Saturday, June 17, 2006

டிவி இல்லையா!! பிடி அபராதம்??

இன்று காலை செய்தித்தாளை படித்துக்கொண்டு இருக்கும் போது இப்படி ஒரு தகவலைப்பற்றி ஒருவர் Forumயில் எழுதியிருந்தார்.

சாராம்சம் இதுதான்

இந்த நபருக்கு ஒரு ஆணை Media Developmentயில் இருந்து வந்தது,

இப்படி

"Broadcast television receiver without valid licence" அபராதத்தொகை கட்டு.

உடனே அவர் அந்த departmentஐ கூப்பிட்டு விபரங்கள் கேட்டபிறகு தன்னிடம் டிவி யே கிடையாது ஆனாலும் நான் பணம் கட்டவேண்டுமா?என்றிருக்கிறார்.

அதற்கு அவர்கள்

உங்களிடம் டிவி பெட்டி இல்லாத்தை எங்களிடம் சொல்லவில்லை என்றால் அபராதத்தொகை கட்டித்தான் ஆகவேண்டும் என்று.

என்னிடம் இல்லாததை சொல்லாததற்கு தண்டனையா? என்று கேட்டிருக்கிறார்.

படிப்பதற்கு கொஞ்சம் பைத்தியகாரத்தனமாகத் தோன்றினாலும் இது தான் இங்கு சட்டம்.இதைப்பற்றி அவர்கள் இணையப்பக்கத்திலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் வீட்டுக்கு வரும் Property tax யிலும் விளக்கம் இருக்கும். இந்த இரண்டையும் அவர் பார்க்க தவறவிட்டுவிட்டார் போலும்.

இது இப்படியிருக்க சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் இப்படி கேட்டிருந்தார்

"இப்பொதெல்லாம் Computer Monitorயிலே TV Tunerவருவதால் டிவி என்பதே ஒரு அவசியம் இல்லாத பொருளாக போக உள்ளது.இந்த சமயத்தில் டிவி மீது வரி என்பதே செல்லுபடியாகாதே"என்று.

நல்ல கேள்வி தான்.

பதில் கிடைத்ததா என்று தெரியவில்லை.

3 comments:

துளசி கோபால் said...

குமார்,

நாங்க இங்கே வந்த புதுசுலே 1988ல் டிவி லைசென்ஸ் இருந்தது. நாங்கள் 150$ கட்டினோம். அடுத்த மாதமே
டிவி லைசென்ஸ் வேண்டாமென்று எடுத்துவிட்டார்கள். உடனெ கட்டாமல் இருந்திருந்தால் 150 லாபமாயிருக்கும்.
நமக்குத்தான் பொறுமைன்றது இல்லையே(-: இத்தனைக்கும் அப்பெல்லாம் ரெண்டே சானல்தான். காலை 10 மணிக்குத்தான்
டிவி தொடங்கும். ராத்திரி 10.30/11.00 மணிக்கு முடிஞ்சிரும்.

தினமும் டிவி ஆரம்பிக்கும்போது, நியூஸியின் நேஷனல் ஆந்தம் வேற வரும், கூடவே நாட்டின் அருமையான இயற்கைக்
காட்சிகள். அதுவே ஒரு சுற்றுலா ஆட் மாதிரி இருக்கும். இப்ப எல்லாம் போச்.
24 மணிநேரமும் தொணதொணன்னு எதாவது வருது.

வடுவூர் குமார் said...

துளசி
நான் வார நாட்களில் 8.30-9.00 தமிழ் செய்திகள் சனிக்கிழமைகளில் இரவு தமிழ் படமும் மட்டும் தான் பார்ப்பேன்.மற்றபடி எல்லாமே சரியான அறுவை அதிலும் போட்டதே திரும்ப திரும்ப போடுகிறார்கள்.
இதனாலே கம்பி வட "தொல்லை" காட்சிக்கு விண்ணப்பம் செய்யவில்லை.

வடுவூர் குமார் said...

அதைத்தான் நானும் கடைசியில் சொல்லியுள்ளேன்,திரு D The Dreamer.