Friday, June 23, 2006

தாச்சப்பள்ளி (அலுவலர்கள்)

முந்தய பதிப்புகள்
கட்டுமானத்துறை (அறிமுகம்)
கட்டுமானத்துறை (அறிமுகம்-1)
தாச்சப்பள்ளி

இந்த Site எங்கள் அலுவலகத்தின் பணியாளர்களின் அமைப்பை பார்ப்போம்.
Resident Engineer - திரு சேகர்.இவர் தான் தலைவர்.மொத்த Siteம் இவர் கீழ்தான் இருக்கும்.1985இல் ஆஸ்திரேலியா போனார்.இப்போதும் அங்குதான் உள்ளாரா என்று தெரியவில்லை.
Planning Engineer - திரு ஞானசேகரன்-இவர் இன்றும் அந்த கம்பெனியில் தான் இருப்பதாக கேள்விப்பட்டேன்.பெங்களூர் Airport siteயில்.இவரின் கீழ்
Asst Planning Engineers-S.R.பாண்டியன்,
S.அருனாச்சலம்-Clients Billing
நான் - ஒப்பந்தக்கார்களின் சம்பந்தமாக உள்ள விஷயங்கள்.
Site Senior Engineers சிலர்இவர்களின் கீழ் Assistant Engineers.
கம்பெனியின் கீழ் உள்ள தொழிலாளிகள் சிலர் இந்த Assitant Engineersக்கு உதவுவார்கள்.

Site Senior Engineers பொதுவாக 3 அல்லது 4 கட்டிட வேலைகளை மேற்பார்வையிடுவார்.இவருடைய வேலை பொதுவாக அந்தந்த கட்டிடங்கலுக்கு வேண்டிய சாமான்களை கொடுப்பது,கொடுக்கப்பட்டுள்ள கால வரையரைக்குள் கட்டிடங்களை முடிப்பதும் ஆகும்.மற்றும் வரைப்பட பிரச்சனைகளையும்,துணை ஒப்பந்தக்காரர்களின் பிரச்சனையை இவர் தான் களையவேண்டும்.மொத்தத்தில் நிறைய பொருப்பு மிகுந்த பதவி.
Assitant Engineers: இவர்கள் வேலை வரைப்படத்தில் உள்ள மாதிரி கட்டுமான வேலை செய்யப்படுகிறதா என்று மேற்பார்வை இடுவது.இப்படி எழுதுவது சுலபமாக இருந்தாலும் நேரடியாக நாம் ஈடுபடும் போதுதான் அதன் கஷ்டம் தெரியும்.உதாரணத்திற்கு ஒரு சின்ன Beamயில் போடமுடியாத அளவுக்கு கம்பியை காண்பித்திருப்பார்கள்.நிறைய விபரங்கள் விடுபட்டிருக்கும்.இவைமட்டும் அல்லாமல் கான்கிரீட் போடுவதற்க்கு முன்பு Electrical & Mechanical ஆட்களுக்கு வேண்டிய ஓட்டைகள் விடப்பட்டுள்ளனவா என்று பார்க்கவேண்டும்.நான் இதுவரை பார்த்த அவ்வளவு Projectஇலும் வரைப்படம் முழுவதுமாக இருந்ததில்லை.நடக்க நடக்க பல மாறுதல்கள் வந்துகொண்டு இருக்கும்.

Carpentry Workshop:இதற்கு என்று Foreman இருந்தார்கள்.பல வேலைகளில் இவர்கள் வேலையும் மிக அத்தியாவசியமான ஒன்று.
Siteயில் உள்ள வண்டிகளை பழுது பார்க்கவும்,Mixer Machine சரியான இடத்துக்கு கொண்டுசெல்ல, பழுது பார்க்க ஒரு Maintanence Workshopம் அதில் சில Staffsம் இருந்தார்கள்.
கரன்ட் சமாச்சாரங்களைப் பார்க்க ஒரு Engineerம் அவர் கீழே சில Electriciansம் வேலைப் பார்தார்கள்.
மேலே சொன்னவர்கள் எல்லோரும் "Technical Staffs" என்ற அமைப்பின் கீழ் வருவார்கள்.Project பெரிதாக இருந்ததால் Peak சமயத்தில் சுமார் 60வது Staffs இருந்தோம்.
அடுத்தது Account Section.....அடுத்த பதிவில்.

No comments: