3வருட ஆந்திர வாழ்கையை முடித்துக்கொண்டு அடுத்த வேலையிடத்துக்காக காத்திருந்த போது வந்தது ஆணை.வரும் வழியில் நான் விட்டுச்சென்ற தாம்பரம் பஸ் நிலயம் மேல் தளம் போடுவதற்காக தயாராக இருந்தது.3 வருடத்தில் அவர்களால் வெறும் சுவர் மட்டுமே எழுப்பமுடிந்தது.இன்றும் அந்த இடத்தை கடக்கும்போதும் கண் அந்த பக்கம் திரும்பாமல் இருக்காது.கொஞ்சம் கூட மக்கள் தொகைக்கு ஏற்றவாறு கட்டப்படாத பஸ் நிலயம் இது.
இந்த முறை சென்னைக்கு பக்கத்தில் இருந்த மறைமலை நகர்.இங்கு நாங்கள் கட்டயிருந்த கட்டிடம் "Butterfly Valve Project".இது அட்கோவிற்காக கட்டப்படயிருந்தது.இது ஒன்றும் அப்படி பெரிய Building இல்லை.ஒரு சாதாரண தொழிற்சாலை தான்.என்னுடைய முந்தைய Siteயின் Planning Engineer தான் இங்கு Resident Engineer.
சின்ன Site என்பதால் ஏதோ பாஸ் நம்மளை பூதக்கண்னாடி வைத்து பார்பது போல இருந்தது.அதுமட்டும் இல்லாமல் சாப்பாட்டுக்கு messயில்லாததால் நாங்கள் 3 பேர்கள் சேர்ந்து சமைக்கத்தொடங்கினோம்.ஒருவர் சமைத்தால் மற்றவர் காய்கறி வாங்கவேண்டும் மற்றவர் பாத்திரம் கழுவவேண்டும்.இப்படியே வாழ்கை ஓடிக்கொண்டிருந்தது.
மற்ற இருவரைப்பற்றி ஒரு சில வரிகள்.
1.திரு.நடராஜன்:இவர் Mechanical Foreman ஆக இருந்தார்.வேலை என்று வந்துவிட்டால் சோறு தண்ணி எதுவும் எதிர்பார்க்கமாட்டார்.கடுமையான உழைப்பாளி.பழகுவதற்கு அன்பான மனிதர்.நாங்கள் தனியாக இருந்து சமைப்பதை கேள்விப்பட்டு அவங்கம்மா வந்து கொஞ்ச நாள் சமைத்து போட்டார்கள்.இப்போது திருநெல்வேலியில் ஒரு பஸ் கம்பெனியில் (திருவள்ளுவர்) Mechanic ஆக இருப்பாதாக கேள்விப்பட்டேன்.
2.திரு.தங்கவேலு:மிக எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து தன் உழைப்பாலும் நேர்மையாலும் முன்னுக்கு வந்தவர்.இன்றும் L&T-ECCயில் Accounts துறையில் ஒரு சிறந்த நிலையில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
சாயங்காலம் வேலைமுடித்துவிட்டு வந்து தான் இரவுக்கு என்ன சாப்பாடு என்று முடிவு செய்வோம்.நாக்கு செத்துப்போனதால் ஒரு நாள் வெங்காய சாம்பார் செய்யலாம் என்று முடிவுசெய்து நானும் நடராஜனும் போய் காய்கறி வாங்கிவந்தோம்.தங்கவேலு தான் சமையல்.
சாதம் வடித்தாகிவிட்டது.சாம்பார் அடுப்பில் வெந்து நல்ல வாசனை மூக்கை துளைத்துக்கொண்டிருந்தது.சரி கொஞ்சம் கிளரலாம் என்று சாம்பாரை பார்த்துவிட்டு "கொஞ்சம் தண்ணீராக இருப்பதாக" சொன்னான்.ஒரு சொட்டு கைய்யில் விட்டு ருசி பார்த்து ஒகே என்று சொன்னான்.
நம்ம வீட்டில் தான் பொம்பளைங்க பேசும் போது சில உதவித்துளிகள் வந்துவிழுமே அப்படி வந்தது தான் இது.சாம்பார் தண்ணீராக இருந்தா கொஞ்சம் அரிசிமாவு கலந்துவிட்டு கொஞ்சம் கொதிக்கவிட்டால் சாம்பார் கெட்டியாகிவிடும் என்று சொன்ன ஞாபகம்.
"தங்கவேலு நம்மட்ட அரிசிமாவு இருக்கா? இது நான்.
2 நாளைக்கு முன்பு தான் வாங்கி அந்த வெள்ளை டப்பாவில் உள்ளது" பதில் நடராஜனிடம் இருந்து வந்தது.
"எவ்வளவு ஸ்பூன்"
"ஒன்றரை ஸ்பூன் தண்ணீரில் கலந்து போடு"
சாப்பிட்டோமா இல்லையா??
வாங்க அடுத்த பதிவுக்கு....பசிக்குது.
2 comments:
அதெப்படி சாப்பிட்டு இருக்க முடியும்? அது அரிசிமாவா இருந்திருந்தாத்தானே?
ஆஹா!!
பிடிச்சிட்டாங்க...
Post a Comment