Monday, June 05, 2006

நீச்சல் அனுபவம்

நீச்சல் எனக்கு தண்ணிகாட்டிய அனுபவத்தை பார்கலாமா?

தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும் போது அவ்வப்போது பாட்டி வீட்டுக்கு(வடுவூர்) பள்ளி இறுதி விடுமுறையை கழிக்கச்செல்வதுண்டு.

அந்த மாதிரி ஒரு தடவை செல்லும் போது, காலை வேலையில், அந்த ஊர் நண்பர்கள் குளிக்க பக்கத்தில் உள்ள வாய்காலுக்கு கூப்பிட்டார்கள்.நீச்சல் தெரியாது என்றேன் அவர்கள் கற்றுத்தருவதாக சொன்னார்கள்.எனக்கு ஒரு பக்கம் ஆசை மற்றொரு பக்கம் பயம் ஏனென்றால் எனக்கு நீச்சல் சுத்தமாக தெரியாது.

விதி யாரைவிட்டது.அம்மாவிடம் சொல்லிவிட்டு ஆத்தங்கரைப்பக்கம் போய்விட்டேன்.

ஒரு சிலர் பாலத்தின்மேல் இருந்து ஆற்றில் குதித்தார்கள்,பலர் ஆற்றையே கடந்தார்கள்.நான் கரையில் இருந்த படியே எனது நண்பர்கள் அடிக்கும் நீச்சல் சாகசங்களை பார்த்துக்கொண்டு இருந்தேன்.கொஞ்சநேரம் கழிந்த பிறகு

"வாடா, கரையிலேயே உட்காந்திருக்கவா வந்தாய்?" என்றார்கள் நண்பர்கள்

சரி முயற்சி செய்வோம் என்று எண்ணி டிராயரை அவுத்து கரையில் வைத்துவிட்டு "கோவணத்துடன்" படிப்படியாக இறங்கினேன்.(கூர்ந்து பார்த்தால்!! கண் கூசுவதற்காக இந்த கலர் கொடுக்கவில்லை) :-))

கரையெல்லாம் ஒரே பாசியாக இருந்ததால் காலும் சரியாக படியவில்லை.ஏதோ ஒரு அசட்டு துணிச்சலில் இறங்கிவிட்டேன்.

என்னை ஒரளவுக்கு கூட்டிக்கொண்டு போய்விட்டு...

டேய் காலை அடிடா...கையை அடிடா என்று சத்தம் போட்டார்கள்.ரெண்டு அடி போட்ட பிறகு கொஞ்சம் தண்ணீர் மூக்குகுள் போக...அவ்வளவு தான்.என்னை வழிநடத்திய நண்பன் விட்டுவிட்டான்.அவனால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை.

அப்புறம் என்ன? கையை காலை அடித்து அடித்து ஆற்றோட்டத்துடன் போக ஆரம்பித்தேன்.

நண்பன் கத்த,பக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த மாமா பெண்கள் & மற்றவர்களுக்கு குரல் கொடுக்க,எல்லோரும் என்னைப்பார்பது தெரிந்தது ஆனாலும் நான் அவர்கள் பக்கம் போகமுடியவில்லை.

இப்படியாக சில வினாடிகள் போக நான் அங்கிருந்த கான்கிரீட் பாலத்தின் கீழே ஆட்றோட்டத்துடன் போய் கொண்டிருந்தேன்.அப்படி போய்கொண்டு இருக்கும் போது அதன் அடியில் இருந்த Steel Beam கைகெட்டும் தூரத்தில் இருந்ததால் டக்கெண்று அதை பிடித்துக்கொண்டு தொங்க ஆரம்பித்துவிட்டேன்.

உடனே பாலத்துக்கு அந்தபக்கத்தில் இருந்த ஒருவர் வந்து என்னை காப்பாற்றினார்.

கொஞ்ச நேரம் கரையிலே உட்கார்ந்திருந்தேன்.எல்லோரும் வந்து ஆசுவாசப்படுத்தியபிறகு..

சரி சரி ஆத்துக்கு போ என்றார்கள்.

எழுந்திருக்கலாம் என்று நினைத்து பாதி எழுந்த போது தான்..... கண்டது

என் கோவணத்தை ஆறு திருடிவிட்டது.

நீச்சலை இத்துடாவது விட்டேனா!! ஹ¤கும்..

வாங்க அடுத்த பதிவுக்கு.

3 comments:

 1. குமார், எனக்கும் வடவூரில் நீச்சல் கத்துக் கொள்ள சென்ற அனுபவம் உண்டு. ஆனால் கோவணம் கட்டிக் கொண்டு நீச்சல் பழக போன அனுபவம் இல்லை.
  வருத்தமான விசயம், இன்னும் எனக்கு நீச்சல் தெரியாது.

  ReplyDelete
 2. ஆஹா, நம்ம அனுபவம் அப்படியே உங்களுக்கும் நடந்திருக்கிறதே!

  நாம கோமணம் எல்லாம் கட்டுவது இல்லை, டவுடர் பாண்டி தான்.

  தாமிரபரணி ஆற்றில் முங்கி முத்தெடுக்க இருந்தவனை என் அத்தை மகன் தான் தலை முடியை பிடித்து தூக்கி வெளியே கொண்டு வந்தான், வீட்டில் சொன்னால் நாலு அப்பு அப்புவாங்கன்னு பயந்து சொல்லலை.

  அப்புறம் ஒரு முறை மரத்திலிருந்து தாவி எல்லோரும் குதிக்க நானும் முயற்சிக்க, கால் கிளையில் தடுக்கி தரையில் விழுந்து, மண்டையில் சரியான அடி.

  ஆனா அந்த அடி விழுந்த பின்னர் தான் படிப்பு மண்டையில் ஏறத் தொடங்கிச்சு :)

  தொடரட்டும் உங்க வாழ்க்கை அனுபவங்கள், படிக்க நான் இருக்கிறேன்.

  ReplyDelete
 3. நல்ல சிரிப்பு :-)

  அதுவும் எல்லாப் பையன்களும் குதித்துக் கொண்டு தண்ணீரில் விளையாடும் போது நாமும் சமாளித்துக் கொள்ளலாம் என்று ஆர்வம் வந்து விடும். எனக்கும் ஒரு குட்டி அனுபவம் உண்டு.

  அன்புடன்,

  மா சிவகுமார்

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?