Friday, September 01, 2006

திரு.சத்தியமூர்த்தி-தொடர்சி

இதன் முதல் பகுதி
இங்கே


இவர் இரவு வேலைக்கு வந்தால் அவர் shift முடியும் வரை தூங்க மாட்டார், ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார்.சில சமயம் தனியாக உட்கார்ந்துகொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருப்பார்.

ஒரு நாள் இரவு பணியில் இருந்தபோது நான் ஏதோ Drawingஐ வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன்.எனக்கு முன்னால் அவர் புருவத்துக்கு மத்தியில் தனது இரு விரல்களை வைத்துக்கொண்டு டேபிள் மீது கையை ஊன்றிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டிருந்தார்.எனக்கு ஏதோ சந்தேகம் வந்து அவரை "சார்,இதிலே ஒரு சந்தேகம்" என்றேன்.

அவர் தூக்கிவாரிப்போட்டது போலே முழித்தார்.

சாரி சார்... தூங்கிட்டீங்களா? நான் பார்க்கலை-என்றேன்.ஆனால் அவர் கண்கள் தூங்கியது மாதிரி தெரியவில்லை.அதற்கு பிறகு தான் சொல்லத்தொடங்கினார் அவருடைய தியான வாழ்கையை.

அந்த நாள் வரை எனக்கு தியானத்தைப் பற்றி அவ்வளவாக தெரியாது.அதை கட்டுப்படுத்தலாம் இங்கு ஒலி /ஒளி தெரியும் என்றெல்லாம் படித்திருக்கிறேனே தவிர அதில் மனது அவ்வளவாக ஈடுபடவில்லை.

அவருக்கு அடிக்கடி ஒரு கனவு வந்து கொண்டிருக்குமாம்,ஏதோ ஒரு மலையில் ஏறுவது போலும்,ஒரு குகையில் பலர் ஏதோ முனுமுனுத்துக்கொண்டு இருப்பார்களாம்.இவர் நுழைவதை கூட யாரும் கண்டுகொள்ள மாட்டார்களாம்.(என்ன திரு ரஜினி ஏதோ பேட்டியில் சொன்னமாதிரி இருக்கா?).
இந்த மாதிரி கனவு வந்ததை ஒரு பெரியவரிடம் கூறிய போது நீ காண்கிற இடங்கள் எல்லாம் நிஜமாகவே இருக்கிறது என்று அந்த இடத்தையும் சொன்னாராம்.இவர் போய் அந்த இடத்தை பார்த்தாரா இல்லையா என்பதை என்னிடம் சொன்னதாக ஞாபகம் இல்லை.

தியானம் செய்பவர்களிடம் சில குணாதிசியங்கள் இருக்கும், அதை அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் சரியாக கண்டுகொள்வார்கள்.யாரிடம் என்ன பேச வேண்டும் என்று தெரிந்து பேசுவார்கள் அதுவும் இந்த மாதிரியான அநுபவங்களை அவ்வளவு சீக்கிரம் புதியவர்களிடம் கொட்டமாட்டார்கள்.தனக்கு நேர்வது சரியானதா இல்லையா என்ற குழப்பம் இருக்கும்.பல நேரங்களில் நேருக்கு நேர் கண்ணை பார்த்து பேசுவார்கள்.

தியானம் பற்றி பல நாட்கள் பேசுவோம் அப்போது ஒரு நாள் தான் முயன்றுகொண்டிருக்கும் ஒரு முயற்சியை சொன்னார்.

"அதாவது என் மனைவி அல்லது என் பெண் கையை பிடிக்கும் போது எனக்கு எந்த வித்தியாசமும் தெரியக்கூடாது"

இது கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தாலும்-உணர்சிகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றிருக்கிறார்.இதை தான் நமது காந்தி வேறு முறையில் முயற்சி செய்தார்.

"தியானம்"-இதைப்பற்றி.. அதில் ஒருவர் நம் வலைப்பூக்களில் மிகவும் பரிச்சயமானவர்... என்ன சொல்கிறார் என்று இங்கு பார்க்கவும்.

திரு.சத்தியமூர்த்தி, எங்கள் வேலை நின்ற போது Executive Engineer-திரு.மயில்சாமியுடன் (இவர் பெயரை சரியாகத்தான் சொல்கிறேன் என்று நினைக்கிறேன்-நேற்று குளிக்கும் போது ஞாபகம் வந்தது) பேசி ஒப்பந்த அடிப்படையில் என்ன உதவிகள் செய்யமுடியும் என்று பார்த்து திரும்ப வேலை ஆரம்பிக்க உதவினார்.

முழுதாக 3 மாதங்களுக்கு மேல் கான்கிரீட்டை உடைத்து பின்பு போட்டு வேலையை 24 மீட்டரில் இருந்து தொடங்கினோம்.

அந்த வேலை முடிந்த பிறகு நான் எங்கெங்கோ சுத்தியபிறகு,பல வருடங்கள் கழிந்தபிறகு ஒரு நண்பனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, இவர் எண்ணூர் அனல் மின்நிலையத்தில் வேலை செய்வதாக சொன்னான்.சரி ஒரு தடவை பார்த்திவிட்டு வரலாம் என்று அவர் அலுவலகத்துக்கு போனேன்.இந்த முறை அவர் Exe. Engineer க பதவி உயர்வு பெற்றிருந்தார்.நான் போன சமயம் அவர் வேறு எங்கோ போயிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு திரும்பிவிட்டேன்.

அங்கு வேலை செய்த பல நல்ல உள்ளங்களில் இவருக்கு எப்போதும் ஒரு தனியிடம் இருக்கும்.

8 comments:

Sivabalan said...

குமார்

உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த கட்டிடத்துறைக்கும் தமிழுக்கும் மிகப் பெரிய பணியை செய்துகொண்டிருக்கிறீர்கள்..

முடிந்தால் அச்சு வடிவவிலும் கொடுக்க முயலுங்க.. நிச்சயம் நிறைய பேருக்கு உபயோகமாக இருக்கம்..

நன்றி..

வடுவூர் குமார் said...

வாங்க சிவபாலன்,
நான் இங்கே தனியா கில்லி அடிச்சுக்கிட்டு இருக்கேனா? என்று பல தடவை என்னை நானே கேட்டுக்கொண்டே எழுதுகிறேன்.இருந்தாலும் அவ்வப்போது வருகிற பின்னூட்டங்களே தொடர்ந்து எழுத ஊக்கம் அளிக்கிறது.
யாராவது பயணடைந்தால் சரி.
அச்சுவடிவு??
அந்த அளவுக்கு நமக்கு சரக்கு கிடையாது.
இருந்தாலும் உங்கள் கருத்துக்கு நன்றி

Anonymous said...

எழுதிக்கொள்வது: RamKumar

எழுதிக்கொள்வது: RamKumar

தமிழ் மணத்தில் ஜாதி சண்டை போடவும் ஒரு ஜாதியை திட்டி தன் மன வக்கிரங்களை தனிக்கவும் வரும் ஒரு கூட்டம்..உங்களை போன்றவர்கள் எழுதும் பதிவுகளை படிப்பதற்க்கு தான் நான் தமிழ் மணம் வருகிறேன்,.இது தான் என் முதல் பின்னோட்டம்.. நிறைய எழுதவும்.. பல நல்ல விழயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது


12.39 1.9.2006

12.43 1.9.2006

பெத்தராயுடு said...

குமார் அவர்களே,

இதுவரை தங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வந்தாலும் பின்னூட்டமிட்டதில்லை (என்று நினைவு).

கணினி வல்லுநர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், வங்கிப்பணியாளர்கள், விவசாயிகள் போன்ற பலதுறையைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கு வலையுலகில் தடம் பதிக்கிறார்கள்.

ஆனால் கட்டிடத்துறையிலிருந்து பதிவிடும் முதலாமவர் நீங்கள்தான் என எண்ணுகிறேன்.

உங்கள் பதிவுகளில் கிடைக்கும் தகவல்கள், அனுபவங்கள் நிச்சயம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மிகுந்த பயனளிக்கும்.

தொடர்ந்து பதிவிடுங்கள்.

அன்புடன்,
பெத்தராயுடு.

துளசி கோபால் said...

'தமிழ்பதிப்புலகத்துக்கு இது பொற்காலம்'ன்னு நம்ம பத்ரி போட்ட பதிவைப் பார்க்கலையா?

இனிமே எல்லாம் அச்சுவடிவுதான். சரியா? :-))))

யாரும் வாங்கலைன்னாலும், நாம் அதைப் பரிசாக் கொடுத்துருவொம்லே:-))))

தியானம் செய்ய இப்பத்தான் கொஞ்ச மாசமா ஆரம்பிச்சுருக்கேன்.
போகப்போகத்தான் தெரியும்.

வடுவூர் குமார் said...

ஆமாம் ராம்குமார்.
இந்த மாதிரி பதிவுகளை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.
என்ன செய்வது அவரவர்களுக்கு வருவதைத்தான் செய்கிறார்கள்.விடுங்க..
முதல் வரவுக்கு நன்றி

வடுவூர் குமார் said...

துளசி,ஆஹா!!
"வாங்காட்டி பரிசா கொடுத்திடுவோமில்ல"-:-))

தியானம் -ஆரம்பிச்சுடீங்க-விடாதீர்கள் எக்காரணம் கொண்டு.
பலன் அதிகம்.
என்ன பெண்கள் கொஞ்சம் உணர்வுபூர்வமானவர்கள்-அதிகமான நேரம் பிடிக்கும்.

வடுவூர் குமார் said...

திரு பெத்தராயுடு
வாங்க.
நீங்க சொன்ன மாதிரி பலதுறை மனிதர்களை பார்க்கும் போது இந்த துறையில் உள்ளவர்கள் அதுவும் Siteயில் வேலை பார்ப்பவர்கள் எழுதுவது இங்கு அரிதாகவே இருக்கிறது.
முடிந்த வரை கொடுக்கிறேன்.
உங்கள் பின்னூடத்திற்கு நன்றி.