Sunday, June 18, 2006

இன்று தந்தையர் தினம்.

சுமார் 8வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் இதே தினம் மாலை தமிழ் வானொலி கேட்டுக்கொண்டிருந்த போது

"தந்தையர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவிப்பவர்கள் எங்கள் தொலைபேசி எண்ணை அழைக்கலாம்"என்று DJ அழைப்புவிடுத்தார்கள்.

பலர் அழைத்தனர்,வாழ்த்து தெரிவித்தனர்.

அதில் ஒருவர்,நம்மூரில் இருந்து வந்த தொழிலாளி போலும்.

ரேடியோ:வணக்கம்

நம்மவர்:வணக்கம்.

ரேடியோ:உங்க பெயரைச்சொல்லுங்க

நம்மவர்:முனியாண்டி

ரேடியோ:நன்றி திரு முனியாண்டி,தந்தையர் தின வாழ்த்துக்காக அழைத்திருக்கிறீர்கள்.உங்கப்பாவுக்கு என்ன வாழ்த்து சொல்லப்போகிறீர்கள்?

நம்மவர்:அவருடைய தந்தையின் பராக்கிரமங்களையும் அவர் எங்கிருந்தாலும் நாங்கள் என்றும் மறக்காமல் இருக்கவேண்டும் என்றார்.அவரும் எங்களை எப்போதும் போல் வாழ்த்தவேண்டும் என்றார்.

ரேடியோ:முனியாண்டி,நிச்சயம் உங்கள் அப்பா வாழ்த்துவார் என்று நம்புவோமே.சரி தற்போது உங்கள் அப்பா எங்குள்ளார்?சிங்கையிலா அல்லது ஊரிலா?இந்த நிகழ்சியை கேட்டுக்கொண்டு இருப்பாரா?

நம்மவர்:இல்லங்க!அவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றார்.


ரேடியோவிலிருந்து கொஞ்சநேரத்துக்கு சவுண்டே வரவில்லை. Shockயில் இருந்து விடுபட கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது போலும்.


அவ்வப்போது இந்த மாதிரி சுவையான நிகழ்சிகளும் நடைபெரும்.

3 comments:

நாகை சிவா said...

உண்மையிலே இது மிகவும் சுவையான நிகழ்ச்சி தான்.

Santhosh said...

மூணாவது பதிவு பாக்க முடியலைங்கண்ணா.. ஆனா நல்லாத்தான் நீந்தி இருக்கிங்க.

Unknown said...

இதே போல் இங்கு திருச்சி வானொலியிலும் நடந்த நினைவு...
கேட்ட போதே மனதுக்குக் கஷ்டமாயிருந்தது!!