Saturday, June 10, 2006

Seven இன் Eleven

நேற்று இரவு வெளியில் போகும் போது இன்டெர் நெட் கம்பெனிக்கு பணம் கட்டவேண்டிய ஞாபகம் வந்தது.

Billஐ எடுத்துக்கொண்டு கட்டவேண்டிய Machine பக்கம் போனால் அங்கு கூட்டம்.

சரி இங்குள்ள Seven Eleven கடையில் கூட கட்டமுடியும் என்பதால் அங்கு சென்றேன்.நல்ல வேலை அவ்வளவு கூட்டம் இல்லை.

Billஐ கொடுத்தவுடன் கடைக்காரர் எவ்வளவு கட்ட விரும்புகிறீர்கள் என்றார்.செலுத்த வேண்டிய பணத்தை Installmentஇல் செலுத்த முடியும் என்பதால் அப்படி கேட்டார்.

முழுவதும் என்றேன்.

பில்லில் இருந்த Bar Codeyயை scan செய்தார்.

Dispaly யில் வந்தது இது தான்

"Foldable Mountain Bike $69.90"

நான் கட்டவேண்டியதோ 15.75 வெள்ளி அதுவும் இன்டெர்னெட்க்கான காசு.

கடைசிவரை அந்த கடைக்காரருக்கு ஏன் இப்படி காண்பிக்கிறது என்று புரியவில்லை.பல தடவை முயற்சித்தும் பலனில்லாமல் கை வழியாக amountயை புகுத்தி பணம் கட்டவைத்தார்.

ஏதோ Software Bug போல

2 comments:

கோவி.கண்ணன் said...

குமார்,
சாப்ட்வேர் மனிதர்கள் எழுதுவது தானே, நிச்சயம் தவறு இருக்கும், ஆனானப் பட்ட முஸ்தபாவில் கூட ஒரு முறை ஏதோ 5 வெள்ளி பெறுமானம் உள்ள பொருள் வாங்கியபோது, அதற்கு பதிலாக கார்ட்டன் தோஃட்டி அன்ட் சால் என்று 17.50 வெள்ளிக்கு பில் போட்டு கொடுத்துவிட்டார்கள், வீட்டிற்கு சென்றுதான் கவனித்தேன். பின் நேரமின்மை காரணமாக அவர்களிடம் தெரிவிக்கவில்லை.

வடுவூர் குமார் said...

திரு கோவி.கண்ணன்
இனிமே இதைவேறு பார்க்க வேண்டுமா?
நன்றி.