Thursday, June 15, 2006

நீச்சல் அனுபவம் (1)

நீச்சல் அனுபவம் (முந்தைய பதிப்பு)

கரையேறி வீட்டுக்கு போன பிறகு மாமா பெண்கள் அம்மாவிடம் போட்டுக்கொடுத்துவிட
ஆஹா!!! அம்மா காட்டிய அன்பு

நீ போய்டினா உங்கப்பாவுக்கு யார் பதில் சொல்லுவது?என்று சொல்லி சொல்லி

செம மொத்து தான்.

என்ன செய்வது சில பேர் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதம் இப்படித்தான் அமைந்துவிடுகிறது.

"வலி" எனக்குதான்.

சரி 2 வது அனுபவம் இப்படி

புன்டரிகுளம்(நாகப்பட்டிணம்)

திரும்பவும் கோடைவிடுமுறை.இப்போது கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் தைரியமாக ஜெட்டியுடன் போனேன்.

இந்த தடவை கூப்பிட்டது எனது பள்ளி நண்பன் பிராபகரன் முருகேசன்.

குளம் என்பதால் தண்ணீர் ஓட்டம் கிடையாது.அப்படியே 3 படிகள் மட்டும் இறங்கி நீச்சல் அடிக்க முயற்சி செய்தேன்.

ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.மரியாதையாக கரையைவிட்டு வெளியேறினேன்.

3வது அனுபவம்.

இது நடந்த களம் மலேசியா.

1992.2வது அனுபவம் முடிந்து 17வருடங்கள் கழித்து நடந்தது.

அப்போது எங்கள் அலுவலகத்தில் உள்ளேயே ஒரு நீச்சல் குளம் இருந்தது. திரும்பவும் நீச்சல் ஆசை வந்தது.

இங்கிருக்கும் காலத்திலாவது ஒழுங்காக நீச்சலை கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்து அதற்கான வேலையை தொடங்கினேன்.


முதல் 2 நாட்கள் பக்கத்தி உள்ள சுவற்றின் பிடியை பிடித்துக் கொண்டு நீச்சல் அடிக்க முயற்சி செய்தேன்.ஏதோ கொஞ்சம் வருவதுபோல இருந்தது.

சரி நீச்சல் அடிக்க வந்துவிட்டது என்று எண்ணி அங்கிருந்த எங்கள் cookயிடம்,வந்து பார்

என்று சொல்லி ஒரு முனையில் இருந்து ஆரம்பித்தேன்.

இத்தனைக்கும் அந்த நீச்சல் குளம் வெறும் 10மீட்டர் நீளம் தான்.

நடந்தது என்ன?

அடுத்த பதிவில்.

No comments: