Friday, June 02, 2006

குப்பை போடுவது பற்றி

நேற்று இரவு "வசந்தம் சென்ரல்"(சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி) தமிழ்ச்செய்தியில் சிங்கப்பூரில் குப்பை போடும் பழக்கம் இன்னும் குறைந்தபாடு இல்லை அதை கட்டுப்படுத்த ஏதோ "Programme" நடத்தப்போவதாகச் சொன்னார்கள்.கடந்த வருடங்களில் சுமார் 4000 மக்கள் பிடிபட்டதாகவும் சொன்னார்கள்.

நான் இங்கு வந்த பொழுது பல இடங்களில் "COW"என்று
(அதாவது "Corrective Work Order"யின் சுருக்கம் தான்) போட்ட Jacket உடன் பல மனிதர்கள் பொது இடங்களை சுத்தம் செய்வதைப் பார்திருக்கேன்.குப்பை போடுவோர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு இந்த மாதிரி தண்டனை கொடுப்பார்கள்.

கடந்த 2, 3 வருடங்களில் இந்த மாதிரி ஆட்கள் என் கண்ணில் படவில்லை.

ஆனால் நான் இருக்கும் இடத்தில் நிலமை கொஞ்சம் மோசம் தான்போலும்.கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதால் தெரியவில்லை.

7 வருடங்களுக்கு பிறகு வந்த எனது பெற்றோர்கள்

"என்னடா! முதல் தடவை வந்தபோது மிகவும் சுத்தமாக இருந்தது இப்போது எங்கும் காகிதம்,Plastic என்று உள்ளதே"என்றார்.

என்ன பதில் சொல்ல முடியும்.ஜனத்தொகை அதிகமாகிவிட்டது என்றேன்.

நாம் இருக்கும் / தங்கும் இடத்தை நாம் தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பல சிறுவர்களுக்கு இது புரிவதில்லை.சில பெரியவர்களுக்கும் இது தெரிவதில்லை.

குற்றம் செய்பவர்கள் பிடிபடுவது குறைந்துவிட்டதால் மற்றவர்களும் கவலைப்படுவதாக தெரியவில்லை போலும்.

"தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்".

இழந்து கொண்டிருக்கின்ற நமது நல்ல பெயரை காப்பாற்ற வேண்டும்.நம்மால் முடிந்த அளவுக்கு அரசாங்கத்துக்கு உதவவேண்டும்.

உதாரணமாக Letter Box இல் வந்து விழும் Flyersஐ பக்கத்தில் உள்ள குப்பை தொட்டியில் போடலாம்.அதற்கு கூட சிலருக்கு கஷ்டமாக உள்ளது.பொது இடத்தில் உள்ளதால் இது Blockயின் உள்ளே நுழைபவரின் கவனத்தை முதலில் பெரும் இடமாக உள்ளது.

கொஞ்ச நாள் இந்த மாதிரி விழுந்த Paperஐ பொறுக்கி குப்பைத் தொட்டியில் போட்டேன்.ஒரு நாள் நான் இதை செய்துகொண்டிருக்கும் போதே பக்கத்து பெட்டியில் lettersஐ எடுத்த ஒரு பொம்பளை அதில் இருந்த Flyers கீழே விழுந்தது அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் போய்விட்டாள்.Behaviour Problem போல.

அதிலிருந்து என்னுடைய Boxஐ மட்டும் clear செய்துவிட்டு போய்விடுவேன்.

இதைப்போல் இன்னோர் விஷயமும் கவனத்தில் கொள்ளவேண்டியது "Pedestrian Crossing"

சிவப்பு விளக்கு இருக்கும் போதே சாலையை கடப்பது.சமீப காலத்தில் நிறைய Near Miss ஐ பார்க்க நேர்ந்தது.அடிப்பட்டவர்கள் வந்து சொல்லப்போவதில்லை இப்படி செய்வது தவறு என்று.
நண்பர்களே!! 30 seconds ஒரு பெரிய Time அல்ல நீங்கள் வாழும் நாளை கணக்கிட்டால்.

சிலர் தான் செய்வது தவறு என்று தெரிந்தும் தலையை குனிந்து கொண்டு சாலையை கடப்பது "இன்னொரு கொடுமை".

6 comments:

krishjapan said...

வடுவூராரே, எமக்கும் உபயோகமுள்ள அறிவுரைகள்...

நாகை சிவா said...

Kumar, please go to check it in Badri blog abt U. i given my details in that blog, as i said early in ur blog.
sorry for the inconveince. Just for fun.
No need to post this

வடுவூர் குமார் said...

பார்தேன்,

நன்றி

Unknown said...

குமார்,

பதிவினைப் படித்தேன். நானும் போன வருடம் சிங்கப்பூர் வந்திருந்தேன். துபாயினை விட உங்கள் ஊரில் குப்பைகள் அதிகமில்லை! எனவே உங்கள் ஊரை விட எங்கள் ஊரில் தான் 'நமது' மக்கள் அதிகம்!

30 விநாடிகளின் அருமை தெரியாமல் சாலையினை கடக்கும் மக்களுக்கு எனது அனுபவத்தினைக் கூறுங்கள்! திருந்தினாலும் திருந்துவார்கள்.

நன்றி.

Sivabalan said...

நல்ல பதிவு!!

நன்றி!!

PRABHU RAJADURAI said...

மும்பையில் முன்பு பொது இடங்களில் துப்புவர்களை எதிர்த்து 'ச்சீ' என்று ஒரு இயக்கம் மும்பை நகராட்சியால் நடத்தப்பட்டது. அதாவது துப்புவர்களைக் கண்டால் ச்சீ என்று கூற வேண்டுமாம்! குப்பை போடுவது குறித்த எனது 2002ம் ஆண்டு அனுபவம்
http://marchoflaw.blogspot.com/2006/06/blog-post_10.html