Friday, June 30, 2006

குட் மார்னிங்.

குட் மார்னிங்.
நம்மில் பலர் இதனுடன் தான் காலை பொழுதை தொடங்குகிறோம்.காலையில் யார் யாரையெல்லாம் முதலில் பார்கிறோமோ-- மனைவி,குழந்தைகள்,பக்கத்துவீட்டுக்காரர்கள் & நண்பர்கள் என்று பலரிடம்.
நம்மூரில் இதற்கு பஞ்சமே கிடையாது.நீங்கள் எவரிடம் குட் மார்னிங் சொன்னால் அவர்களும் திரும்ப உங்களை அப்படியே வாழ்த்துவார்கள்.சிலர் தலையை சிறிதாக அசைப்பார்கள்.அதது அவர்கள் இருக்கும் நாற்காலியை பொருத்தது.
இதுக்கு ஒரு பதிவா???!!! கொடுமையப்பா என்று நினைக்கிறீர்களா? மேலே படிங்க.அப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க...
1980களில் நான் வேலைக்கு போக ஆரம்பித்த சமயத்தில் நான் காலையில் அல்லது அந்த நாளின் முதலில் பார்க்கும் போது "குட் மார்னிங்" சொல்லுவேன்.சில இடங்களில் இதை நம்மிடம் இருந்து முதலில் எதிர்பார்பார்கள்.சிலர் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள்.Govt அலுவலகம் என்றால் இது அவசியம் எதிர்பார்க்கப்படுவது ஒன்று.
சரிவர Relation இல்லாத மனிதர்களா?போற போக்குல சொல்லிட்டா போயிற்று என்று சொல்லிவிடுவேன்.இது பல சமயங்களில் நிறைய புது எதிரிகளை உருவாக்காமல் தடுத்திருக்கிறது.
நேற்று ஏற்பட்ட கருத்துவேறுபாடா?
ஒரு வாரத்திற்கு முன்பு பேசிய கேலியா?
தவறாக புரிந்துகொள்ளப்பட்டீர்களா?
இதெல்லாவற்றுக்கும் இதமான மருந்து "குட் மார்னிங்"இந்த மருந்து கொஞ்சம் மெதுவாகத்தான் வேலை செய்யும்.பொருமை அவசியம்.
நான் இந்தியாவில் இருந்தவரை "குட்மார்னிங்"ன் சில முகங்களை மட்டும் தான் பார்க்கமுடிந்தது.மேலும் சில முகங்களை வெளி நாடுகளில் பார்க்க முடிந்ததை பார்க்கமுடிந்தது...அது தான் இங்கே.

1992யில் மலேசியா போனபோது இதில் அவ்வளவு பிரச்சனையில்லை.நீங்கள் வாழ்த்தினால் அவர்களும் வாழ்த்துவார்கள்.நான் வேலை செய்த இடம் ஒரு சின்ன கிராமம் என்றதாலும் அவர்கள் "குட் மார்னிங்"கை விட "சலாமத் பஹி"யையே (பஹி என்றால் அந்த நாள்) மிகவும் விரும்பினார்கள்.நீங்கள் சொன்னால் கட்டாயமாக திரும்ப சொல்வார்கள்.

1995யில் சிங்கப்பூர்
நான் வேலைசெய்த இடங்களில் பார்த்த அனுபவங்கள்.
குட்மார்னிங்
...................(என்னை ஒரு முறை(ர) பார்த்துவிட்டு போய்விட்டார்)
குட்மார்னிங்
ஒரு அசட்டு சிரிப்பு தான் பதில்.(என்ன மாங்காய் இவ்வளவு புளிக்கிறது??)

குட்மார்னிங்
ஹ¤ம் (அட இது பதில்தாங்க)

குட்மார்னிங்
குட்மார்னிங் (சிலர்)

குட்மார்னிங்
"What is so good of this morning"-இப்படியும் ஒருவர் கேட்டார்.இவர் நன்கு படித்தவர்.

குட்மார்னிங்
"குட்மார்னிங்"இப்படி இவர் எனக்கு திரும்ப சொன்னதாக "Telepathy" மூலமாக தெரிந்துகொண்டேன்.

குட்மார்னிங்
.................... காதில் வாங்காத மாதிரி போய்விட்டார்.

கட்டுமான துறையில் இந்த மாதிரியான Custom எதுவும் கிடையாது.கொஞ்சம் முரட்டுத்தனம் தான் பெரிதாக தெரியும்.ஆனால் இப்போது கொஞ்சம் மாற்றம் அவ்வப்போது தெரிகிறது.

ஜப்பானியர்கள் மற்றும் கொரியர்கள் இதிலிருந்து விதிவிலக்கு.நிச்சயம் மரியாதை திரும்ப கிடைக்கும்.

"குட்மார்னிங்"-எல்லோருக்கும்.