிடம் மட்டும் என் கவனத்தை கவர்ந்தது.ஆமாம் நான் இதுவரை பார்க்காத உயரத்தை கொண்டது.அதன் விபரங்கள் பின்வருமாறு.
64 மீட்டர் உயரம்.50 மீட்டர் விட்டம் உள்ள ஒரு பெரும் கிணறுஇவ்வளவு பெரிய கான்கிரீட் கட்டடத்தை எப்படி கட்டுவார்கள் என்று யோசித்து யோசித்து அது தொடங்கும் வரை வியந்துபோனேன்.ஆமாம் நான் இங்கு பார்க்கும் கட்டிடங்கள் எல்லாமே பெரிது பெரிதாக இருந்தது.அதை கட்டும் விதமும் அலாதியாகத்தான் இருந்தது.
நாட்கள் ஆக ஆக நிறைய Staffs வர ஆரம்பித்தனர்.வேலையும் கொஞ்சம் சூடு பிடிக்கத்தொடங்கியது.
No comments:
Post a Comment