Sunday, June 04, 2006

போலீஸ் முகம்

இங்கு சிங்கப்பூரில் ஒரு TV நிகழ்ச்சி "குற்றப்பத்திரிக்கை" என்று ஒன்று போடுவார்கள்.
அதில் நடந்த குற்றங்களும் அதை துப்புதுலக்கிய விதமும் நாடக வடிவத்தில் போட்டுவிட்டு உண்மையான குற்றவாளியின் போட்டோவையும் போடுவார்கள்.

அதன் பக்கத்தில் அவர்களுக்கு கிடைத்த தண்டனையும் போடுவார்கள்.

இதில் என்ன அதிசியம் என்கிறீர்களா?

அவர்கள் "குற்றவாளி" என்று சந்தேக்கிற நபர்களை கூப்பிட்டு உட்கார வைத்து அவர்களுக்கே உரித்தான முறையில் விசாரனை நடக்கும்.கொஞ்சமும் வன்முறை கிடையாது.

இதே நமது TVயில் வந்தால்,மனித நேயம் காண்பிக்கப்படாது.அடி உதை மட்டும் கொஞ்சம் விவரமாக காண்பிக்கப்படும்.

ம்ம்.. இப்போ அதுக்கென்ன??

போலிசை உங்கள் நண்பனாக காண்பித்தால் பொதுமக்கள் உங்களை நம்பி தைரியமாக விபரங்கள் கொடுக்க முன்வருவார்கள்.இது இங்கே மிகச்சரியாக கையாளப்படுவதாக நம்புகிறேன்.பொது மக்களும் அதற்கு தகுந்தார் போல் நடந்துகொள்கிறார்கள்.

இதெல்லாம் உங்களை மாதிரி சின்ன ஊருக்கு தான் சரிப்படும் என்று சொல்லாதீர்கள்.

நீங்கள் பார்பது,கேட்பது எல்லாம்தான் உங்களை வழிநடத்துகிறது.

பொது ஊடகங்கள் மற்றும் போலீஸ் துறை சேர்ந்து ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கவேண்டும்.

நல்ல விஷயங்களை மட்டும் காண்பித்து வந்தால் மக்களுக்கும் போலிஸ்க்கும் மத்தியில் ஒரு நல்ல உறவு ஏறபட வாய்ப்புள்ளது.

யோசியிங்கள்.

No comments: