முதல் வேலை
இரண்டாம் வேலை
மூன்றாம் வேலைக்கு முன்பு..
பல இடங்களுக்கு Apply செய்ததில் Gemini Flyover பக்கத்தில் உள்ள ஒரு கட்டுமான Companyயில் நேர்கானலுக்கு கூப்பிட்டார்கள்.அப்போது அவர்கள் Parksen Complexஐ கட்டிக்கொண்டு இருந்தார்கள்.காலை 11 மணிக்கு Appoitment.சொன்ன Timeக்கு அங்கு இருந்தேன்.
"உட்காருங்கள்"
நன்றி
எந்த வருடம் Pass செய்தீர்கள்?எங்கு படித்தீர்கள்?உங்கள் குடும்ப விபரம் போன்ற விபரங்களை கேட்டறிந்த பிறகு,
இதற்கு முன்பு எங்கு வேலை பார்த்தீர்கள்?
"அந்த பொது......... Companyயில்"
இதைக்கேட்டதும் அவருக்கு Histeria வந்தது போல் என்னுடைய Certificatesஐ கொடுத்து போகச்சொல்லிவிட்டார்.உங்களுக்கு இங்கு வேலையில்லை!!
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் "சார் என் மேல் ஏதேனும் தவறா?என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா?"
உனக்கு வேலையே தெரியலை என்றாலும் எடுத்துக்கொள்வேன் ஆனால் "அந்த பொது ..." இடத்தில் வேலை செய்த எவனையும் வேலைக்கு வைக்கமாட்டேன் என்றார்.
"நான் அந்த மாதிரியான ஆள் இல்லை மற்றும் இதே காரணத்திற்கு தான் அந்த Companyயில் இருந்து வெளியில் வருகிறேன்" என்றேன்.
"தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமால் இருக்க மாட்டான்".எனக்கு தெரியும் என்றார்.
"சார் எல்லோரையும் ஒரே மாதிரி பார்காதீர்கள்" என்றேன்.
இது அவரை மேலும் வெறுப்பேத்தியிருக்க வேண்டும்..
இங்க பாருங்க தம்பி நானும் அதே Companyயில் குப்பை கொட்டியவன் தான்,எனக்கு அங்கிருப்பவன் எப்படி வேலை செய்வான் என்று தெரியும்.உன்னை நம்பி இந்த Site ஐ விட்டு விட்டு போயி நான் நிம்மதியாக தூங்க முடியாது.நீங்க போய் வரலாம் என்றார்.
எவ்வளவோ முயன்றும் அவரைச் சாந்தப்படுத்த முடியவில்லை.செம அடி வாங்கி இருப்பார் போலும்.
அதை என்னிடம் காட்டிவிட்டார்.
அவருக்கு புற முதுகு காட்டி வெளியில் வந்தேன் அதே சமயத்தில் இந்த கறை எவ்வளவு நாள் என்னுடன் இருக்கப்போகிறதோ என்ற கவலையும் வரத்தொடங்கியது.
அப்படியென்றால் அந்த பொது துறையில் இருந்து கற்றுக்கொள்ள எதுவுமே இல்லையா?என்கிறீர்களா?
கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பு,முன்னேற வேண்டும் என்ற வெறி இருந்தால் போதும் எந்த ஒரு மோசமான இடத்திலும் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும்.
நான் கற்றுக்கொண்டது...சில நல்லவற்றை பார்ப்போம்
Material Selection:ஜல்லி,மணல்,சிமெண்ட்,செங்கல் மற்றும் கம்பிகளின் தரம்.இவற்றை எப்படி Check செய்வது / நிராகரிப்பது.இதைத்தான் தரக்கட்டுப்பாடு என்பார்கள்.
Contract Documentation:குத்தகைக்காரர்கள் தங்கள் குத்தகயை பிடிப்பதற்கு முன்பே அவர்கள் வேலையைப் பற்றிய முழு விபரம் கொடுக்கப்படும்.அதில் அவர்கள் நிறைவேற்றப்பட வேண்டிய Conditionsஐ கொடுத்திருப்பார்கள்.ஓட்டையில்லாத Contact தயாரிப்பது கடினம்.சில சமயம் வேண்டும் என்றே விடப்படும்.
Implementation:Goverment நிறுவனமாக இருந்தால் தாங்கள் செய்யவேண்டிய வேலையை குத்தகைகாரர்களால் அவ்வளவு சீக்கிரமாக By Pass பண்ணமுடியாது.குத்தகைகாரர்களின் Resposibility பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
Work Specification:இதைப்பற்றி நிறைய பேசுவார்கள்.அதனால் நிறைய கற்றுக்கொள்ளலாம்.வேறு பெரிய Companyகளில் வேலை செய்யும்போது மிகவும் உதவியாக இருக்கும்.
அடுத்த பதிவில் L&T-ECCயின்(எனது மூன்றாவது வேலை இடம்) உள்ளே நுழைவோம்
2 comments:
சிங்கையில் இருந்து நல்ல பதிவு...
நேத்து சினேகாவை பார்த்தீக்களா ?
நன்றி ரவி அவர்களே.
சினேகாவை பார்க்கவில்லை,மனைவி பக்கத்தில் இருந்ததால் முயற்சிக்கவில்லை.
:-))
அனைவரும் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன்.என்னுடைய postingஐ பார்க்கவில்லையா?
Post a Comment