Thursday, January 31, 2008

ஸ்தல புராணம்-வடுவூர்.

இது நான் எழுதியது அல்ல.நண்பர் மூலம் மின் அஞ்சலில் வந்து சேர்ந்தது.

திரு ஜோ.மகேஷ் மகேஷ்வரன்
என்பவர் எழுதியுள்ளார்.

வடுவூரில் பிறந்திருந்தாலும்,இதில் இருக்கும் பல விஷயங்கள் எனக்கும் புதிது தான்.




திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு, வடுவூர் சிலையழகு என்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களில் கூறுவார்கள். முதலிரண்டு விஷயங்களும் பெருமபாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். அது என்ன வடுவூர் சிலை அழகு....அறிந்து கொள்ள தொடருங்கள்..... திருவாரூர் & தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைப்புற கிராமம், எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல்வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ள ஊர் வடுவூர். இதில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் சிலையைத்தான் மக்கள் இப்படி அழைக்கிறார்கள். மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ? பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார். வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள். இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு, ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம்.

இந்த சிலை இங்கு வந்ததுக்கு கூறப்படும் செவி வழிக் கதை, ஸ்ரீ ராமர் வனவாச காலத்தின் முடிவில் அயோத்திக்கு செல்ல ஆயத்தமாகிறார். அப்போது காட்டில் உள்ள ரிஷிகள் ராமர் மீது கொண்ட பிரியத்தால் தங்களுடனே ராமர் இருக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர்களின் அன்பு கட்டளையில் சிக்குண்ட நிலையில் ராமர், தனது உருவத்தை சிலையாக வடித்து ஆசிரம வாயிலில் வைக்கிறார். அடுத்த நாள் அங்கு வரும் ரிஷிகள் சிலையின் அழகில் மயங்கி நிற்கிறார்கள். அப்போது ராமர் தங்களுடனேயே தங்க மீண்டும் வேண்டுகிறார்கள். இதை மறுக்க முடியாமல் தவிக்கும் ராமர், நான் வேண்டுமா? இந்த சிலை வேண்டுமா ? என்கிறார்.

ஏற்கனவே சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், சிலையை வாங்கிக் கொள்கிறார்கள். இதை பல ஆண்டுகளுக்கு பிறகு திருக்கண்ணபுரம் என்ற ஊரில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சிலை, இத்துடன் இருந்த சீதை, லட்சுமணர், பரதன், ஹனுமன் சிலைகளையும் தலைஞாயிறு என்ற ஊரில் உள்ள ஒரு ஆலமரத்துக்கு அடியில் புதைத்து வைக்கிறார்கள். கால ஓட்டத்தில் இது பற்றி மக்கள் மறந்து விட்ட நிலையில், அப்போது தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி பரம்பரை மன்னர் ஒருவர் கனவில் ராமர் வந்து, ஆலமரத்து அடியில் தான் புதையுண்டு இருக்கும் தகவலை சொல்லி, தன்னை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறார். திடுக்கிட்டு எழும் அந்த மன்னர், அந்த நள்ளிரவு நேரத்தில் தனது படைகளுடன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு செல்கிறார். சிலைகளை மண்ணில் இருந்து வெளியில் எடுக்கிறார். அப்போது மன்னரை சூழ்ந்து கொள்ளும் அப்பகுதி மக்கள் சிலைகளை அங்கேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். அவர்களை சமாதானம் செய்து, பரதன், லட்சுமணர் சிலைகளை மட்டும் அங்கே பிரதிஷ்டை செய்கிறார்.

சிலைகளைக் கொண்டு தஞ்சாவூர் செல்லும் வழியில் வடுவூரில் தங்குகிறார்.

இது பற்றி தகவல் அறிந்து இந்த ஊர் மக்கள், ராமர் சிலையை அங்கிருந்த கோபாலன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்ய வேண்டுகிறார்கள். மன்னர் மறுக்கவே, பக்தர்கள் சிலர் கோயில் கோபுரத்தில் இருந்து விழுந்து உயிர் துறப்போம் என்றதும், மன்னர் சம்மதிக்கிறார். அன்று முதல் கோபாலன் கோயில் ஸ்ரீ கோதண்டராமர் கோயிலாக மாறியது. (இன்றும் இதை பெருமாள் கோயில் என்றே அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்). சிலையில் உள்ள கலை நுணுக்கம், பார்த்தவரை மயக்கும் மந்தகாச புன்னகை, மக்கள் கொண்டுள்ள பக்தி இவற்றைக் கொண்டு மேற்சொன்ன செவிவழிச் செய்தி உண்மைதான் என்கிறார்கள் ஊர் பெரியவர்கள்.

மேலும் ராமர் சிலைக்கு அருகில் வைக்க லட்சுமணர் சிலை வடிக்கப்படுகிறது. இது பெண் வடிவமாக அமைந்து விடுகிறது. இதனால் அந்த சிலையை அருகில் அழகிய சுந்தரி அம்மன் (பிடாரி கோயில்) என்று பிரதிஷ்டை செய்துள்ளார்கள். வேறு லட்சுமணர் சிலை வடிக்கப்பட்டு, தற்போது ஸ்ரீ கோதண்ட ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர், ஹனுமன் சமேதராய் காட்சியளிக்கிறார். இதை கண்வ மகரிஷி, குலசேகர பெருமாள் மற்றும் பல ஆன்மீக பெரியோர்கள் தரிசித்துள்ளனர்.


1.வடுவூர் & பெயர்காரணம்

இந்த ஊர் நிர்வாக வசதிக்காக தற்போது 3 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்தும் சேர்த்து தன்னரசு நாடு என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த ஊருக்கு வடுவூர் என்ற பெயர்க்காரணமே சுவாரஸ்யமானது. சேரர் மற்றும் தொண்டை மண்டலத்தார் என பெரும் படையை எதிர்த்து கரிகால சோழன் வெற்றி கண்ட வெண்ணிப்பறந்தலைப் (தற்போது கோவில்வெண்ணி) தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. இந்த போரில் வெற்றி கண்ட கரிகால சோழனது வீரர்கள் இந்த ஊரில் தங்கி இளைப்பாறி, விழுப்புண் ஆற்றிச் சென்றனர். வடுக்களைப் பெற்ற போர்வீரர்கள் தங்கி சென்ற ஊர் என்ற பொருளில் வடு + ஊர் = வடுவூர், அழகுமிக்க, இளமையான ஊர் எனும் பொருளில் வடிவு +ஊர் என அழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மகிழங்காடு, வெகுளாரண்யம் என்றும், பாஸ்கர ஷேத்திரம், தக்ஷிண அயோத்தி, ஏகாதசி கிராமம் என பல்வேறு பெயர்களும் உண்டு என்கிறார்கள் இந்த ஊர் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்.


2. பிற சிறப்புகள்:

இந்த ஆலயத்தின் உள்ளே கல்விக் கடவுளான ஹயக்கிரீவர் கோயில், 500 ஆண்டுகள் பழமையான தேசிகர் சிலை உள்ளது. ஹயக்கிரிவரை வணங்கி சென்ற எந்த மாணவரும் தேர்வில் பின்தங்கியதில்லை என்பது நம்பிக்கை. கோயில் முன்பு நிறுத்தப்பட்டுள்ள ராமாயண காட்சிகளை விளக்கும் திருத்தேர், அந்த தேரடியில் ஸ்ரீ ராமர் பாதம் நோக்கி வீற்றிருக்கும் ஸ்ரீ ஹனுமன், கோயிலுக்கு அருகில் உள்ள வடுவூர் வடபாதி கிராமத்தில் மேற்கு நோக்கி வீற்றிருக்கும் சிறப்பு பெற்ற கைலாச நாதர் கோயில் ஆகியவை உள்ளன. கிழக்கே 12 கி.மீ தொலைவில் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில், மேற்கே 24 கி.மீ தொலைவில் உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் (பிரகதீஸ்வரர்), 40 கி.மீ தொலைவில் கோவில் நகரமாம் கும்பகோணம் ஆகியவை உள்ளது குறிப்பிடத்தக்கது.


கொடுத்து உதவிய திரு ஜோ.மகேஷ்வரனுக்கு மிக்க நன்றி.



Wednesday, January 30, 2008

பத்து விரலிலும் புளி

எனக்கு எப்போதும் வானொலி கேட்பது பிடித்தமான விஷ்யங்களில் ஒன்று.அறையில் இருக்கும் போது வானொலி ஓடிக்கொண்டு இருக்கும்.
ஏன்? இப்போது அலுவலகத்தில் இருக்கும் போது தமிழ் வானொலி கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன்.

தவறாமல் வானொலியில் செய்திகள் கேட்பது என் சின்ன வயதில் இருந்து தொடர்ந்துகொண்டிருக்கிறது.

சிங்கப்பூர் வந்ததில் இருந்து இங்குள்ள தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே ஆதரவு “ஒலி 96.8” தான்.இதன் சுட்டியை கொடுக்கலாம் என்று பார்த்தால் கடந்த 4 மாதங்களாக தூங்கிக்கொண்டு இருக்கிறது.அமெரிக்காவில் இருப்பவர்களால் ஒரு காலத்தில் பரவலாக கேட்கப்பட்டு வந்தது பிறகு ஏதோ பிரச்சனையால் அவர்களால் இணையம் மூலம் கேட்கமுடியவில்லை.

இன்று காலை சமையலை முடித்து லன்ஞ் பெட்டியில் சாப்பாடு வைத்துக்கொண்டு இருக்கும் போது,காலை நிகழ்ச்சி படைக்கும் “திரு” என்னும் திருச்செல்வி நகைச்சுவை சொல்பவர்களை பேசவிட்டு துணுக்குகளை ஒலிபரப்புவார்.அப்படி ஒன்று இன்று கேட்டது.

உரையாடல் அப்பாவுக்கும் பிள்ளைக்கும்.

அப்பா கொஞ்சம் பழைய கால ஆசாமி, தேவையில்லாமல் செலவு செய்வதை விரும்பாதவர்.அவரிடம் பல முறை மோதி நல்ல பெயர் எடுக்கமுடியாத பிள்ளை.

ஒரு நாள்...
அப்பா: டேய்! அந்த பானையில் உள்ள புளியை எடுத்து வேறு பானையில் போடு .
மகன்: சரிப்பா

மகன் அந்த வேலையை செய்து முடித்த பிறகு திடிரென்று ஒரு ஐடியா தோன்றியது.புளியை மாற்றும் போது பத்து விரல்களிலும் புளி ஒட்டிக்கொண்டு இருந்தது.அப்போது சாம்பார் வைக்க புளி கரைக்க முற்படும் போது கையில் இருக்கும் புளியை உபயோகித்து அப்பாவிடம் சொல்லி நல்ல பெயர் எடுத்துவிடலாம் என்று நினைத்து அப்படியே செய்தான்.

அப்பா வந்ததும் அவரிடம் அதைச் சொல்லி நான் ரொம்ப சிக்கனமாய் செய்துவிட்டேன் என்றான்.

அப்பாவிடம் இருந்து பளார் என்று அறை விழுந்தது.

ஏண்டா! பத்து விரலையும் ஒரே தடவையில் நனைத்தாய்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விரலாக நனைத்தால் பத்து நாளைக்கு வங்திருக்கும் அல்லவா? என்றாராம்.

இதெப்படி இருக்கு??

எழுதியதில் பிடித்தது என்று ஒரு பதிவைப்போடச்சொல்லி “காட்டாறு” சொல்ல்லியிருந்தாங்க .தலை என்று வேறு சொல்லியிருக்காங்க,போடாவிட்டால் எப்படி? :-)

சற்று முன் எழுதிய பதிவு,அதனால் இப்போதைக்கு இது தான் பிடிச்சிருக்கு.

தாமதித்ததுக்கு மன்னிக்கவும்.

Tuesday, January 29, 2008

திரு சிவ சிதம்பரம்

கடந்த 27ம் தேதி நடந்த கும்பாபிஷேகம் ஒன்றுக்காக திரு சிவ சிதம்பரம் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது போலும்,அதை செய்திகளில் காண்பித்தார்கள்.

உங்கள் பார்வைக்காக கீழே உள்ள சலனப்படம்.



நன்றி: வசந்தம் சென்ரல்

காளை “ஆட்டம்”.

இது சிம்பு நடிக்கும் காளை படத்தை பற்றி அல்ல.

மேல் விபரங்களுக்கு படத்தை பாருங்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்

Sunday, January 27, 2008

இணைய வேகம்

என்னுடைய "ஆப்பிள் கணினி" பதிவில் நம் சக பதிவாளர் "திவா" சிங்கப்பூரில் இணைய வேகம் எவ்வளவு இருக்கும் என்று கேட்க மாட்டேன் என்று சொல்லியிருந்தார்.

//இங்கு சிங்கையில் தேவைக்கு அதிகமாகவே வேகம் கிடைக்கிறது.//
எவ்வளவு என்று கேட்டு பெருமூச்சு விட நான் தயார் இல்லை!
:-)

அவர் கேட்காட்டி என்ன சொல்ல வேண்டியது நம்ம கடமை இல்லையே?

கீழே இருக்கும் படத்தை பாருங்கள்.



கடந்த 2 மாதங்களாக முட்டி மோதி ஒருவழியாக லினக்ஸில் கம்பியில்லா சேவையை கொண்டுவர முடிந்தது.இணைய இணைப்பு கிடைத்தவுடன் லினக்ஸின் பதிப்பை மேம்படுத்த சுமார் 350 MB தரவிரக்கம் செய்ய வேண்டிவந்தது.மேலே உள்ள படத்தில் காட்டியபடி 300kb/second என்ற கணக்கில் ஏறக்குறைய 11 நிமிடங்களில் இறக்கிவிட்டது.

நான் இணையம் உபயோகிக்க ஆரம்பித்த போது டையல் அப் மோடத்தில் 6 kb வந்தாலே படு ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு இருப்பேன்.அதையும் இதையும் ஒப்பிட்டு பார்க்கையில் இன்னும் அதிக வேகம் கூடும் என்றே தோன்றுகிறது.

Friday, January 25, 2008

சாலை தடுப்புச்சுவர்

ரொம்ப நாள் ஆயிற்று இங்கு கட்டுமானப்பதிவை போட்டு.

கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்,இந்த இயந்திரம் சாலையில் இரு ஓரங்களில் வரும் சிறிய தடுப்புச்சுவரை அதாகவே போட்டுக்கொண்டு நகருகிறது என்று.ஓரளவுக்கு நேராகவோ அல்லது ஏற்ற இறக்கம் உள்ள சாலைகளில் இதன் பயண்பாடு மிக அதிகம்.குறைந்த ஆட்கள் இருந்தால் போதுமானது.

இந்த இயந்திரத்தை பல மாதிரிகளில் பயண்படுத்துவதால்,ஒரு இயந்திரம் ஒரு வேலை மாத்திரம் என்று இல்லாமல் போட்ட முதலை சீக்கிரமே எடுக்க வசதி பண்ணிக்கொடுத்திருக்கிறார்கள்.

தேவையான அளவு மண்ணை எடுத்து தகுந்த உயரத்துக்கு கான்கிரீட்டும் போட்டுக்கொடுத்து விடுகிறது.

பாகம் 1



பாகம் 2



அடுத்த முறை சாலைப்பணி நடைப்பெற்றால் ஒரு கடைகண் பார்வையை செலுத்திவிட்டு போங்கள்.

Tuesday, January 22, 2008

ஜெயந்தி சங்கர் -பாகம் 2

போன பதிவில் “இன்பா” பற்றி சொல்லியிருந்தேன் அதில் அவர் சொல்லிய முக்கியமான விஷயம் ஒன்று விட்டுப்போய்விட்டது.

குழந்தைகள் பெரியோர்களை வயதான காலத்தில் கவனித்துக்கொள்வதில்லை என்ற பொதுவான கருத்து நிலவுதலை கொண்ட ஒரு கதையை(ஜெயந்தி சங்கர் எழுதியது) பற்றி குறிப்பிட்டு அதன் தொடர்பில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார்.

ஒருமுறை அலுவலகத்தில், முதியோர் நல அமைப்புக்காக நிதி திரட்டும் உண்டி குலுக்கிக்கொண்டு இருக்கும் போது (ஆர்சட் சாலை) ஒரு வெளிநாட்டவர் இவர் உண்டியலை பார்த்து எதற்கு நிதி சேர்க்கிறீர்கள் என்று கேட்டாராம்.பதில் சொன்னவுடன் 50 வெள்ளி உண்டியலில் போட்டுவிட்டு...

நீங்கள் குழந்தைகளுக்கு, பெரியவர்களை எப்படி கவனித்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறீர்களா? என்று கேட்டாராம்.பளார் என்று அறைந்தது போல் இருந்தது என்று சொன்னார்.எனக்கும் தான்... நாம் சரியாக சொல்லிக்கொடுக்கிறோமா?!!

அடுத்து வந்தவர் திரு பாஸ்கர்,இவர் எடுத்துக்கொண்ட புத்தகம் கவிதை மொழிபெயர்ப்பு ”சீனக்கவிதைகளின் பிரதமைகள்”



இவர் இப்போது கணினி வரைகலை பிரிவில் வேலை செய்வதாகவும்,தூரிகாவில் குழந்தைப்படம் வரைந்ததாகவும் அக்குழந்தையும் இங்கு வந்திருப்பதாக சொன்னார்,தொகுப்பாளினி.ஆமாம் “தூரிகா” என்ன புத்தகமா? எனக்கு தெரியவில்லை.

பல பக்கங்களில் டேக் எனப்படும் துண்டுசீட்டை வைத்துக்கொண்டிருந்தார்.முழு புத்தகத்தையும் அலசி ஆராய்ந்தார்.திருமதி ஜெயந்தி சங்கர் இந்த புத்தகத்தை எழுதுவதற்கான பொறி கிடைத்ததையும் அதன் மூலம் எப்படி விரிவானது என்று சொன்னார்.கவிதைக்கும் எனக்கும் ஒரு காத தூரம் அதனால் அவ்வளவாக மனதில் கொள்ளவில்லை.அவ்வப்போது பேசும் மேஜைக்கு பக்கத்தில் அங்கும் இங்கும் நடந்துகொண்டு சொன்னதால் கவனம் ஒரே இடத்தில் இல்லாமல் காப்பாற்றப்பட்டது.

அடுத்து வந்தவர் “பால மனோகரன்”இவருக்கு முன்பு பேசியவர்கள் சிறிது நேரம் அதிகமாக எடுத்துக்கொண்டதால் பேசுவதற்கு முன்பே “நான் 10 நிமிடம் தான் பேசப்போகிறேன்” என்றார்.
நாவல்கள் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் ஜெயந்தி சங்கர் நாவல் மூலம் திரும்ப படிக்க ஆரம்பித்ததாக சொன்னார்.பொருளீட்டலில் காலம் ஓடிக்கொண்டு இருப்பதால் படிக்க அவ்வளவு நேரம் செலுத்த முடியவில்லை என்று சொன்னார்.இவர் எடுத்துக்கொண்ட நாவலின் பெயர் ஞாபகம் இல்லை.ஆனால் செந்தில் & குமார் என்று பெயர்கள் வந்ததன.



அடுத்து களம் இறங்கியவர்,சற்றே 85 வயது ஆன இளைஞர் திரு ஈஸ்வர்.ஜெயந்தி சங்கரை பாராட்டி தன் பேத்தியாக விளித்து லேமினேட் செய்யப்பட்ட கவிதையை படித்த பிறகு கொடுத்தார்.கொஞ்ச நேரம் மட்டுமே பேசினாலும் சும்மா “நச்” என்று பேசினார்.வயது/அனுபவம் காரணமோ என்னவோ



பரிசு கொடுக்கும் போது.



பேச வந்த அவ்வளவு பேர் அவரை பாராட்டிக்கொண்டு இருக்கும் போது திருமதி ஜெயந்தி சங்கர் என்ன செய்து கொண்டிருந்தார்? அடுத்த நாவலுக்கு குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். :-))



கடைசியாக பேசியவர் திரு வரதராஜன்,இவர் என்னுடைய தாய் கம்பெனியில் வேலை செய்பவர்,தெரிந்திருந்தாலும் பேசவில்லை.இவர் பேசும் போது இரவு 7.45 ஆகிவிட்டதால் நான் கிளம்பும் நேரம் வந்தது.திரு ஜெயக்குமாரிடம் பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பும் போது என்னை ஜெயந்தி சங்கரிடம் அறிமுகம் செய்துவைத்தார்.

உங்களை நான் முன்னமே பார்த்திருக்கேனே! என்றார்.பிறகு அவரே ஓ! உங்களை வலைப்பக்கத்தில் உள்ள படத்தில் பார்த்திருப்பேன் என்றார்.வரதராஜன் பேச்சு நன்றாக் இருக்கும் கேட்டு விட்டு கிளம்பலாமே? என்றார்.



நான் கிளம்பி சிரங்கூன் சாலைக்கு போய்விட்டு அங்கிருந்து வீட்டுக்கு போக சிங்கப்பூரை அரை சுற்று சுற்ற வேண்டும் என்பதால் கொஞ்சம் முன்னமே கிளம்பவேண்டியதாகிவிட்டது.

என்ன பார்வையாளர்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையா?கண்ணாடிக்கு வெளியே இருந்தும் பார்க்கும் சீனப்பெண் கிழே.





மிச்சத்தை வேறு யாராவது எழுதினால் சொல்லுங்கள்.

Sunday, January 20, 2008

ஜெயந்தி சங்கர் -பாகம் 1

இரண்டு வாரங்களுக்கு முன்பு இருக்கும்,ஒரு மின் அஞ்சல் திரு ஜெயகுமார் என்பவரிடம் இருந்து அதைத்தொடர்ந்து ஜெயந்தி சங்கரிடம் இருந்து வந்தது
யார் இந்த ஜெயந்தி சங்கர்?

தமிழ் பதிவுகளை படித்திருப்பவர்களுக்கு இவரை தெரியும் (சமீபத்தில் அவர் பதிவுகளை பார்க்கமுடியவில்லை) அதோடு சிங்கையில் தமிழ் புத்தகங்களை படிப்பவர்களுக்கு இவரை அறிமுகம் செய்ய தேவையில்லை.அவ்வளவு பிரபலம்.

என்னை பொருத்தவரை அவரை அவ்வளவாக தெரியாது.போன வருடம் கூகிளாந்தவரிடம் ஏதோ தேடிக்கொண்டிந்த போது ஒரு புகைப்படம் கிடைத்தது அதில் குழலியுடன் இவரை பார்க்க நேர்ந்தது.

போன வருடம் இவருடைய சில வலைப்பதிவுகளையும் படித்தேன் அவ்வப்போது தமிழக வார இதழ்களில் இவர் பெயர் அடிபடும் போது இவரின் பிரபலம் புரிந்தது.

அந்த மாதிரி சமயங்களில் தான் இவரின் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது அது "நாலே கால் டாலர்"- ஞாபக மறதியாக ஒரு வாழ்த்து அட்டையை சிங்கப்பூர் கடைகளில் காசு கொடுக்க மறந்துவிட்டு படும் ஜெயில் அனுபவத்தை கருவாக கொண்டு படைக்கப்பட்ட கதை.கதை முழுவதும் நம்மையும் கூடவே அழைத்துப்போயிருப்பது அவரிடன் எழுத்தின் பலம்.

அப்படிப்பட்டவரின் மேலும் சில நூட்கள் அறிமுக விழா என்று சொல்லி மின்னஞ்சல் வந்தது. அது நடக்கும் இடம் "அமோகியோ" (அங் மோ கியோ) நூலக அறை என்று குறிப்பிட்டு இருந்தது.அந்த விழாவுக்கு நேற்று போய் வந்தேன் அதிலிருந்து சில படங்களும் & மேலும் சிலரின் பேச்சுகளையும் முடிந்த அளவு குறைத்து கொடுக்கிறேன்.

மாலை சுமார் 5.15 க்கு கிளம்பி மின் வண்டி பிடித்து யோ சு காங்க் போய் அங்கிருந்து அப்படியே பொடி நடையாக போய் சேர்ந்த போது மணி 6.10 ஆகிவிட்டிருந்தது.



நுழைந்தவுடனேயே கேசரியும் & எப்போதும் நன்றியுடன் இருக்குமாறு ஞாபகப்படுத்தும் "பகோடாவும்" மற்றும் காபியும் கொடுக்கப்பட்டது.

வந்தவர்களில் பலர் நாற்பதை கடந்தவர்கள்.பல தமிழ் சார்ந்த நிகழ்வுகளுக்கு வரும் கூட்டத்தை காட்டிலும் அதிகமாகவே இருந்தது.

தொகுப்பாளினியாக திருமதி சித்ரா ரமேஷ் ,ஒவ்வொருமுறையும் அழைக்கும் பேச்சாளர்களை பற்றி சிறிய குறிப்பை சொல்லிவிட்டு அழைத்தார்.



ஜெயந்தி சங்கரின் சில புத்தகங்களை ஆய்வுரை செய்ய சிலரை அழைத்திருந்தார்கள்,அவர்களில் முதல்வர் "இன்பா" பேசியதிலும் முதல்வராக இருந்தார்.பெயரை கேட்ட மாத்திரத்திலேயே “வேட்டையாடு விளையாடு”(அது இலா) தான் ஞாபகம் வந்தது.இவர் இயற்பெயரே வித்தியாசமாக இருப்பது பற்றி விளக்கம் சொல்லிவிட்டு சிங்கை வாழ் மக்கள் எளிதாக கூப்பிடுவதற்காக சுருக்கி வைத்துக்கொண்டதாக சொன்னார்.

சுமார் 10 பக்கள் எழுதி வைத்துக்கொண்டு ஆய்வுக்கட்டுரை சொன்னார்.எழுத்தும் அழகாக இருந்தது.ஓரளவு குறிப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு வந்திருப்போரை பார்த்து பேசினால் நல்ல பேச்சாளராக வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கவிதையை நன்கு அனுபவித்து படிப்பார் போலும் அதுவும் அப்துல் ரகுமான் கவிதைகள் அவரை வெகுவாக பாதித்துள்ளது போலும். ஒரு சில கீழே (பலவற்றை ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன் அதனால் 100% சரியாக இருக்காது)

குழந்தைகளுக்காக எழுதுங்கள்
குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள்.

இந்த மலரை பறித்தது யார்?
காம்பில் கண்ணீர் தெரிகிறதே!!

இப்படி பல

இவர் எடுத்துக்கொண்ட நாவல் இவரை அதிகம் பாதித்த “மனுஷி”.அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அலசினார் அப்படியே மற்ற கதைகளையும் தொட்டு பேசினார்.ஆண்களை வைத்துக்கொண்டே பெண்ணியம் பற்றி ஜெயந்தி சங்கர் சொல்லியுள்ளதையும் சொன்னார். :-))





பதிவின் நீளம் கருதி மற்றவற்றை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Friday, January 18, 2008

ஆப்பிள் கணினி

இரண்டு நாட்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் எடை குறைவான தக்கை போன்ற கணினியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

இதில் வட்டு போடும் வசதியில்லை ஆனால் அது பெரும் குறை அல்ல என்று சொல்லி பல சினிமாக்களை குறைந்த விலையில் இணையம் மூலம் பெற வசதிசெய்து வருகிறதாம்.பாட்டும் இணையதில் வாங்கிய பிறகு வட்டு எதற்கு?

மேல் விபரங்கள்.. கீழே.






நன்றி : வசந்தம் சென்ரல்.

உங்க வயசு 40 க்கு மேலா?

உங்க வயசு 40க்கு மேலா?

அப்ப கிழே இருக்கிற சலனப்படத்தை பார்க்கவும்.நம்ம காலத்தில் கரும் பலகை & சாக்பிஸ் என்று நம் ஆசிரியர்கள் மன்றாடிய காலம் கண்ணில் வருகிறதா?ஏன்! நம்ம தருமி சாரை கேட்டாலா சொல்வாரே...



தகவல் தொழிற்நுட்பம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதற்கு இந்த சலனப்படம் ஒரு சாட்சி.

Thursday, January 17, 2008

பொங்கல்- வித்தியாசமாக

பொங்கல் அன்று தொலக்காட்சியில் போட்டது இது,பார்க்க முடியாதவர்கள்/பார்க்காதவர்களுக்காக..பெருமாள் தரிசனத்தோட.

சிங்கையில் இந்த முறை புதிதாக பொங்கலை பள்ளிக்குள்ளும் கொண்டு போய் மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்துள்ளார்கள்.அடுப்பை விசிற விசிறி இல்லாவிட்டால் என்ன பிளாஸ்டிக் தட்டு போதும்,பால் பொங்குவதற்கு நேரம் பிடிக்கிறதா? அதற்கு மூடி போட்டு அதை விரைவுப்படுத்தும் யுத்தி என்று பல விஷயங்கள் உள்ளன.

இங்கு பல பெரும் தலைகள் பேசும் போது பல இன பல சமுதாயத்தை உருவாக்குவதைப்பற்றி ஒரு சில வரிகளாவது வந்து காதில் விழும்.அதை நேரிடையாகவே பாருங்கள்.

பொங்கல் கிண்டச்சொல்லிக் கொடுப்பவர் கிருஸ்தவர்/செய்தி தொகுப்பாளினி ஒரு முஸ்லீம் என அழகாக இணைந்திருக்கிறார்கள்.

மற்றவை சலனப்படத்தில்.




நன்றி: வழக்கம் போல்- வசந்தம் சென்ரல்.

Tuesday, January 15, 2008

பொங்கல் விருந்து

பொங்கலோ பொங்கல் என்று மட்டும் தான் சொல்லவில்லை..




குழந்தைகள்.. வாழ்க வளர்க.

Monday, January 14, 2008

மாட்டுப் பொங்கல்

பொங்கலுக்கு என்று ஒரு பதிவு போட்டாகிவிட்டது,அடுத்து மாட்டுப்பொங்கலுக்கு போடாட்டி எப்படி?மாடு முட்ட வந்துவிடும் என்பதால்....




நன்றி: வசந்தம் சென்ரல்.

எனக்கென்னவோ இது பல வருடங்களுக்கு முன்பு எடுத்த வீடியோவோ என்ற சந்தேகம்.சில வருடங்களுக்கு முன்பே ஒளிப்பதிவானதாக ஞாபகம்.ஒரு வேளை மக்களின் ஞாபகசக்தியை சோதிக்கிறார்களோ என்னவோ?

Saturday, January 12, 2008

ஓட்டுனர் இல்லா கார்

ஓட்டுனர் இல்லாமல் காரை ஓட்ட முடியுமா?

போன வருடம் நம்மூர் பெண்கள் கல்லூரி மாணவர்கள் செய்து காண்பித்தார்கள் அதையே மேம்படுத்தி ஊரை விட்டு ஊருக்கு போகச்சொல்லி அங்கிருக்கும் கார் நிறுத்தத்தில் நிறுத்திக்காண்பித்திருக்கார்கள்,அமெரிக்கர்கள்.

விரைவுச்சாலையில் Traffic Jam ஆகும் நேரத்தில் இதை முடிக்கிவிட்டு விட்டு பேப்பர் படிக்கலாம் தூங்கலாம் அல்லது வேறு வேலை செய்யலாம் என்று சொல்கிறார்கள்.இன்னும் புழக்கத்தில் வர சிறிது காலம் பிடிக்கலாம்.



இந்த விரைவுச்சாலையில் பயணிக்கும் போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்,சில வேலைகளில் ஓட்டுனர்கள் தூங்கி விபத்து நடக்க காரணமாகிவிடுவதுண்டு.அதே மாதிரி ஒரு நிகழ்வில் இருந்து தப்பினேன் அதிலிருந்து மதிய சாப்பாட்டுக்கு பிறகு இரண்டு மணி நேரத்துக்கு வெளி வேலையை தள்ளிப்போடுவேன்.

அடிக்கடி விரைவுச்சாலையில் பயணிக்கும் போது இந்த மாதிரி ஒரு அமைப்பு இருந்தால் கவலைப்பட வேண்டாம் என்று நினைப்பதுண்டு.ஆதாவது காரிலும், சாலை தடம் Markings
யிலும் காந்தம் இருக்கவேண்டும்.நேர் சாலை என்னும் பட்சத்தில் இந்த காந்த சக்தியை இயக்கவேண்டும்.இரு முனை காந்தம் வண்டியை தடம் மாறாமல் செலுத்த உபயோகப்படுத்த வேண்டும்.அதே மாதிரி முன்னும் பின்னும் வரும் வண்டிகளை தேவையான தூரத்தில் நிறுத்தவும் வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள காந்தம் வேலை செய்யவேண்டும்.இதில் நிறை குறைகள் உள்ளன,இருந்தாலும் கார் உபயோகிப்பார்கள்/தயாரிப்பார்கள் யாராவது சொன்னாலும் மண்டையின் உள் அரித்துக்கொண்டு இருக்கும் அரிப்பு அடங்கும்.:-)

பொங்கலோ பொங்கல்.

பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தாலும்,சிங்கப்பூரில் எதுவும் கொஞ்சம் முன்னாடியே நடக்கும்,அந்த வரிசையில் இதுவும்.

இட பற்றாக்குறையோ அல்லது தமிழக கலைஞர்கள் கிடைக்கவில்லையோ என்னவோ? முன்னமே செய்து அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை கொண்டு அரிசியும் போட வைத்துவிட்டார்கள்.

நாட்டுப்புற பாட்டுகளின் அரசி “திருமதி நவநீத கிருஷ்ணன்” அவர்களின் பேச்சையும் கேளுங்கள்/பாருங்கள்.



அந்த கரும்பை பார்க்கும் போது....!!!
பி.கு.நான் ஒரு கரும்பு பைத்தியம். :-))

Tuesday, January 08, 2008

கோவில் எப்படி இருக்கனும்?

போன வாரம் நம்ம KRS இரு பதிவுகள் போட்டு சச்சின் மாதிரி விளாசிட்டாரு உடனே நம்ம என்றென்றும் அன்புடன் பாலா எதிர்ப்பதிவு போட்டு சிலது சரியில்லை என்றார்.எனக்கு படிக்க மட்டும் தான் தெரியும்,வாக்குவாதம் என்றால் ஓடிவிடுவேன்.அதனால் அதன் உள்ளே நுழையவிரும்பவில்லை.

சரி,நான் இருக்கும் சிங்கையில் கோவில் என்றால் கோவில் மட்டும் தானா? பார்ப்போமா..

இங்கு ஒரு அங்குலம் கூட சும்மா இருக்கக்கூடாது அப்படியே கோவில்களும்.காலையும் மாலையும் பூஜை வேலை நடந்து கொண்டிருந்தாலும் அங்கு வேறு இடத்தில் பாட்டு/நடனம்/தியானம் என்று பல நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கிவிடுவார்கள்.

ஆதாவது கோவில் என்பது சமூக கூடமாகவும் வேலை செய்யும்.எதற்காக உருவாக்கப்பட்டதோ அதனை நன்குணர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.இட(ம்) ஒதுக்கீடும் ஆனது சமூகத்தையும் இணைக்கும் பணிக்கு உதவியாகிவிட்டது.

வருகிற 27ம் தேதி நடக்கப்போகிற ஒரு கோவிலின் கும்பாபிஷேகத்துக்காக சிங்கை அதிபர் திரு.S.R. நாதன் வருகை தந்து சில வார்த்தைகள் தமிழில் பேசி அசத்துகிறார்கள் பாருங்கள்.

சற்று முன் செய்தியில்.இனிமேல் இந்திய மற்றும் பங்களாதேஷ் வேலை தொழிலாளிகளை மலேசியாவில் எடுக்கப்போவதில்லை என்று சொன்னார்கள்.ஏற்கனவே உள்ள வேலைப்பதிவுகளை அதன் காலாவதி தேதிக்கு பிறகு புதிப்பிக்க போவதில்லை என்றும் சொல்லிவிட்டார்களாம்.அவர்கள் காரணம் அவர்களுக்கு.

இங்கு குடியேறுபவர்களை எப்படி பார்க்க/நடத்த வேண்டும் என்பதை திரு நாதன் சொல்வதையும் கேளுங்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்.

Monday, January 07, 2008

திரிஷா வெற்றி

கொஞ்ச நாட்களுக்கு முன்பு நடந்த அழகிப் போட்டியில் திரிஷா வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள்.படம் கீழே.

நல்ல வேளை இந்திய அழகிய போட்டி என்று நடத்தினார்கள்,தமிழ் அழகி என்று நடத்தியிருந்தால் அவ்வளவு தான்.தமிழ் பேசும் அழகை கடைசியில் பாருங்கள்.





நன்றி: வசந்தம் சென்ரல்

Sunday, January 06, 2008

பசி.. பசி...

ஒரு சமயத்தில் நம்மூரில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது சில கிராமங்களில் எலிக்கறியை உண்டார்கள் என்று கேள்விப்பட்டு மீடியா அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

அரசாங்கம் அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று போட்டுத்தாக்கியது.

கீழே உள்ள சலனப்படத்தை பார்க்கவும்.நாக்குக்கு சுவை போறாமல் சும்மா போகும் நத்தை, அதை எப்படியெல்லாம் சுவைக்கிறார்கள் பாருங்கள்.




நன்றி: வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வசந்தம் சென்ரல்.

இதுக்குப் பேரு பசியா இல்லை பணம் செய்யும் பகட்டா?

போகும் வரையில், இருக்கும் எல்லா உயிரினத்தையும் காலி பண்ணாமல் விடமாட்டார்கள் போலும்.

Friday, January 04, 2008

திருடன்

போன வாரம் பொட்டனிகல் கார்டன் போன போது எதேச்சையாக இந்த மலர் கண்ணில் பட்டது அதோடு நம் திரு.நா.கண்ணன் அவர்கள் இதை வைத்து ஒரு கவிதைப் பதிவு போட்டது ஞாபகம் வந்தது.

அதையே நாமும் செய்தால் நன்றாக இருக்காது அத்தோடு நமக்கு கவிதை எழுதிக்கொடுக்க யார் இருக்கா??கவிதையெல்லாம் ஊற்றுத்தண்ணீர் மாதிரி “பொசுக்” என்று வரவேண்டும்,கேட்டால் எல்லாம் கிடைக்காது என்பது என் அபிப்பிராயம்.சரி சரி எனக்கு தெரியாதது/வராததை பற்றி என்ன பேச்சு??

தலைப்புக்கு சம்பந்தமாக ஏதாவது சொல்லு, என்கிறீர்களா?

கீழே உள்ள படத்தை பாருங்கள்.



மேலே உள்ள படம் சாதரணமாக எடுத்தேன்.அடுத்த இடத்துக்கு போகலாம் என்று நினைக்கும் போது அந்த பூவின் உள்ளே உற்றுப்பார்த்த போது...



திருடன் அகப்பட்டுவிட்டான்.

Thursday, January 03, 2008

வீடு கட்டுவதில் அவஸ்தைகள்

பத்து வருடங்களுக்கு முன்பில் இருந்து தான் சென்னை போன்ற பெரு நகரங்களில் இந்த Flat முறை பிரபலபட தொடங்கியது,அதுவரை எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் என்ற நோக்கத்தில் தனியாக நிலம் வாங்கி வீடு கட்டுபவர்கள் தான் அதிகம்.கொஞ்சம் பணமும், இடமும் கிடைத்தவுடன் இந்த கிணற்றில் குத்தித்து நீந்தவும் முடியாமல் மூழ்கவும் இஷ்டமில்லாமல் படும் அவஸ்தையை வார்த்தைகளால் சிலரால் மட்டுமே விவரிக்க முடியும்.

நான் பார்த்தவரை இந்த வலைப்பதிப்புகளில் திரு டி பி ஆர் ஜோசப் ( தி.பார்க்கிறேன் - தேடி அலுத்துவிட்டேன்)மற்றும் துளசி கோபாலின் (இங்கு சொடுக்கி அவர்களின் கடைசி பதிவை பார்த்து அங்கிருந்து நூல் பிடிச்சி முதலில் இருந்து படிக்கவும்)நியூசிலாந்து வீடு கட்டி அதன் அனுபவங்களை நகைச்சுவையுடன் கொடுத்து அவர்கள் வலியை கொஞ்சம் மறந்தார்கள்.நான் வேலை பார்ப்பது கட்டுமானத்துறை என்றாலும் என்னுடைய வேலைகள் எல்லாம் பெரிய பெரிய நிறுவனங்களின் மேற்பார்வையில் கட்டப்படும் அளவில் பெரிய கட்டிடங்கள்.இதில் கொத்தனார் வரை போய் வேலையை பார்க்கவேண்டி வராது.வேலை ஆட்களை மேற்பார்வையிட அந்த குத்தைக்காரர் ஆள் இருப்பதால் என்னுடைய நேரடி அனுபவம் குறைவு.

இதே வீடு கட்டவேண்டும் என்று முடிவெடுத்து அதற்கு தகுந்த குத்தைக்காரரை கண்டுபிடித்து வேலை ஒப்படைத்துவிட்டு சும்மா இருக்க முடியாது,ஏனென்றால் இந்த வேலை செய்யும் பலர் முன் அனுபவ முறையிலேயே கற்றுக்கொண்டு வேலை செய்வார்கள்.அவர்களுக்கு என்று ஒரு குழுமம் இருக்கும் அந்த ஆட்களை வைத்து தான் வேலை பார்ப்பார்கள்,இந்த வேலைக்கு வாங்கிய சாமான்களை கொஞ்சமும் லட்ஜை இல்லாமல் அடுத்த இடத்தில் கொடுத்து வேலை பார்ப்பார்கள்.அவர்களுக்கு வேலை தெரியுமே தவிர காரண காரியம் பற்றி அதிகம் யோசிக்கமாட்டார்கள்.இது இந்த துறையின் உள்ள பெரும் குறை.உடல் உழைப்பு சார்ந்த வேலை அதிகம் என்பதால் படிப்பறிவு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே வருவார்கள்.இவர்களுக்கு மேஸ்திரியாக இருப்பவர்களும் இவர்களுக்கு முழுமையாக சொல்லித்தர மாட்டார்கள்.கண்ணுக்குத்தெரியாத அடிமைத்தனம் இங்கும் இருக்கும்.எல்லா சாமான்களும் திருட்டு போகும்.டிபன் பாக்ஸில் சிமின்ட் திருட்டு போவதை திரு ஜோசப் அழகாக சொல்லியிருந்தார்.நினைத்தது ஒன்று அமைந்தது ஒன்று என்று இருந்தாலும் வேறு வழியின்று அமைந்ததை வைத்து சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான் என்று துளசி முடித்திருந்தார்.

ஆமாம் இதெல்லாம் இப்போது எதற்கு சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா?

போன வாரம் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது அதுவும் எதேச்சையாக,திரு தேவன் எழுதியது.



அவர் அனுபவித்தாரா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் எழுதிய முறையில் பார்த்தால் நிச்சயம் அப்படித்தான் வீடு கட்டியிருப்பார் என்று தோனுகிறது.அந்த புத்தகத்தின் சில படங்களை இங்கு போட்டுள்ளேன் முடிந்தால் படிக்கவும் அதுவும் வீடு கட்டும் யோஜனையில் இருந்தால் அதற்கு முன்பு படித்துவிடவும்.




முதல் பக்கத்தில் இப்படி..படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்.



பி.கு: நல்ல வேளை நடுத்தர குடும்பங்கள் இப்போதெல்லாம் Flat ஐ தான் நாடுகிறார்கள்.

வெங்கட்டுக்காக..

நம்ம டொமஸ்டிகேட் ஆனியன் வலைத்தளம் வைத்திருக்கும் திரு வெங்கட் ஒரு புகைப்பட தொடர் பதிவுக்காக நம்மையும் இழுத்து ஏதாவது போடுங்க என்று சொல்லியிருந்தார்.

அவர் போட்டிருக்கும் கழுகை பார்த்த பிறகும் நம் படத்தையும் போட்டால் நன்றாக இருக்காது தான் இருந்தாலும் நான் சமீபத்தில் எடுத்த படத்தையும் அதை CVR மாற்றிக்கொடுத்தையும் கீழே கொடுத்துள்ளேன்.

என்னிடம் இருப்பது வெறும் 5 MP olympus கேமிரா என்பதால் அதனிடம் இருந்து பெரிதாக எதிர்பார்க்கவில்லை,அதோடியில்லாமல் பல படங்கள் பிரிண்ட் செய்வதில்லை என்பதால் கவனம் எடுத்து புகைப்படம் எடுப்பதில்லை.

இது நான் எடுத்தது





மேலே உள்ளதை CVR இப்படி மாற்றிக்காண்பித்தார்.



விதியை மீறிட்டனா?பொருத்துக்கொள்ளுங்கள்.

இரண்டும் ஒரே படம் தானே?