Friday, June 16, 2006

கட்டுமானத்துறை-அறிமுகம்.

ஒரு கட்டுமான Site தொடங்குகிறது என்றால்

Owner/Consultant/Architect

Main Contractor

Sub Contractors

இந்த வரிசையில் தான் ஆரம்பம் ஆகும்.

Owner:இவருடைய தேவைகளை Architectயிடம் சொல்ல அதற்கு தகுந்த மாதிரி வரைபடங்கள் உருவாகும்.குறிப்பாக ஒரு "Shopping Complex"கட்ட வேண்டும் என்றால் எவ்வளவு மாடி,ஒரு மாடியில் எவ்வளவு சதுர அடி உபயோகத்துக்கு வேண்டும்.
எவ்வளவு கார் நிறுத்த இடம் ஒதுக்கவேண்டும்?சாப்பாட்டுக்கடைகளுக்கு இடம் உண்டா?அப்படியிருந்தால் அதற்கு எவ்வளவு இடம்?

இந்த விபரங்கள் இருந்தால் ஒரு Consultant தோராயமாக இவ்வளவு செலவாகும் என்று சொல்லமுடியும்.இதற்கு மேல் + or - ஆகும்.Buffer money கொஞ்சமும் தேவைப்படும்.
கட்டிட பணி நடந்து கொண்டியிருக்கும் போதே சில சிறிய மாறுதல்களை செய்ய நேரிடும் போது அதனால் விளையும் செலவுகளுக்கு இந்த பணம் உதவும்.சில சமயம் இதையும் மீறி செலவு ஏற்படும் அப்போது தான் Ownerக்கும் Consultantக்கும் பிரச்சனை உருவாகும்.இப்படி உருவானாலும் முக்கால் வாசி நேரம் அது ஒப்பந்தகாரர் தலையில்தான் வந்து விழும்.பல சமயங்களில் வேறொரு ஒப்பந்தம் போட்டு இதை சரிபண்ணுவார்கள்.

சரியான வரைபடங்கள் இருந்து,பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டால்,குறிப்பிட்ட நேரத்தில் வேலை முடிந்துவிட்டால் எல்லோரும் நல்ல Profitஐ எதிர்பார்கலாம்.எவவளவு தான் முன் ஜாக்கிரதையாக Plan செய்தாலும் நாம் கட்டிமுடிக்க வேண்டிய பணத்தைக்காட்டிலும் அதிகமாகத் தான் வரும்.இதற்கு பல காரணங்கள் இருக்கும்.

சிறந்த உதாரணம்:வீட்டைக்கட்டிப் பார் என்பதுதான்.கட்டுமான பொருட்களின் விலையேற்றம்.ஆட்களின் கூலி உயர்வு இப்படி பல விஷயங்கள்.அதனால் முதலில் சொன்னேன் --குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்துவிட்டாலே உங்கள் லாபம் நிச்சயம்.

Consultant:இவருடைய பங்கு ஒரு Projectயில் மிக மிக முக்கியம்.நான் கேள்விப்பட்ட வரை Designers ஒரு Projectஐ 2 விதமாகப்பார்பார்கள்.ஏனென்றால் இவர்கள் வருமானம் Project Costயில் %age.

ஒன்று Lump Sum மற்றொன்று Project Value படி.இவை இரண்டிலும் + and - points உள்ளது.வேலை சூழ்நிலைக்கு தக்கப்படி முடிவுசெய்வார்கள்.ஒரு Project வேலை நடந்துகொண்டு இருக்கும் போது நிறைய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்தால் அந்த குத்தகையை value படி போடுவார்கள்.

ஒரு Projectக்கு தேவைப்படும் அத்தனை வரைப்படங்களையும் இவர்கள் தான் கொடுக்கவேண்டும்.
இங்கு தான் "Autocad"-(வரைப்பட) Software க்கு வேலை.

Main Contractor:

Owner & Consultant பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அந்த வேலைக்கு தகுந்த Contractorகளிடம் Tenderகள் வரவழைக்கப்படும்.அதிலிருந்து சில சட்ட திட்டங்கலுக்கு உட்பட்டு ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.இங்கும் பல உப பிரிவுகள் உள்ளதால் அதையெல்லாம் நான் சொல்லப்போவதில்லை.இங்கு சொல்லப்படுவது எல்லாமே Basic தான்.

சில குத்தகைகள் நேரடியாக ஒப்பந்தக்காரர்களுக்கும் கொடுக்கப்படுவதுண்டு.

சரி Owner,Consultant and Contractor ரெடியாக உள்ளார்கள்,அடுத்தது என்ன?

அடுத்த பதிவில்.

1 comment:

நாகை சிவா said...

//எவவளவு தான் முன் ஜாக்கிரதையாக Plan செய்தாலும் நாம் கட்டிமுடிக்க வேண்டிய பணத்தைக்காட்டிலும் அதிகமாகத் தான் வரும்.இதற்கு பல காரணங்கள் இருக்கும்.

சிறந்த உதாரணம்:வீட்டைக்கட்டிப் //


நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை. என்னை பொருத்தவரை ஒனர், மற்றும் Architect/engineer எண்ண ஒட்டங்கள் முதலில் இருந்து ஒத்து போக வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனை தான். என்னங்க நான் சொல்வது சரிதானே.