சென்னை அலுவலகம்.L&T ECC
இந்த அலுவலகம் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் உள்ளடங்கியது.
இங்கு வருவதற்கு முன்பு Aircon வசதியை ஒரிரு முறைமட்டும் Cinema Theature இல் அனுபவத்திருப்பேன்.
சரியாக ஞாபகம் இல்லை.அதனால் புதிய Office சூழலுக்கு உடம்பை கொண்டுவர தடுமாறினேன்.என்ன காரணம் என்று தெரியாமலேயே நிறைய "கொட்டாவி" வந்தது.புது இடம் இப்படி கொட்டாவி விட்டு கொண்டியிருந்தால் நன்றாகவாக இருக்கும்.கூடிய சீக்கிரம் Site க்கு போனால் நன்றாக இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தேன்.
Office இல் உள்ளவர்களுக்கு மதிய சாப்பாடு அங்குள்ள canteenயில் தான்.விலை குறைவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டது.முதல் நாள் தெரிந்த ஒருவரிடம் Meals கூப்பன் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்று சாப்பாடு வாங்கி சாப்பிட்டேன்.
சரி சாப்பாடு முடிந்தது அடுத்து குடிக்க தண்ணீர் எங்கு என்று பார்த்தபோது அதற்கு தனி Q.
எல்லோரும் அந்த தண்ணீர் தரும் Machine பக்கத்தில் போகிறார்கள் Glassஐ வைக்கிறார்கள், தண்ணீர் வருகிறது எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள்.எனக்கோ ஒரே யோஜனை-என்னடா இது? Tapம் இல்லை எப்படி தண்ணீர் வருகிறது, எதை திருவுவது ஒன்றும் புரியவில்லை.
என்னுடைய முறை வருகிறது..
போனேன்
முன்னால் நின்றேன்
Glassஐ வைத்தேன்...ஆனால் தண்ணீர் வரவில்லை
pipeஐ திருகுகிறேன் என்னவோ செய்கிறேன் ஊகும்..வரவில்லை
Glass உள்ள மேடையை தட்டுகிறேன்....பலன் இல்லை
நான் படும் பாட்டைப் பார்த்த பின்னால் இருந்த சக நண்பர் கால் பக்கம் காட்டி "அந்த Pedestal" அமுக்குமாறு சொன்னார்.
அதை காலால் அமுக்கிய பிறகு தண்ணீர் வந்தது.ரகசியம் புரிந்தது.
1980களில் Tapeஐ திருகினால் தான் தண்ணீர் வரும் என்று பழகியிருந்த ஒருவனுக்கு இது புதியது.இப்போது இதெல்லாம் ஜுஜூபி .இப்போது கை பக்கத்தில் கொண்டு போனாலே தண்ணீர் வரும் sensor modelகள் வந்துவிட்டன.
நம்மில் பலர் இந்த மாதிரி அனுபவப்பட்டு தான் வந்திருப்போம் என்று நினைக்கிறேன்.
இப்படியே 1 வாரம் போனதும் அடுத்த வாரத்தில் எனக்கு siteக்கு போக order வந்தது.
எங்கு தெரியுமா?
அடுத்த பதிவில் பார்க்கலாம்...
1 comment:
நன்றாக இருக்கு...நிறைய எழுதுங்க...இந்த துறையில் நாங்க நிறைய தெரிந்து கொள்ளனும்....
Post a Comment