Friday, June 09, 2006

வெளிச்சம்

தினமும் காலை வேலைக்கு போகும்போது ஒலி வானொலி(தமிழ்) கேட்டுக்கொண்டு போவது வழக்கம்.அதுவும் திருமதி.கீதா படைப்பு என்றால் கொஞ்சம் சந்தோஷம் கூடும்.மிகச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டதாக கேள்விப்பட்டேன்.

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

நேற்று காலை "வெளிச்சம்" என்ற ஒரு நிகழ்சி போட்டார்கள். அதில் ஒரு வழக்குரைஞர் நிறுவனம் செய்த மோசடியை விலாவாரியாக சொல்லிப்படைத்த விதம் மிகவும் அருமை.அதைவிட அதைச் சொன்னவருடைய Modulation மிக நன்றாக இருந்தது.நான் கேட்ட வரை அவர்களின் தமிழ் ஆளுமையைத்தான் மிகவும் ரசித்தேன்.
அதை அவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பின்வருமாறு எழுதி அனுப்பினேன் ஆனால் அவர்களால் இந்த Fontஐ படிக்க முடியவில்லை என்றார்கள்.சரி என்று ஆங்கிலத்தில் மாற்றி அனுப்பினேன்.

என்ன Operating system/ Browser உபயோகிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

"திரு அழகிய பாண்டியன் அவர்களுக்கு
இன்று(8.6.06) காலை 7.50க்கு ஒலிபரப்பாகிய "வெளிச்சம்" நிகழ்ச்சியைப் பற்றி சில வரிகள்..

இந்த நிகழ்ச்சியை கேட்டு முடிந்தவுடன்..

அடடா என்ன அருமையான தமிழ், அதை எழுதியவருக்கும்,சொன்னவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

"அருமின் அருமின் ஆசை அருமின் ஈசனோடாயின் ஆசை அருமின்"என்ற சொற்றொடரின் வீச்சு நன்றாகவே வெளிப்பட்டது.(ரு வா? று வா? குழப்பமாக உள்ளது.)
பூனை இருக்கும் வீட்டில் தான் எலியும் குட்டி போட்டு வாழ்கிறது என்ற வார்தையும் உங்கள் நிகழ்ச்சிக்கு பலம் கூட்டியது.

வெகு நாட்கள் கழித்து ஒரு நல்ல, மனம் நிறைந்த நிகழ்சியை கேட்கவைத்தற்கு "ஒலி"க்கு என் மனமார்ந்த நன்றி.

வாழ்க வளர்க உங்கள் தமிழ் பணி.

இப்படிக்கு
வெங்கடேசன்."

ஒரு கூடுதல் தகவல்.இந்த வெளிச்சம் நிகழ்சிக்கா போடப்படும் விளம்பரத்தில் முதலில் பேசுவது நமது ஜனாதிபதி திரு அப்துல்கலாம் அவர்கள்."வெள்ளத்தனைய....என்று குரள் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்வார்.

இதை ஆடியோ Link போட அவர்களிடம் கேட்டுள்ளேன்.அவர்கள் கொடுத்தால் நீங்களும் அனுபவிக்கலாம்.

No comments: