1982 முதல் காலாண்டு சமயம் இங்கிருந்து நேர்கானலுக்கு அழைப்பு வந்தது.என்னைப்போல் நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள்.அப்போதும் இப்போதும் அது உள்ள இடம் மிக பிரசத்தி பெற்ற MGR ராமாவரம் தோட்டத்திற்கு சற்று தள்ளி உள்ள "ஒரு" தூணில் மேல் கட்டப்பட்ட Office.இது Chennaiக்கு ஒரு Icon.இந்த மாதிரி கட்டிடம் சென்னையில் வேறு எங்கும் இல்லை.
இந்திய கட்டுமானத்துறையில் இன்றும் இவர்கள் பங்கு மிக மிக அதிகம்.
என்னுடைய ஞாபகம் சரியாக இருந்தால்,அப்போது 2வது மாடியில் Accounts, 3வது மாடியில் Chennai Regional Office & 4வது மாடியில் ECC head office.மற்ற விபரங்களுக்கு இங்கே தட்டவும்.
ஆனால் இன்று Regional Office இடம் பெயர்ந்து அணணா சாலைக்கு போய்விட்டது.
1980 ஆரம்பத்தில் ஆந்திராவில் நிறைய Cement plants கட்டுவதற்கான ஒப்பந்தம் ECCக்கு கிடைத்தது.அப்போது சென்னை Regionக்கு இருந்த manager ஒரு Military Return.கொஞ்சம் Strict.அவருக்கு Hair cutting கூட சரியாக இருக்கவேண்டும்.
இவருக்கு இளைஞர்களை மிகவும் பிடிக்குமாதலால் நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
Diploma படித்தவர்களுக்கு "Diploma Engineer Trainee"என்று 3 வருடங்களும்,Degree படித்தவர்களுக்கு 1 வருடமும் Training கொடுத்து பிறகு நிரந்தர பணியார்களாக ஏற்றுக்கொண்டார்கள்.
கொஞ்ச நாட்கள் சென்னை அலுவலகத்தில் தங்கி Work Contactsஐ பற்றி தெரிந்து கொள்ளச்சொன்னார்கள்.இப்போது Senior Vice President ஆக இருக்கும் திரு K.V.Rengasamy அவர்கள் தான் என்னுடைய முதல் ECC அதிகாரி.அருமையான மனிதர்.நல்ல ஞாபகசக்தி உள்ளவர் என்று கேள்விப்பட்டேன்.
போன Januaryயில் சென்னைக்குப் போன பொழுது ஒரு பழைய ECC நண்பனை சந்திக்க நேர்ந்தது.அப்போது அவன் "தற்போது Companyயில் நிறைய வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது நீ திரும்ப வருவதானால் போய் KVRஐ போய் பார்" என்றான்.
அதற்கு நான் "அவருக்கு என்னை ஞாபகம் இருக்காது,busyயாக இருப்பார்.அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றேன்".
நிச்சயமாக இருக்காது.என்னை பல வருடங்கள் கழித்துப்பார்த்து பேர் சொல்லி கூப்பிட்டார் என்றான்.
இதே போல் என் மச்சான் பல வருடங்கள் கழித்து பார்க்கச் சென்ற பொழுது கூட அவனை Correctஆக அடையாளம் கண்டுகொண்டதாகச் சொன்னார்.இருந்தாலும். நான் அவரைக்காண போக முடியவில்லை.அடுத்த முறையாவது போய் பார்க்கவேண்டும்.
கொஞ்சம் தடம் தவறிவிட்டேன்...
திரும்ப வேலைக்கு சேர்ந்த சமயத்துக்கு போவோம்.
சென்னை office இன்னும் 2 வாரங்கள் இருக்க வேண்டும் என்றார்கள்.இந்த சமயத்தில் நேர்ந்த வேடிகையான சில விஷயங்களை...
அடுத்த பதிவில் பார்ப்போம்.
No comments:
Post a Comment