Tuesday, June 27, 2006

ஊருவிட்டு ஊருவந்து

முந்தய பதிப்புகள்
கட்டுமானத்துறை (அறிமுகம்)
கட்டுமானத்துறை (அறிமுகம்-1)
தாச்சப்பள்ளி
தாச்சப்பள்ளி (அலுவலர்கள்)
தாச்சப்பள்ளி (Account Section)
உயிருக்கு பயந்து ஓடினோம் என்றேன் அல்லவா? அதற்கு முன்பு..
சில விபரங்கள்
இந்த காலக்கட்டத்தில் Siteயில் கிட்டத்தட்ட 350~400 தமிழர்கள்,300 மலையாளிகள்,சில வட நாட்டவர்கள் மற்றும் உள்ளூர் ஆட்களும் இருந்தார்கள்.
இவர்கள் மொத்த பொழுது போக்கு சனி இரவு ஆரம்பிக்கும்.பக்கத்து கிராமமான தாச்சப்பள்ளிக்கு போய் சாப்பிடுவது,தண்ணி அடிப்பது,பரதைகளிடம் போவது,சினிமா பார்பது என்று ஒவ்வொரு Group அவர் அவர்களுக்கு பிடிப்பதை செய்வார்கள்.இவ்வாறு போக விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் Quartersயிலே அதை செய்யத்தொடங்கினார்கள்.இங்கு தான் பிரச்சனை ஆரம்பித்தது.
ஞாயிறு காலை சுமார் 9 மணியிருக்கும்
நம் குடிமகன் ஒருவர் முழுவதும் ஊற்றிகொண்டு என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பக்கத்து கிராமத்துக்கு போய் ஏதோ ஒரு வீட்டு கதவை தட்ட ஆரம்பித்தார்.அந்த பொம்பளை கத்த ஆரம்பிக்க இவருக்கு தெளிய ஆரம்பிக்க அவர்கள் துரத்த இவர் site பக்கம் வர,அதற்குள் அந்த கிராமத்தில் வதந்தி பரவி மொத்த கிராமமும் கையில் கிடைத்தை எடுத்துக்கொண்டு எங்கள் Quartersஐ சுற்றி வளைத்துக்கொண்டு கண்ணில் பட்ட எல்லோருக்கும் தர்ம அடிகொடுத்தனர்.Planning Managerகூட இதிலிருந்து தப்பவில்லை.பலர் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்து தப்பினர்.
சிலர் மண்டையும் பிளந்தது.
காலையிலே அலுவலகத்தில் இருந்ததால் எனக்கு அடி விழவில்லை.
நிலமையின் தீவிரம் புரிய சில நேரம் பிடித்தது.அதே சமயத்தில் Workers quarter பக்கம் அவர்கள் தங்கள் பார்வையை திருப்பினர்.இங்கு பல குடும்பங்கள் தங்கள் சிறு குழந்தைகளுடன் தங்கியிருந்தனர்.அவர்களை காக்கும் பொருட்டு சில ஆண்கள் அவர்கள் முன்னேற்றத்தை தடுக்க மற்றவர்கள் அவர்களை பெரிய Lorryகளில் ஏற்றி பக்கத்து ஊருக்கு அனுப்பிவிட்டனர்.பலர் கால் நடையாகவே மலைகளை தாண்டி பக்கத்து ஊருக்கு போய்விட்டனர்.சுமார் 1 மணிநேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது.போலீஸ் அழைக்கப்பட்டு பிறகு சமாதானம் செய்யப்பட்டுவிட்டது.நல்ல வேலை உயிரிழப்பு ஏதும் இல்லை.
இந்த பதட்ட நிலை சில நாட்கள் நீடித்தது.காவலுக்கு சில போலீஸ்காரர்கள் இருந்ததால் வேலையில் சகஜநிலை வந்தது.
இது இப்படியென்றால்...
வெளியிடங்களில் வேலை செய்யும்போது கம்பெனிகள் கடைபிடித்த சில வழிமுறைகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

4 comments:

துளசி கோபால் said...

இதைப் படிக்கிறப்ப , இப்பெல்லாம் செராங்கூன் ரொடு ஞாயித்துக்கிழமையிலே இருக்கற 'கோலம் 'மனசுக்குள்ளெ வந்து போகுது.

முந்தி ஒரு 20 வருசத்துக்கு முந்தி, ஞாயித்துக்கிழமை, சாயங்காலமானா வீரமாகாளிகொயில் வாசல்லே ஒரு 20. 30 தமிழ்காரர்கள் ( கூலி வேலை செய்ய வந்தவர்கள்) இருப்பார்கள்.

இப்ப? எதோ தேனீக்கூட்டுக்குள்ளே கல் எறிஞ்சாப்புல இல்லே இருக்கு!

கோவி.கண்ணன் said...

நடந்ததை அப்படியே படம் பிடித்து எழுதுவது சிலருக்குதான் வரும். கலக்குரிங்க குமார்.. நானும் தேசிகரில் தான் படித்தேன் வருடம் 1985 - 88

வடுவூர் குமார் said...

துளசி
பாதி இடத்தை கட்டிடங்கள் ஆக்கிரமிக்க இன்னும் கொஞ்ச இடத்தை நமது தோழர்கள் பங்களாதேஷிகள் எடுத்துக்கொள்ள "கல்லெரிந்த கூடு"அப்படித்தான் இருக்கும்.

வடுவூர் குமார் said...

வாங்க கோவி.கண்ணன்.
இன்னும் "எழுத்து" முயற்சியில் தான் உள்ளது.
நம்ம பாலியில் படித்தவர்களை பிடிப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது.