இப்படி அப்படி ஒரு வருடகாலம் ஓடியிருந்தது.கட்டட வேலைகளும் சுருசுருப்பாக நடந்து கொண்டிருந்தது.பல விதமான வேலைகளும் அதற்கு உண்டான குத்தகைகாரர்களும் வந்திருந்தனர்.இரவும் பகலும் வேலை நடந்துகொண்டிருந்தது.
ஒரு நாள் நான் எங்கள் கட்டடத்தில் நின்று கொண்டு வெளியில் பார்த்துக்கொண்டு இருந்தேன்.ஒரே சத்தமாக இருந்தது.அதாவது பாட்டு சத்தம் மாதிரி.
Baba Erectors கம்பெனியின் ஆட்கள் ஏதோ ஒரு பெரிய அதிக எடையுள்ள சாமானை Chain Block வழியாக தூக்கி கொண்டிருந்தார்கள்.வேலைப்பளு தெரியாமல் இருக்க இந்த மாதிரி பாடுவது வழக்கம்.5 Chain block மூலம் ஒரு 15 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.முடியப்போகும் நேரம் திடிரென்று ஒரு பெரிய சத்தம்.ஆட்கள் கத்திக்கொண்டு அங்கும் இங்கும் ஓடுவது போல் இருந்தது.சில வினாடிகள் தான், அவர்கள் ஏற்றிக்கொண்டிருந்த அந்த சாமான் கீழே விழுந்து கிடந்தது.
நான் பார்த்த முதல் கட்டட விபத்து.
சிலருக்கு பலமாக அடிப்பட்டிருப்பது தெரிந்தது.அவர்கள் வண்டி, அவசரம் அவசரமாக ஏற்றிகொண்டு மருத்துவமனைக்கு விரைந்ததை பார்க்கமுடிந்தது.
இதற்கிடையில் விபத்து நடந்த இடத்தை போய் பார்த்தேன்.சில இடங்களில் ரத்தக்கரை,ஒரு சிலரை மற்றவர்கள் துணையுடன் அழைத்துச்சென்றார்கள்.அப்போது
ஒருவர் கையில் வெறும் Plastic பையுடன் ஓடிவந்தார். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை,இந்த இடத்தில் எதற்கு இந்த பை???
விபத்து நடந்த இடத்தின் ஒரு ஓரத்தில் கனுக்காலுக்கு மேல் துண்டுபட்ட காலை எடுத்துபோட்டுகொண்டு,திரும்ப அதை ஒட்டவைக்க முடியுமா என்று பார்க்க மருத்துவமனைக்கு ஓடினார்.
ஆமாம் இந்த விபத்து எப்படி நடந்தது?சின்ன அஜாக்கிரதை தான்.
அதாவது இந்த chain blockயில் இருப்பவர்கள்,தூக்கும் சாமானை சமானமாக தூக்க வேண்டும்.இதை கண்காணிக்கவேண்டியது அந்த மேற்பார்வையாளர்கள் பணி.அன்று ஒரு பக்கம் உள்ளவர்கள் பாட்டு பாடிக்கொண்டு மற்றவர்களை விட தாங்கள் செய்யும் வேலை உயர்ந்தது என்று காட்டிக்கொள்ள அவசரமாக தூக்கிவிட்டனர். அதனால் எதிரில் உள்ள Chain Blockக்கு அதிக Weight போய் அந்த சாமான் அறுந்துவிழுந்துவிட்டது.
சிலர் கை கால்களை இழந்தனர்.
இப்படி பலவித விபத்துக்கள் அவ்வப்போது நடக்கும்.
கட்டுமானத்துறையும் விபத்துகளும் ஒன்றோடு ஒன்று விபரீதமாக பின்னிப்பிணைந்திருக்கும்.
No comments:
Post a Comment