Thursday, June 29, 2006

ஊருவிட்டு ஊருவந்து (1)

முந்தய பதிப்புகள்
கட்டுமானத்துறை (அறிமுகம்)
கட்டுமானத்துறை (அறிமுகம்-1)
தாச்சப்பள்ளி
தாச்சப்பள்ளி (அலுவலர்கள்)
தாச்சப்பள்ளி (Account Section)
ஊருவிட்டு ஊருவந்து

கட்டுமானத்துறையில் அதுவும் ஊர்விட்டு வேறு இடத்தில் வேலை பார்க்கும்போது இந்தமாதிரி பிரச்சனைகள் அடிக்கடி வரும்.அதுவும் அவர்கள் பேசுவது அல்லது நீங்கள் சொல்வது அவர்களுக்கு புரியாவிட்டாலும் பிரச்சனைதான்.இதனால் PR வேலையை ஒருவர் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.தாங்கள் வேலைப்பார்க்கும் இடத்துக்கு பக்கத்தில் உள்ள ஊரில் உள்ள பெரிய மனிதர்களுடன் நல்லுறவு வைத்துக்கொள்வார்கள்.முக்கியமாக அஞ்சல் அலுவலக அதிகாரி,போலீஸ் அதிகாரி மற்றும் ஊர் நாட்டாமை இவர்களுடன் தேவையான அளவு நட்புறவு வைத்திருப்பது நல்லது.இதில் கொஞ்சம் காசு போகும் ஆனால் நம்மைபோன்ற வெளி ஆட்களுக்கு ஒரு பிடிப்பு இருக்கும்.நம் மீது அனவசியமாக கை வைப்பதற்கு உள்ளூர்காரர்கள் யோசிப்பார்கள்.
இவ்வளவையும் ஒரளவு என் கம்பெனி செய்துவைத்திருந்ததால் அன்று ஒருவித அசம்பாவிதமும் நடக்காமல் தப்பித்தோம்.குறைந்த நாட்களிளே வேலை திரும்ப நடைப்பெறத் தொடங்கியது.
கட்டுமானத்துறை இடத்தில் எப்போதுமே 3 பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
1.தொழிலாளர்கள் சம்பளம்.
2.பெண்கள் பாலியல்.
3.வேலை பாதுகாப்பு.(இதைப்பற்றி தனியாக வேறொரு சமயத்தில் பார்கலாம்)

முன்னதைவிட பின்னது கொஞ்சம் அதிகம் தான்.அதற்கு முதல் காரணம் 90% ஆண்மக்கள் "Forced Bachelor"ஆக்கப்படுவது.அப்போ பெண்களுக்கு கிடையாதா என்று கேட்கிறீர்களா?அதற்கான ஆடுகளம் வேறு.அதில் நான் இப்போது விளையாடப்போவதில்லை.
இதை ஒரு ஆணின் கண்ணோட்டத்தில் பார்கிறேன்.அவ்வளவுதான்.
இவர்கள்(Supervisor,Engineers) பலர் ஆசைப்படுவது அங்கு வேலைசெய்யவரும் சித்தாட்களிடம்.ஏனென்றால்,இவர்களின் Power!!
ஒன்று, இவர்கள் மூலம் பணம் பட்டுவாடா பண்ணுவது,
இரண்டாவது, அவர்கள் வேலைக்கு இவர்கள் உத்திரவாதம் கொடுப்பது.
மூன்றாவது இவர்கள் நினைத்தால் அவர்களுக்கு சம்பளம் கூட போட்டுக்கொடுப்பது.
சிலசமயம் அந்தந்த ஒப்பந்தக்காரர்களே இந்த மாதிரி வேலைகளுக்கு உடந்தையாகவும் இருப்பது உண்டு.
இதற்கு மேலும் இதைப்பற்றி எழுத விருப்பம் இல்லை.இப்படியும் இதனுள் இருக்கிறது என்பதை எழுதவே குறிப்பிட்டேன்.மேலே போவோம்.
இப்படி போய்கொண்டிருந்த வேளையில்...எவ்வளவு நாள் தான் தாச்சப்பள்ளியையே பார்த்துக்கொண்டு இருப்பது என்று எண்ணி எங்கள் Senior site Manager உடன் சேர்ந்து கொண்டு பக்கத்தில் வேறொரு இடத்தில் வேலை செய்யும் சக Staffsஐ பார்த்து வர கிளம்பினோம்.இதுவும் L&T-ECC எடுத்திருக்கும் மற்றொரு வேலை தான்.
எங்கள் Site கிருஷ்ணா நதிக்கு இந்த பக்கம் உள்ளது என்றால் அவர்கள் Site கரைக்கு அந்த பக்கம்.நாட்டுப்படகில் தான் கடக்க வேண்டும்.
அந்த இடத்தின் பெயர் "வாடப்பள்ளி"
மறுபடியும், இன்னொறு ஞாயிறு.
ஆ.....!!!
அடுத்த பதிவில் தொடரும்.

No comments:

Post a Comment

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?