Tuesday, June 06, 2006

ஆந்திர மண்ணில்-லார்சன் & டூப்ரோ-ECC

L&T-ECC-Chennai முந்தைய பதிவு

Accounts Departmentயில் என்னுடைய Transferக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யத்தொடங்கினார்கள்.

எங்கே என்று சொல்லவேயில்லையே?

நமது பக்கத்து ஊர்காரர் "மனவாடு" திரு N.T.Ramaraokகாரு ஊருக்குத்தான்.
Site இருந்த இடம் குண்டூர் பக்கத்தில் உள்ள "Dontapadu"என்ற ஊர்.குண்டூரீல் இருந்து சுமார் 5 மணிநேரம் Bus பிராயாணம்.அதற்கு பிறகு Company Jeepவந்து அழைத்துச்செல்லும் என்று சொன்னார்கள்.

தேதி குறித்துவிட்டு கையில் கொஞ்சம் முன்பணம் கொடுத்து நீங்கள் இந்த தேதியில் அங்கு இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.1st Classயில் போவதற்கு அனுமதியிருந்ததால் நாங்கள் கேட்ட தேதியில் Ticket கிடைத்தது.

நாங்கள்?? சொல்ல மறந்துவிட்டேன்,என்னுடன் இன்னொரு diploma holderஐயும் சேர்த்துவிட்டார்கள்.பிற் காலத்தில் ஒரு நல்ல நண்பர் கிடைக்க இது வசதியாகயிருந்தது.அவர் பெயர் திரு பிரேம்ராஜ்.

இந்த சமயம் வரை நான் இப்படிபோவது வீட்டுக்குத் தெரியாது.கிளம்ப 5 நாட்கள் இருக்கும் சமயத்தில் வீட்டுக்கு கடிதம் போட்டுவிட்டு நான் ஆந்திரா போய் சேர்ந்த பிறகு கடிதம் போடுகிறேன் என்று எழுதிவிட்டேன்.
அம்மாவுக்கு நான் நல்ல வேலையை விட்டுவிட்டதாக வருத்தம்.ஆனால் அந்த வேலையில் உள்ள கஷ்டங்கள் தெரியாது.என்னடா இது Permanent ஆகப்போகிற சமயத்தில் விட்டுட்டு ஏதோ Private Companyக்கு போகிறாய்? என்ற வருத்ததுடன் இருந்தார் போலும்.உடனே கணவரைப்பிடித்து நீங்கள் போய் அவனை ஆந்திரா பக்கமெல்லாம் போகவேண்டாம் திரும்ப நாகைக்கே வரச்சொல்லுங்கள் என்று சொல்லி சென்னைக்கு அனுப்பிவிட்டார்.

அப்பாவும் வந்தார்.விபரங்களை கேட்டுவிட்டு,நல்ல இடமாகத்தான் தெரிகிறது "போ,போய் பிழைக்கிற வழியப்பாரு.அம்மாக்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள்".என்றார்.
"அப்பாடி" என்று இருந்தது.

ஒரு பிரச்சனையை ஆண் & பெண் அணுகும் விதம் கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது.
கிளம்பும் நாள் வந்தது.எனக்காக என் அப்பாவும்,பிரேம்ராஜுக்காக அவனுடைய பெற்றோர்களும் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார்கள்.

ஆமாம், ஆந்திரா போகிறாயா அந்த பாஷை தெரியுமா?

சுத்தமாக எங்கள் இருவருக்கும் "தெளவது" --தெரியாது.

அப்புறம் எப்படி??!!

போகப்போக தெரியும்.

குண்டூரை நோக்கி வண்டி கிளம்பிற்று....

மற்றவை அடுத்த பதிவில்.

3 comments:

MURUGAN S said...

வடுவூர் குமார் அவர்களே, உங்கள் கருத்துக்கள் அருமை சிங்கப்பூரில் கம்பியூட்டர்(technical) வேலைக்கு வாய்ப்புக்கள் எவ்வாறு உள்ளது?

ரவி said...

விறுவிறுப்பா எழுதி வருகிறீர்...

மா சிவகுமார் said...

வணக்கம் குமார்,

ஒவ்வொரு பதிவிலும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன் (மேயிலிருந்து ஆரம்பித்து படித்துக் கொண்டிருக்கிறேன்), பரிச்சயமான நடை போல இருக்கிறதே என்று. கவிஞர் கண்ணதாசனின் உரைநடை பாணி உங்களை நிறைய பாதித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற உரைநடை.

அன்புடன்,

மா சிவகுமார்