நீச்சல் அனுபவங்கள். நீச்சல் அனுபவம் (1)
ராவத் எங்கள் மெஸ்ஸின் சமையல்காரர்.
"ஹரே ராவத் பையா இதற் தேகோ மே கைசா தேர்த்தா ஹு"-ராவத் இங்கே பார் நான் எப்படி நீந்துகிறேன்.(ஹிந்தி சரியில்லை என்றால் மன்னிக்கவும் இதையும் நீச்சல் மாதிரி தான் கற்றுவருகிறேன்)என்றதும் அவனும் வந்தான்.
தொடக்கத்தில் ஆழம் குறைவு போகப்போக கூட இந்த அமைப்பில் இருந்த நீச்சல் குளம் அது.
தொடங்கினேன் ஆழம் குறைந்த இடத்திலிருந்து,பாதிதூரம் கடந்தபிறகு திரும்பவும் மூக்கு,தண்ணீர்...
பக்கத்தில் இருந்த சுவற்றைப் பிடிக்கலாம் என்று பிடிக்க முயன்ற போது கை வழுக்கியது.
மூழ்கினேன்,2 தடவை தண்ணீர் குடித்தேன்.
"ராவத்"-பஜாவோ என்று கத்தக்கூட திரானியில்லை.
நான் கொஞ்சதூரம் நீச்சல் அடிப்பதை பார்த்து அவன் கவனம் வேறு எங்கோ இருக்க அந்த சமயத்தில் இது நடந்தது.
அவன் எதேச்சயையாக திரும்ப நான் தத்தளிப்பதைப்பார்த்து கைகொடுத்து தூக்கிவிட்டான்.
நான் எந்த இடத்தில் தத்தளித்தேன் என்பதை பின்னாளில் பார்த்தபோது எனக்கே வெட்கமாக இருந்தது.என்னுடைய உயரத்தை விட 2,3 அங்குலம் தான் அதிகமாக இருந்தது.
இதற்கு பிறகு நீச்சலைப்பற்றி சுய பரிசோதனை செய்துபார்த்ததில் நான் ஏதோ தப்பு செய்கிறேன் என்று மட்டும் புலப்பட்டது.
1.மூக்கு
2.தண்ணீர்
தண்ணீரில் தான் நீச்சல் அடிக்கவேண்டும் என்பதால் மூக்கில் மட்டும் கவனம் செலுத்தினேன்.
சின்ன வயதில் இருந்தே மூக்கால் தான் மூச்சுவிட வேண்டும் என்று சொல்லி பழக்கப்படுத்திவிட்டதால்,நீந்தும் போதும் இதையே கடைப்பிடித்தேன்.இது தான் மிகப்பெரிய தவறு என்று பிற்காலத்தில் புரிந்து கொண்டேன்.
சரி இதை எப்படி சரிசெய்வது?
பலரிடம் பேசி,நீச்சலைப்பற்றி சில புத்தகங்களை படித்து ஒரளவு தெரிந்துகொண்ட பிறகு
முயற்சிக்கலாம் என்று எண்ணிய போது நான் மாற்றப்பட்டது பஞ்சாப்பில் உள்ள ஜெய்பூரா என்ற ஊருக்கு.
கோடைக்காலம் ஆதலால் சொட்டு தண்ணீர் காணக்கூட கிடைக்கவில்லை.
அப்புறம்? கிடைத்தது அருமையான இடம்.
எங்கு??
அது அடுத்த பதிவில்.
2 comments:
நல்ல தொடர். சரியாகச் சொன்னீர்கள் -- மூக்கில் மூச்சு விடுவது தான் தவறு! நான் YMCA-வில் நீச்சல் பழகியபோது வாயால் தண்ணீருக்குள் bubble விடச்சொல்லிப் பயிற்சியளித்தார்கள். நான் முறைப்படி நீச்சல் கற்றுக்கொண்டேன் (27 வயதில்) கற்றுக்கொண்டதோடு சரி, தொடர்ந்து செய்யாததால் இன்னும் breathing control வரவில்லை.
ஓஹோ.. அப்படியா சேதி.. நானும் இப்போ கொஞ்ச நாளுக்கு முன்னால் ஒரு பயங்கர அனுபவத்தை சந்திச்சிட்டு வந்திருக்கேன்..
Post a Comment