Thursday, June 08, 2006

L&T-ECC-ஆந்திரா(1)

இதற்கு முந்தைய பதிவுக்கு இங்கு சொடுக்கவும்

ரயில் மறுநாள் காலை மணி 4.15க்கு குண்டூர் வந்துசேர்ந்தது.
பாதி தூக்கதில் வெளியில் வந்து பஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்து அங்குள்ள Information Counterயில் நாங்கள் போகும் ஊருக்கு எப்போது பஸ் உள்ளது என்று கேட்டு பதில் வாங்க முடியாமல் "ஙே" என்று முழித்துக்கொண்டு இருக்கும்போது,ஒரு தமிழ்காரர் உதவினார்.அவர் மூலம் எங்களுக்கு முதல் பஸ் 7.15க்கு தான் என்று தெரிந்தது.
அதற்குள் பசிக்க ஆரம்பித்தால் காலை 5 மணிக்கெல்லாம் திறந்திருக்கும் Hotel ஐ பார்த்து நகர்ந்தோம்.

ஒரு வழியாக நாங்கள் ஏறும் பஸ் ஐ கண்டுபிடித்து பாஷை புரியாமல் மணி 11.40க்கு "தொன்டப்பாடு"(Dondapadu) வந்துசேர்ந்தோம்.சிகப்பு கலர் பஸ்,இன்ஜியுடன் கூட மொத்த பஸ்சும் சத்தத்துடன் இருந்தது.காட்டு மிருகங்கள் தவிர மற்றவையுடன் பயணம் செய்ய கொடுத்து வைத்திருக்கவேண்டும்.முதன் முதலில் ஆந்திராவின் "சுருட்டு"ன் மகிமையை தெரிந்துகொண்டேன்.தப்பாக புரிந்துகொள்ளாதீர்கள்,நான் குடிக்கவில்லை.அங்கு "No Smoking" யெல்லாம் அப்போது அவ்வளவு செல்லுபடியாகவில்லை.இப்போது எப்படி என்று தெரியவில்லை.

மிகச்சிறிய ஊர்,நாங்கள் பேசிய யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை.நாங்களே ஆங்கிலத்தில் அரை குறை தான் அதுவும் அவர்களுக்கு புரியவில்லை.
பிறகு Post Office ஞாபகம் வந்து அங்குள்ள அதிகாரியிடம் விஜாரித்த போது,"வெளியில் காத்திருங்கள்,உங்கள் ஜீப் வரும்" என்றார்.எங்களுக்கு உயிர் வந்தது.
ரயில் நிலயமும் இருந்தது ஆனால் நாங்கள் ஒரு தடவைகூட உபயோகப்படுத்தியது கிடையாது.ஏனென்றால் Bus வசதி மிக அதிகம் மற்றும் பயண நேரமும் குறைவு.அதனால் அனைவரும் பஸ்சில் போவதையே விரும்பினார்.

சிறிய ஊர் என்பதால் எல்லாமே மிகவும் குறைவாகத்தான் இருக்கும். காய்கறி கடைகள்,Hardware கடைகள்,ஹோட்டல்,சினிமா தியேட்டர் எல்லாமே Limitஆக இருந்தது.Entertaimentக்கு வழிகிடையாது.குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அங்குள்ள வெய்யில் கடுமையை காரணம் காட்டி நிறைய பீர் குடித்தார்கள்.அப்போது 1 பாட்டில் 11ரூபாய் என நினைக்கிறேன்.புதிதாக வீட்டை விட்டு வெளியில் வந்து கட்டுபாடு இல்லாத நிலையில் பல இளைஞர்கள் துணிகரமாக இறங்கிப்பார்தார்கள்.மீண்டார்களா என்று தெரியவில்லை.

அந்த கால கட்டத்தில் கிடைத்த வேலைகள் அவ்வளவும் வானந்திர பகுதிகளில் தான் இருந்தது.அதற்கு காரணமும் உண்டு.பல வேலைகள் மிகப்பெரிய Projects, அதுமட்டுமில்லாமல் அதனால் உண்டாகும் தூய்மைக்கேடு மக்களை பாதிக்கக்கூடாது என்பதால் சற்று தள்ளியே இருக்கும்.இந்த மாதிரி இடங்கள் என்பதால் Companyம் வேலை செய்பவர்களுக்கு பல வசதிகளை செய்துகொடுத்தது.
அவற்றில் சில


  1. Mess-சில பேர் கட்டாயா பிரம்மச்சாரியாக இருந்தார்கள்.சிலர் நிஜமாகவே பிரம்மச்சாரி-என்னைப்போல்(அப்போது) இருந்ததால் சாப்பட்டுக்கு வேண்டிய பாத்திரங்கள்,Cook,உதவியாளர்கள்,இடம் முதலியவற்றை Comapny ஏற்பாடு செய்து கொடுத்தது.மற்றபடி வேண்டிய மளிகை சாமான்கள் எல்லாம் Staffs பார்த்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மாதம் ஒவ்வொருவர் என்று மாற்றி மாற்றி பார்க்கவேண்டும்.காலை டிபன்,மதியம் சாப்பாடு & இரவு டிபனுடன் ஏதாவது அரிசி சாதம் இருக்கும்.மாதக்கடைசியில் செலவைப்பார்த்து பகிர்ந்துகொள்வோம்.மாதம் ரூபாய் 110யில் இருந்து 200 வரை வரும்.

  2. Sports: வியாடுவதற்காக கிரிகெட் கிட்,டேபிள் டென்னிஸ்,Batminton என்று தேவையானவற்றை வாங்கி கொடுத்தார்கள்.
  3. Recreation: மாதம் ஒரு முறை படங்கள் பார்க்க Video போடுவோம்.2 மாதங்களுக்கு ஒரு முறை ஏதோ ஒரு Party நடக்கும்.தண்ணி பார்டிகளுக்கு கொண்டாடம் தான்.என்னை மாதிரி ஆட்களுக்கு நாயிடம் தேங்காய் கொடுத்த கதைதான்.எங்களுக்கு Mazzaவும் snacksம் தான்.
  4. தங்க வசதி: Dormitory type யில் ஒரு சத்திரத்தை siteயில் கட்டினோம்.32 அறைகள்.பெரிய ஆட்களுக்கு தனி ரூம் மற்றவர்களுக்கு இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.Mess இதிலே அமைத்திருந்தால் பிரச்சனை இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
    இப்படி பல...
    பலருக்கு வீட்டு நினைவே வராது.
    சரி ,இனிமேல் உண்மையான கட்டுமானத்துறை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    பொருத்துக்கொள்ளுங்கள் அடுத்த பதிவு வரை..

No comments: