Tuesday, May 30, 2006

கணிணி அனுபவம்

முதன் முதலில் நான் கணிணிஐ நேரில் பார்த்தது 1990வாக்கில்,தனி Room, குளிர்சாதன வசதியுடன்.செருப்பை கயட்டி வைத்துவிட்டுத்தான் போகவேண்டும்.
அதை பயன் படுத்துவதற்கு என்று ஒரே ஒருவர்.
கனிணியைப்பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கொடுத்த பதில்கள் ஏனோ மண்டையில் ஏறவில்லை.புரியவும் இல்லை.

1995 ஜனவரி மாதம் சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு போகும் முன்பு,இங்கு எனது உறவினர் வீட்டில் ஒரு கனிணியை பார்த்தேன்...கைக்கு அருகில்,திறந்தவெளியில்!
65வயது இளைஞர்(இவரைப்பற்றி பிறகு எழுதுகிறேன்) அதை எனக்கு புரிய வைத்துக்கொண்டு இருந்தார். அவர் என்னுடைய CVஐ மாற்றியமைத்து அதை எனக்கு விளக்கிக்கொண்டு இருந்தார்.

இப்போதும் பெரிய கவர்ச்சி ஒன்றும் அதன்மீது வரவில்லை.அவருடைய பேரன் ஏதோ Game விளையாடிக் கொண்டிருந்தான்.எப்படி விளையாடுகிறான் என்றும் புரியவில்லை. "ஆ" என்று வாய் திறந்து பார்த்துக்கொண்டு இருந்தோம்.ஏனென்றால் வந்திருப்பது "social visit pass"யில் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்துவிட்டு கிளம்பவேண்டும்.Computer வாங்கமுடியும் என்ற நம்பிக்கையும் இல்லை,அவசியமும் ஏற்படவில்லை.

காலம் புரட்டிப்போட 3 மாதங்களுக்குள் வேலைக்காக சிங்கப்பூர் வரநேர்ந்தது.

அப்போது Site Officeயில் அதிக பட்சமாக 2 கணிணிதான் இருக்கும்.ஒன்று Admin Assistant உபயோகிப்பார் மற்றதை Quantity Surveyor உபயோகிப்பார்.இது Projectன் அளவைப் பொருத்து மாறுபடும்.


புதிதாக வந்த இடம்,வேலையை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதால் கணிணி பக்கம்கூட தலை வைத்து படுக்கவில்லை.ஆனால் எனது மலேசிய நண்பர் அதை அனாசயமாக உபயோகப்படுத்து வதைப் பார்த்தேன்.அவர் அதில் Mine Sweeper & Free Cell games விளையாடிக் கொண்டிருந்தார்.அவருக்கு அதைத்தவிர வேறு ஏதும் அவ்வளவாகத் தெரியாது என்பது பிற்பாடு தான் தெரிந்தது.அந்த Gamesஐ பற்றி சொல்லிக்கொடுத்தார்,அதுவும் ஓரளவே புரிந்தது.பிறகு அங்குள்ள Admin Assistantகளிடம் கேட்டுக்கேட்டு தெரிந்து கொண்டேன்.


எங்கள் கான்கிறீட் வேலை சில சமயம் மாலை ஆரம்பித்து இரவு முழுவது ஓடும்.அந்த மாதிரி சமயங்களில் நிறைய Spare time கிடைக்கும்.இந்த மாதிரி சமயங்களில் கணிணிஐ உபயோகிக்க கற்றுக்கொண்டேன்.பல நாட்கள் Games தான் விளையாடினேன்,அதற்கு மேல் போகத்தெரியவில்லை.

ஒரு நாள் அந்த Admin Assistant வீட்டுக்குப் போகும் போது.."நீ உபயோகப்படுத்திய பிறகு "Shut Down" செய்துவிடு" என்று சொன்னாள். நானும் சரி என்று சொல்லிவிட்டு,விளையாட ஆரம்பித்தேன்.ஆடிமுடித்த பிறகு...

தெரிந்துகொள்ள வாருங்கள் அடுத்த பதிவுக்கு.

5 comments:

 1. எழுதிக்கொள்வது: mayooresan

  அடடா என்ன இப்பிடி நடுவில விட்டிட்டீங்க.......

  16.11 13.7.2006

  ReplyDelete
 2. You have given good tips about about construction i am civil engineer intrested in knowing more and also want to forward your blogs to my friends how to send by email pl explain.

  Good job keep going

  ReplyDelete
 3. நன்றி நாகராஜ்
  தங்களுக்கு பதில், உங்கள் வலைபூவில் பின்னூட்டம் போட்டுள்ளேன்.
  எனது ஈ மெயில்க்கு வலது பக்கம் தொடுப்பும் கொடுத்துள்ளேன், பார்க்க.

  ReplyDelete
 4. //இப்போதும் பெரிய கவர்ச்சி ஒன்றும் அதன்மீது வரவில்லை//
  :-)
  ரிப்பீட்டு!!!

  கவர்ச்சி வராத வரை நீங்கள் பிழைத்தீர்கள்! இல்லீன்னா அது சொல்றத எல்லாம் நீங்க கேக்கணுமே; அதுக்குப் புரியற மொழியில் தான் நீஙக பேசணுமே!!:-))

  ReplyDelete
 5. வாங்க கண்ணபிரான்,
  இது, பசங்க வயசுக்கு வரமாதிரி செயற்கையாக ஏற்படுத்திக்கொள்கிற இயற்கையாகிவிட்டது.
  வருகைக்கு நன்றி

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?