Sunday, June 25, 2006

இந்தியன் ஏர்லயன்ஸ்.

கொஞ்சநாட்களாக இங்கு ஒரு விளம்பரம் இவர்கள் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்,பாருங்கள் எப்படி என்று..

Digital Clockகாலை 6.01என்று காட்டுகிறது உடனே ஒரு Alarmஅடிக்கிறது.

தூங்கிகொண்டு இருக்கிற ஒருவரை கையில் ஒரு கோப்பையுடன் ஒரு பெண்மனி எழுப்புகிறார்.

அப்போது அங்கு இருக்கிற ஒரு கடிகாரம் காட்டப்படுகிறது

ஆனால்,அதில் மணி 5.58.

ஒரு பெரிய இந்திய நிருவனம்,இந்தியனின் பெருமையை பறைசாற்றக்கூடிய நிருவனம் இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிடுகிறது.கொஞ்சம் கூட அக்கறையில்லாத விளம்பரம்.

ஏன் இதை அந்த கம்பெனியில் யாரும் பார்க்கவில்லையா அல்லது இந்த விளம்பரத்தை எடுத்த நிருவனத்திடமே எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேடிக்கை பார்கிறதா என்று தெரியவில்லை.

இது ஒரு உதாரணம் தான்.

மேலும் படிங்க..

இந்த வருடம் முதலில் சென்னைக்கு போயிருந்தேன்.போகும்போது எந்த பிரச்சனையும் இல்லை.இந்த பயணம் வெறும் 9 மணி நேரத்துக்கு முன்பு முடிவு செய்து டிக்கெட் முன்பதிவு செய்தேன்.அப்போதே திரும்பவரும் பயணத்தையும் முடிவு செய்து வங்கியிருந்தேன்.நான் பயணச்சீட்டை வாங்கும் போதே அந்த முகவர் "நீங்கள் சென்னை போனவுடன் உங்கள் Return Journeyயை Confirmசெய்துவிடுங்கள் " என்று சொன்னார்.

நான் தான் இங்கேயே Confirmசெய்துவிட்டேனே திரும்ப எதற்கு செய்யவேண்டும் என்று கேட்டேன்.

செய்வது நல்லது என்று சொன்னார்.(அனுபவசாலி போல)

சென்னையில் இருந்து திரும்புவதற்கு முன்பு 3 நாட்களுக்கு முன்பு அவர்களுடைய அலுவலகத்துக்கு போன் செய்து என்னுடைய விபரங்களை கொடுத்து அதை Confirm செய்து அதற்குரிய கடவு எண்ணையும் பெற்றுக்கொண்டேன்.

பயண நாள் வந்தது. Boarding Passவாங்கும் இடத்தில் எனது டிக்கெட்டை கொடுத்தபோது....

உங்கள் டிக்கெட்டை நீங்கள் Reconfirmசெய்யவில்லை அதனால் நீங்கள் சிறிது நேரம் இருங்கள் என்று அடுத்த பயணியை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.


நான் போன் செய்து பெற்றுக்கொண்ட அந்த கடவு எண்ணையும் ஏற்றுக்கொள்ளாமல் நான் ஏதோ பொய் சொல்லுவது போல் சொன்னார். ஒரு தடவை Confirmசெய்த டிக்கட்டை எதற்கு திரும்ப Confirmசெய்யவேண்டும் என்று கேட்டகேள்விக்கு பதில் இல்லை.

மனிதனாக ஏறிய எல்லோரையும் அன்றே குரங்காக மாற்றிவிட்டார்கள்.(விமானத்துள்)

ஆமாங்க,அவங்க கொடுத்து கடலை பாக்கெட்டை கையால் பிரிக்கமுடியாமல் எல்லோரும் எங்கள் பல்லைத்தான் உபயோகித்தோம்.ஆதாவது எப்போதும் அதை பிரிக்க ஒரு சின்ன கட் இருக்கும்.அன்று அதில் இல்லை.இதை அவர்களுக்கு ஈமெயில் மூலம் தெரியப்படுத்திய போதும் "பதில் கூட இல்லை".

மற்ற ஏர்லயன் கம்பெனிகளை பார்க்கும் போது இவர்கள் வேலை செய்யும் விதம் எப்போதுமே ஒரு 5அல்லது 10வருடங்கள் பின்தங்கியிருக்கும்.சிங்கையில் இவர்கள் அலுவலககத்துக்கு போன் செய்து, கிடைத்து அவர்களுடன் பேசி உங்கள் வேலையை முடித்துவிட்டீர்களானால் அந்த நாள் உங்களுக்கு ஒரு பொன் நாள்.

மென்பொருளில் சக்கைபோடும் நம்மவர் அதை உபயோகப்படுத்தும் போது மிகவும் பின் தங்கிவிடுகின்றனர்.இவர்கள் அலுவலகங்களை ஒவ்வொன்றுடன் இணைக்காமல் நம்ம உயிரை வாங்குகிறார்கள்.

இந்த மாதிரியே இன்னும் 2 வருடங்கள் இவர்கள் வேலை செய்தால் இவர்களை மக்கள் உதாசீனப்படுத்துவது நிச்சயம் .தேசீய உணர்வெல்லாம் பிறகு தான் வரும்.

கொஞ்சம் இவர்களும் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம் ஏனென்றால் Marketயில் இவர்கள் மட்டும் தனித்தில்லை.

அது யார் மற்றொருவர்?நான் அனுபவபட்ட விதத்தில்.

இந்தியன் வங்கி தான்.

அதை பிரிதொரு சமயம் பார்ப்போம்.

3 comments:

துளசி கோபால் said...

குமார்,

இண்டியன் ஏர்லைன்ஸும் சரி, ஏர் இந்தியாவும்
சரி மக்களை எப்படி எல்லாம் ஆட்டுதுன்னு

இங்கே பாருங்க.

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
உங்க அனுபவம் கொடுமையாக இருக்குது.ஏர் இன்தியா வும் மோசம் என்று பல பேர் இங்கு சொல்ல கேட்டிருக்கேன்.

வடுவூர் குமார் said...

வாங்க ஹரிஹரன்.
ஊசிப்போன உண்வா?
அது இன்னும் வாய்க்கவில்லை.
எதிர் பார்ப்போம்..
ஜெட் விமானம் சென்னைக்கு இன்னும் விடவில்லை என்று நினைக்கிறேன்.