Friday, July 21, 2006

சைவ முட்டையா??

உடல்நலம்,முட்டை,நாட்டுக்கோழி முட்டை
முட்டையின் முதல் பரிசமே ஏதோ பண்ன கொஞ்ச நாட்களுக்கு அந்த பக்கமே தலை வைக்காமல் இருந்தேன்.இருந்தாலும் அவ்வப்போது நான் சாப்பிடும் போது நண்பர்கள் சாப்பிடும் ஆம்லெட் வாசனை (இது என்னை அவ்வளவாக மயக்கவில்லை) அதன் மேல் அவ்வளவாக வெறுப்பு ஏற்பட வாய்பில்லாமல் பண்ணியது.
அன்று நடந்த சம்பவம் Mess உதவியாளர் மூலம் எல்லோருக்கும் சொல்லப்பட்டது.
"ஐய்யரே"என்ன இதுதான் உன் தைரியமா?ஏதோ முட்டை சாப்பிட ஆரம்பிக்கிறேன் என்றாயே?என்று எல்லோர் முன்னிலும் என்னுடைய தைரியத்தை பறைசாற்றினார்கள்.மானம் போனது.இள வயது இந்த மாதிரி சமயங்களில் வருமே "சுர்" என்று கோபம்.எனக்கும் வந்தது.ஆனால் வெளியே காட்டமுடியவில்லை.தவறு என் மீதுதானே.
ஏனென்றால் சொன்னவர் என்னைவிட பெரியவர்.
இந்த புகை உள்ளேயே சில நாட்கள் புகைந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் இன்னொரு நண்பனுடன் காலை மெது ஓட்டத்துக்கு தயாராக இருந்தேன்.அப்போது அவன் "இரு ஒரு முட்டை அடித்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லி முட்டையை எடுத்துக்கொண்டு வந்தான்.அவன் சாப்பிடுவதை பார்த்துகொண்டு இருந்தேன்.
மேலே சொன்ன புகை மறைந்து நெருப்பு வெளியில் வந்தது.
Mess பையன் உடைத்துக்கொடுக்க ஒரே மடக்கு
புளுக்கு.....
வெல்லத்தை வாயில் அடக்கிக்கொண்டு அன்று கொஞ்சம் வேகமாகவே ஓடினேன்.என்னுடைய உடல்நலம் என்னை அசைவமாக மாற்றிவிட்டது.
இது தவறா?
என்னைப்பொருத்த வரை உயிர் வாழஏதும் வழியில்லாத நிலையில்,கொஞ்சம் வழி முறைகளை மாற்றுவது சரியே.
நான் மாறியதால் இந்த முடிவா?
இல்லங்க! நான் கேள்விப்பட்ட ஒரு புராண கதையில் கூட ஒரு முனிவர் பஞ்ச காலத்தில் நாய் கறி கூட சாப்பிட்டிருக்கார்.நாம் அந்த அளவுக்கு இல்லை என்பதால்...முட்டை பரவாயில்லை என்று தோனுகிறது,எனக்கு.
மதம் சொல்லிகொடுத்த வழிமுறைகளை எப்போதும் தோள் மீது ஏற்றிக்கொண்டு சுமக்காமல்,தேவைப்படும் நேரத்தில் ஏற்றி இறக்கினால் பயணம் சுகமாக இருக்கும்.
அதற்காக கடலை கொள்ளை அடித்து விதம் விதமாக முழுங்குவதும்,நமது காலை நக்கிய மாட்டையும்,செல்லமாக முட்டிய ஆட்டையும் வேட்டையாடுவதும் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது.
நீ முட்டையிலே முழுங்குவ நாங்க வளர்ந்த பிறகு சாப்பிட்டா உனக்கு தப்பா தெரியுதா? என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது.
அவரவர் வாழ்கை, அது போகும் முறை, யாரும் யாருக்கு அறிவுரை சொல்லமுடியாது.
நான் முட்டை சாப்பிட்டது என்னுடைய உடம்பை என்னுடைய வேலைக்கு தகுந்த மாதிரி உருவாக்கிக் கொள்ளத்தான்(Survival).ஒரு அளவுக்கு தேறிய பின்பு கடந்த 10 ஆண்டுகளாக அதை தொடக்கூடவில்லை.
இப்படி சொல்லும் போது ஒரு விஷயம் ஞாபகத்து வருகிறது.
சிங்கையில் வேலை செய்யும் போது தினமும் வீட்டு சாப்பாடு தான்.வெளியில் சைவச்சாப்பாட்டுக்கு கொஞ்சம் அலைய வேண்டும்.இதைப்பார்த்த பலர் (சீனர்கள்)ஏன் வெளியில் சாப்பிடமாட்டாய் என்று கேட்பார்கள்.
அதற்கு நான் சைவம்.சைவச்சாப்பாடு வெளியில் கிடைப்பதில்லை என்பேன்.
"நீ எவ்வளவு காலமாக சைவம்" என்பார்கள்.
பிறந்ததிலிருந்து என்பேன்.
"உன் குடும்பத்தில் அவ்வளவு பேருமா"-என்பார்கள்
ஆமாம்.
"நான் கூட 6 மாதமாக சைவம்??" -என்பார்கள்.
சிலர் அசைவம் சாப்பிடாவிட்டால் தெம்பே இல்லாத மாதிரி உணர்வதாக கூறினார்கள்.
இப்போது நான் எவ்வளவு காலமாக சைவம் என்று எனக்கே தெரியவில்லை!!
செந்தழல் ரவி கேட்டிருந்தார்:முட்டை சைவமா அசைவமா?
பதில்:நாம் பிறக்கும் போது சைவமா அசைவமா என்று தெரிந்தால் இதற்கு பதில் சொல்லிவிடலாம்.எனக்கு தெரியவில்லை.

4 comments:

 1. இப்ப முட்டை சைவ உணவுலே சேர்ந்துருச்சு. அதனாலெ தயங்காம தின்னலாம்.

  ReplyDelete
 2. துளசி..
  சுலபமாக சேத்துட்டீங்க..:-))
  நன்றி.

  ReplyDelete
 3. மதம் சொல்லிகொடுத்த வழிமுறைகளை எப்போதும் தோள் மீது ஏற்றிக்கொண்டு சுமக்காமல்,தேவைப்படும் நேரத்தில் ஏற்றி இறக்கினால் பயணம் சுகமாக இருக்கும்.//

  ஆஹா.. அருமையான கருத்து. இப்படி எல்லாரும் இருந்துட்டா அப்புறம் கலவரம் ஏன் வருது?

  ReplyDelete
 4. நல்லா சொன்னீங்க குமார். உணவு முறை என்பது அவர் அவர்கள் தீர்மானிப்பது(குடும்ப வழக்கப்படி) அதை நாம் கேள்வி கேட்க முடியாது. இங்கு நான் சூடான் வந்த புதுசில் நீ ஏன் மாட்டு கறி சாப்பிட மாட்டாய் என்று ஒருவன் கேட்டான், அவனுக்கு விளக்கம் குடுத்தாலும் அவன் விதாண்ட வாதம் பண்ணும் டைப், அதனால் நான் அவனை திருப்பி கேட்டேன், நீ ஏன் பன்னிக் கறி சாப்பிட மாட்டாய் என்று, அது மதம் சம்மந்தப்பட்டது என்றான். அதே தான் எனக்கும் என்றேன். பய வாய திறக்கல.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?