Thursday, June 22, 2006

மரணத்திற்கு பிறகு!!

இந்த கேள்வி பல சமயங்களில் பல இறப்புகளை பார்க்கும் போது எனக்கும் ஏற்பட்டுள்ளது.அதைப்பற்றி இவர் எழுதியிருப்பதை பாருங்கள்.

என் எண்ணமும் இவர் எழுத்தும் ஒத்துப்போவது மிக மிக அதிசயம்.
மூலம்

"இறப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அதுவும் தான் உறுதியாக சாகும் நிலையில் இருக்கின்றோம் என்று அறிந்தவர்களின் அந்த நொடி மன ஓட்டம் என்னவாக இருக்கும? மரணத்தை எதிர்கொண்டவர்கள் என்ன யோசித்து கொண்டு இறந்திருப்பார்கள்? வலிக்குது என்றா ? யாரையும் விட்டு விட்டு போகின்றோம் என்ற? எதையும் முடிக்காமல் போகின்றோமென்றா ? அய்யோ போகின்றோமே என்றா? தான் போகப்போவது சொர்க்கமா இருக்கனும் என்றா ? கடவுளைப்பார்க்கப்போகின்றோம் என்ற கேள்வியுடனா?"

உதவி:திரு யாத்ரீகன்.

இந்த உணர்வு என் தாத்தா சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தபோது ஏற்பட்டது.
அவரும் கொஞ்ச நாள் படுக்கையில் படுத்தபிறகு, ஒரு நாள் வாசலைப்பார்த்த ரூமில் உட்கார்ந்திருந்தார்.அப்போது அவரை என் கடைசி அத்தைதான் பார்த்துக்கொண்டிருந்தார்.
திடிரென்று ஒரு நாள்
"வாங்கோ வாங்கோ,என்ன இவ்வளவு நாளாக்கிடேலே.நான் இங்கு காத்தின்ருக்கேன்."என்று யாரையோ பார்த்து கூப்பிட்டுவிட்டு அத்தையை பார்த்து எமன் வந்திருக்கார் எருமையில் வந்திருக்கிறார் அவரை வரச்சொல்!
அவ்வளவு தான்.
போய்விட்டார்.

அடுத்த நிகழ்வு இப்படி
4 மாதங்களுக்கு முன்பு
சென்னையில் எனது மாமி சிறுநீரக கோளாரினால் மருத்துவமணைக்கும் வீட்டுக்கும் மாறி மாறி போய்கொண்டு இருந்த சமயத்தில்,ஒரு நாள் மருத்துவர், இனி வீட்டில் வைத்தே Dialysis செய்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டார்.
மறைமுகமாக "நாட்களை எண்ணிக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார்.
உடல் உபாதைகள் ஒரு பக்கம், நாம் எல்லோரையும் கஷ்டப்படுத்துகிறோம் என்ற நினைப்பும் சேர்ந்து, வருவோர் எல்லோரிடமும் "என்னை கொண்டு போகமாட்டேன்"என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.மிக தெரிந்தவர்களிடம்" நான் சீக்கிரமே செத்துபோகவேண்டும்" என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொள்,என்று கேட்க ஆரம்பித்தார்கள்.
ஒவ்வொறு அவயமாக செயலிழுந்து கொண்டிருந்த நேரத்தில்..
ஒரு நாள்
அவங்க வீட்டுக்காரரை கூப்பிட்டு நான் இப்போதே பக்கத்தில் உள்ள கோயில் பேரை சொல்லி அங்கே போகவேண்டும் என்றார்.அங்கு என் அப்பா,அம்மா,மாமனார் & மாமியார் வந்திருக்கிறார்கள்,கூப்பிடுகிறார்கள் போகவேண்டும் என்று.
மேலே சொன்ன அனைவரும் "மேலே" போய் பல வருடங்கள் ஆகிவிட்டது.
கொஞ்ச நேரம் தான்...எல்லாம் முடிந்துவிட்டது.
இதையெல்லாம் பார்க்கும் போது இவர்களுக்குள் என்ன நடக்கிறது.ஏன் சில விஷயம் மாத்திரம் கடைசிவரை இருந்துவிட்டு போகிறது என்ற கேள்விகள் எழுகிறது.

புரியாத புதிரா?? சே! சே! அப்படியிருக்காது, அப்புறம் எப்படி தெரிந்துகொள்வது?

மேலே போகிறவரிடம் சொல்லியுள்ளேன், முடிந்தால் திரும்பவந்து எழுதுகிறேன் என்று சொல்லியுள்ளார்.அதற்குள் வேறு எங்காவது எழுதியிருந்தால் தெரியப்படுத்தவும்.

அது வரை காத்திருப்போம். :-))

5 comments:

துளசி கோபால் said...

குமார்,

இது மாதிரிதான் எங்க தாத்தா போனதையும் அம்மா சொல்லிக் கேட்டுருக்கேன்.

உடம்பு சுகமில்லாமக் கிடந்தாராம். ஒரு நாள் படுத்துக்கிட்டே இருந்தப்ப, திடீர்னு
கை ரெண்டயும் தூக்கிக் கும்பிட்டுக்கிட்டே 'அங்கே பாருங்க. என் அப்பன் நடராஜன்
ஆனந்தத் தண்டவம் ஆடறதை' ன்னு தலையை ஆட்டி ஆட்டி ஒரு நிமிஷம் ரசிச்சுக்கிட்டேக்
கண்ணை மூடிட்டாராம். இத்தனைக்கும் நம்ம வீட்டுக் குலதெய்வம் பெருமாள்.

எல்லா சாமியும் ஒண்ணுதான்னும் மறைமுகமாச் சொல்லிட்டுப் போயிருக்கார். இல்லையா?

ரவி said...

எதாவது நினைச்சிக்கிட்டு இருப்பாங்க என்பது உண்மை...சாதாரணமா
தூங்குவதற்க்கு முன் நம் எண்ணவோட்டம் செல்வது மாதிரிதான்...

இதில் ஸ்பெஷல் "நாம சாகப்போகிறோம்" என்பது தான்...

சில உயிர்கள் பட்டென விபத்தில் மறையுது...அவங்களுக்கு எல்லாம் யோசிக்க ஏது நேரம்...

வடுவூர் குமார் said...

துளசி
இந்த கடைசி நிமிடங்களில் ஏதோ நடக்கிறது.நமக்கு இப்படி சரி,மற்ற மதத்தவர்களுக்கு யார் வருவார்கள்?

வடுவூர் குமார் said...

செந்தழல் ரவி
சரி தான்,விபத்தின் போது இந்த எண்ணணோட்டம் கூட இருக்காது.
அது ஏன் எல்லோரும் கடவுளை பார்க்கிறார்கள்.மீதி எதுவுமே ஞாபகம் இருக்காதா?

வல்லிசிம்ஹன் said...

குமார்,இன்றுதான் உங்கள் பதிவு பார்த்தேன். எங்கள் தாத்தா இறப்பதற்கு முதல் நாள் இரவு எல்லோருக்கும் பரிவோடு ஆசீர்வாதங்கள் கொடுத்தார். என் அப்பாவிடம்,பாட்டியைப் பார்த்துக்கொள்ளச் சொன்னார். ராம் ராமா என்று கை கூப்பியபடியே அமைதியாக உயிர்விட்டார்.எங்கள் தந்தை இறந்தபோது கண்களில் ஒரு ஆனந்தம் தென்பட்டது.இமைப்பதற்குள் அமைதியாகி விட்டார்.கொடுத்து வைத்த ஆத்மாக்களுக்குத் தான் இது போல் நடக்கும்.நன்றி இந்தப் பதிவுக்கு.