நீச்சல் அனுபவங்கள். நீச்சல் அனுபவம் (1),நீச்சல் (2).
அந்த அருமையான இடம் இப்போது நான் இருக்கும் சிங்கப்பூர் தான்.
ஒவ்வொரு Townக்கும் ஒரு நீச்சல் குளம் இருக்கும்..புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கு ஏற்ற மாதிரி -இது 1.2 மீட்டர் ஆழம் மட்டுமே இருக்கும்.இன்னொன்று 1.2 மீட்டர் -1.8 மீட்டர் ஆழம் உள்ள மாதிரி அமைப்புடன் 10 lanesஉள்ள குளம் பெரியவர்களுக்கு மற்றும் நீச்சல் பயிற்சி செய்பவர்களுக்கும் ஏதுவாக இருக்குமாறு கட்டியுள்ளார்கள்.
பாதுகாப்புக்காக சிலபேர்கள் கவனிப்பு மேடைகளில் இருந்து கவனித்துக்கொண்டு இருப்பார்கள்.
இங்கு வந்த சமயத்தில் நேரமின்மையாலும் வேலை தொந்தரவாலும் நீச்சல் குளம் பக்கமே போகமுடியவில்லை.
ஒரு நாள் இங்குள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற போது அவர்கள் மகன் நீச்சல் குளத்திற்க்கு போவதாகவும் விருப்பப்பட்டால் என்னையும் போகச்சொன்னார்கள்.
சரியென்று கிளம்பிவிட்டேன்.
உள்ளே போனபிறகு தான் இங்கு ஒரு தனி உலகமே நீந்திக்கொண்டு இருப்பது தெரிந்தது.
சின்னஞ்சிறு குழந்தைகள் அவ்வளவு அருமையாக நீந்திக்கொண்டிருந்தது கண்கொள்ளா காட்சி.அவர்களுக்கு பயிற்சி கொடுத்து கொண்டிருக்கும் வாத்தியார் அவர்களை கண் கொத்திப்பாம்பாக பார்த்து தவறுகளை திருத்திக்கொண்டிருப்பார்.
பலசமயம் இந்த குழந்தைகள் ஒரு lapயை அனாயாசமாக செய்வதை பார்த்தே நாமும் செய்யவேண்டும் என்ற வெறி என்னுள் ஏற்பட்டது.சில சமயம் தண்ணீருக்குள் மூழ்கிக்கொண்டு அவர்கள் எப்படி மூச்சை வெளிவிடுகிறார்கள் என்று பார்த்து தெரிந்து கொண்டேன்.நான் பார்த்தவரை இவர்கள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு நீந்துவதில்லை.அதிகமானோர் Brest stroke,Butterfly Stroke and Free styleபாணிகளை மட்டுமே கடைபிடிக்கிறார்கள்.
யாராவது பாம்பு மாதிரி தலையை மாத்திரம் தூக்கிகொண்டு நீச்சல் போட்டால் 99% அவர் நம் நாட்டில் இருந்து சமீபத்தில் வந்தவர் என்று தெரிந்துகொள்ளலாம்.
4 வருடங்களுக்கு முன்பு ஒரு site(கீழே உள்ளே படத்தை பார்க்கவும்.)வேலை செய்யும் சமயத்தில் இந்த மாதிரி சாய்வு தளத்தில் ஒரு கயிற்றை பிடித்துக் கொண்டு ஏறி இறங்க வேண்டும்.அப்படி 3 மாதங்கள் செய்யததில் எனது முட்டி தனது வயதை காட்டியது.மருத்துவரிடம் காட்டியபோது,முட்டிக்கு அதிக அழுத்தம் கொடுக்ககூடிய பயிற்சிகளை செய்யாதீர்கள் என்றார்.பிறகு அவரே நீச்சல் பயிற்சி செய்வது நல்லது என்றார்.
ஆரம்பித்தது புதிய துவக்கம்.
புதிதாக Trunk & Gogglesவாங்கிவைத்து 6 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் ஆரம்பித்தேன்.இந்த முறை முதலில் இருந்த பயம் இல்லை ஆனால் Middle lane போகக்கூடிய தைரியம் வரவில்லை.சுவர் பக்கமாகவே 7,8 வயது குழந்தைகள் பக்கத்திலேயே நீந்தினேன்.இந்த முறை பாதி laneவரை போகமுடிந்தது.
2 மாதங்களிலே ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன்.தண்ணீரில் உள்ளே இருந்த 10 நிமிடங்களுக்கு பின்பு உடம்பு தன்னாலே மிதக்கும் நிலைக்கு வந்துவிட்டது போல் இருந்தது.
பலர் நீச்சல் செய்யும் போது கவனித்த போது கொஞ்சம் கூட பதற்றப்படாமல் அவர்கள் இருப்பதைப்பார்த்து அது போல் நிதானமாகசெய்யமுற்பட்டதில் 1 lapயை முடிக்கமுடிந்தது.
8 வயதில் ஆரம்பித்து 45வயதில் தான் எனக்கும் நீச்சல் தெரியும் என்று தன்னம்பிக்கையுடன் சொல்லமுடிகிறது.
"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்திவிடும்."
நன்றி.
1 comment:
தன்னம்பிக்கையூட்டும் பதிவு. வாழ்த்துக்கள்.
Post a Comment