Friday, June 16, 2006

கட்டுமானத்துறை-அறிமுகம் (1)

Land aquaization,City Developement Authorityயின் அனுமதி,கட்டப்படும் இடத்தில் கீழே உள்ள நில அமைப்பு இப்படி பல வேலைகள் வெகு முன்னதாகவே ஆரம்பித்துவிடும்.ஆனால் நாம் ஒரு குத்தகையாளர் நிலையில் இருந்து பார்போம்.

வேலை ஆரம்பிப்பதற்கு முன்பு கிழே இருக்கிறவற்றை Ready பண்ணினால் பின்னால் வரும் பிரச்சனைகளில் இருந்து ஒரளவு விடுபடலாம்.

Siteயின் அளவை பொருத்து முதன் முதலில் வேலை இடத்தைச்சுற்றி Hoarding/ Fencing போடவேண்டும்.இது மிக முக்கியம்.வெளி ஆட்கள் உள்ளே வராமல் இருப்பதையும் மற்றும் உங்கள் கட்டுமான சாமான்கள் கானாமல் போவதற்க்கும் இது உதவியாக இருக்கும்.
Site உள்ளே வருவதற்கான சாலை வசதிகள்.தினமும் உங்களுக்கு தேவையான சாமான்கள் வருவதற்கும்,போவதற்கும் சாலை வசதி மிக முக்கியம்.இது அனேகமாக Owner கையில் இருக்கும் சில சமயம் ஒப்பந்தக்காரர்களிடம் விட்டுவிடுவார்கள்.
Drinage-தண்ணீர் வெளியேற சரியான வழி.

கழிவறைகள்:வேலை செய்யும் தொழிலாளர்களை கணக்கில் எடுத்துகொண்டு அதற்கு தகுந்தார்போல் கட்டவேண்டும்.

கொசு பெருக்கத்தை தடுப்பது:இது ஒப்பந்தக்காரரின் வேலையா என்று கேட்டால்,ஆமாம் தான் என் பதில்.கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்தினால் வியாதி குறையும் இதனால் ஆட்கள் விடுப்பு எடுப்பது குறையும்.வேலையும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கமுடியும்.கட்டுப்படுத்த சில வழிமுறைகள்
1.தண்ணீர் தேங்கவிடக்கூடாது.அப்படி தேங்குகின்ற இடங்களில் சிறிது டீசல் விடலாம்.
2.மாதம் 2 முறை புகை அடிக்கலாம்.

வேலை செய்பவர்களுக்கு தங்க இடம்.

ஒப்பந்தக்காரர் அலுவலகம்.இதில் Store,Tecnical Office and Time officeம் வரும்.

Time Office:கம்பெனி ஆட்களின் வருகை பதிவேடுகளை பராமரிப்பது,மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்வதற்கும் இருக்கும்.
Technical Office:இங்கு வேலை நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளையும்(Planning),துணை ஒப்பந்தக்காரர்களின் வேலை விபரங்களும் மற்றும் ownerயிடம் இருந்து வேலை முடித்தற்கான Bill போடும் வேலைகளும் நடக்கும் இடம்.ஒரு Project என்றால் பல விதமான Drawings வரும் அதில் சில சமயம் சில மாறுதல்கள் இருக்கும் அந்த மாறுதல்களை முறைப்படுத்தி வைப்பதும் அதை தேவையானவர்களுக்கு தெரியப்படுத்துவதும் இங்குள்ளவர்கள் வேலை.அதே சமயம் துணை ஒப்பந்தக்காரர்களின் Bill போடுவதும் இங்கள்ளவர்கள் வேலை.

Accounts:பெரும்பாலும் இவர்கள் வேலை பணத்தை கையாள்வதிலே போய்விடும்.சாமான்கள் வாங்குவது அதற்கான Paper Work,வேலை செய்பவர்களின் பண பட்டுவாடா மற்றும் Staff & Workers welfare இப்படி பல அவதாரங்கள் எடுக்கவேண்டும்.
இதுவரை சொன்னதெல்லாம் ஒரு மேலோட்டம் தான்...உள்ளே போகப்போக நிறைய விஷயம் இருக்கும்.அவ்வளவும் எழுதினால் Bore அடிக்கும்.

வாங்க தொன்டப்பாடு site உள்ளே போவோம்...அடுத்த பதிவில்.

No comments: