Monday, July 03, 2006

திரு.சங்கரராமன் (சிங்கை)


இவரை நான் அறிமுகப்படுத்த எனக்கு வயசு போறாது, இருந்தாலும் சிங்கப்பூரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் இவர் தான். இத்தனைக்கும் இவர் என் தூரத்து உறவினர்.

என்னுடைய முந்தைய பதிவுகளில் ஒன்றான "கணிணி அனுபவங்களில்" இவரை 65 வயது இளைஞர் என்று குறிப்பிட்டிருந்தேன்.
சிங்கப்பூர் சுற்றிப்பார்க்க வந்த காலத்தில் இவர் கொடுத்த ஆலோசனைகள் பெரிதும் கைகொடுத்தது.இத்தனக்கும் அது தான் முதல் தடவை நாங்கள் ஒருவரை ஒருவர் பார்பது.கேட்காமலே எங்களது தேவைக்காக சில்லரை காசுகளை கொடுத்தது (அப்போது பஸ்களில் கடவுச்சீட்டு வாங்க சில்லறை மிகவும் தேவைப்படும்),எப்படி போகவேண்டும்,திரும்பும் போது எப்படி வந்தால் நல்லது என்ற Directions மிகவும் உபயோகமாக இருந்தது.ஒரு புதியவர்களிடம் நடந்துகொள்வது போல நடக்காமல் அடுத்தவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கியிருக்கும் "ஒரு நல்ல மனிதர்".

இவர் சிங்கப்பூர் வந்தது 1951-ஏப்ரல் 24, அதுவும் நாகப்பட்டினத்தில் இருந்து பினாங்கு வரை கப்பலில்.7 நாட்கள் பயணம் அதன் பிறகு ரயிலில் சிங்கப்பூர் வந்தார்.

பலரைப்போல் இவரும் பல இடங்களில் வேலைப்பார்த்து தனது Retirmentயை போலீஸ் துறையில் முடித்தார்.

திரு லீ குவான் யூ (இப்போது மதியுரை அமைச்சர்-சிங்கப்பூரின் சிற்பி) சொன்னது போல் "வாழ்நாள் கல்வி" என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.புதிது புதிதாக ஏதாவது கற்றுக்கொண்டும் செய்துகொண்டும் இருப்பவர்.இவர் மூலம் தான் கணிணி என் கை அருகே வந்தது.இவரால் முடிகிறது என்றால் ஏன் நம்மால் முடியாது என்ற எண்ணத்தால் பலதை நானும் கற்றுக்கொண்டேன்.இவருக்கே உரிய முகங்களில் "எழுத்தாளர்" என்பதும் உண்டு.இவருடைய பல கட்டுரைகள் மற்றும் குழந்தைக் கதைகள் உள்ளூர் பத்திரிக்கையான "தமிழ் முரசு"வில் வந்துள்ளது.
கடந்த ஞாயிறு எனது வீட்டுக்கு வந்தபோது "தமிழ்மனம்" மற்றும் "வலைப்பூக்களை" பற்றியும் எனக்கு தெரிந்ததை சொல்லியுள்ளேன்.

80 வயதை நெருங்கிக்கொண்டு இருக்கும் இந்த இளைஞரை நமது வலைப்பூக்களிலும் எதிர்பார்கலாம்.இவரைப்பற்றி நிறைய எழுதலாம் என்றாலும் அது அவர்மூலமாக வருவதன் மூலம் இளைய சமுதாயத்திற்கு பல நல்ல விஷயங்கள் தெரியவரும் என்ற நம்பிக்கை உள்ளது.

தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் இவரே எனக்கு ஆதர்சமானவர் .

என்னுடைய இந்த நிலமைக்கும் வளர்ச்சிக்கும் இவரும் இவர் குடும்பத்துக்கும் பெரிய பங்கு இருப்பதால்......இந்த பதிவை அவர்களுக்கு சின்ன காணிக்கையாக ஆக்குகிறேன்.


சில வருடங்களுக்கு முன்பு இவர் "Open Heart Surgery" செய்துகொண்டார், அதையும் நகைச்சுவையுடன் சொல்லும் இவர் தான் இறந்த பிறகு தன் உடலையே தானமாக தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார் என்பது பின்குறிப்பு.

5 comments:

 1. வாழும் உதாரணம்.

  ReplyDelete
 2. I am happy to read about my chittappa. I live in chennai-india and as i read this post i was moved by the narration.
  thanks and keep posting

  Murali

  ReplyDelete
 3. welcome Murali.
  உங்க சித்தப்பாவா?
  நல்லது.

  ReplyDelete
 4. That was wonderful to read about my Thatha. He is indeed a very bubbling and enthusiastic person. Like a younster, he showed me how to commute around singapore when i landed there to study in NUS. He is an inspiration to all of us in the family. Am really happy that u brought light to this "young lad" of our family. Thanx to you ! :)

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?