Thursday, August 31, 2006

திரு.சத்தியமூர்த்தி

இவர் தீரர் சத்தியமூர்த்தியில்லை,EB சத்தியமூர்த்தி.நான் பார்த்த மனிதர்களில் அதுவும் அரசாங்கம் சார்ந்த ஒரு நிருவனத்தில் பணிபுரிந்த சிறந்த மனிதர்

சுமாரான உயரம்,தமிழருக்கே உரித்தான நிறம்,நீண்ட 45 டிகிரி மூக்கு,பரந்த நெற்றி,பல நேரங்களில் கையில் சிகரெட்.பார்பதற்கு மிக சாதாரனத் தோற்றம்.

இவர் எங்கள் Siteக்கு வருவதற்கு முன்பு பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு inchrge க இருந்தார்.அவருக்கென்ற ஒரு அலுவலகமும் பக்கத்தில் இருந்தது.Site யில் இருக்கும் அலுவலகங்கள் எல்லாமே கீத்துக்கொட்டகையாக் இருக்கும் இல்லாவிட்டால் பிளைவுட்டில் 3 பக்கம் மூடிய ஒரு ரூமாக இருக்கும்.

இந்த மாதிரி நிலையில் பல தடவை அவரை அந்த கொட்டகையில் பார்த்திருந்தாலும் அவரிடம் பேசியதில்லை.ஏனென்றால் அவர் நிலையில் இருக்கும் பலர் பேசும்விதம் அறிந்ததால் முடிந்தவரை தவிர்த்துவிடுவேன்.

Clent-ஒப்பந்தக்காரர்களுக்கு இடையில் எப்போதுமே ஒரு கோடு இருக்கும் அதை நாம் மீறக்கூடாது.இவருடைய குணம் தெரியாததால் நானும் பழகவில்லை.

இந்த மாதிரி பெரிய Projectஇல் வேலை செய்யும் போது பக்கத்து ஒப்பந்தககாரர்களிடம் நல்ல பழக்கம் வைத்துக்கொள்ளவேண்டும்.இது நமக்கு எதாவது பிரச்சனை வரும் போது அவர்களிடம் இருந்து உதவி பெற்றுக்கொள்ளலாம்.நாமும் உதவலாம்.

ஒரு தடவை கான்கீரிட் போட்டுக்கொண்டு இருக்கும் போது அதை Vibrate செய்யும் ஒரு கருவி ரிப்பேர் ஆகிவிட்டது.வேறு யாரிடமும் இல்லாததால் அவரிடம் போக வேண்டியிருந்தது.தனது ஒப்பந்தக்காரரை கூப்பிட்டு உடனே உதவச்சொன்னார்,அதே சமயத்தில் அதை ஒழுங்காக திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார் இல்லாவிட்டால் அதற்கான பணத்தை கொடுக்கவேண்டும் என்று சொன்னார்.இப்படி தான் எங்கள் அறிமுகம் ஆனது.

எங்களுடைய Siteக்கு மாற்றல் ஆவதற்கு முன்பே என்னை பல தடவை அவருடைய இடத்தில் இருந்தே கண்காணித்து இருந்திருக்கார்.அதனால் என்னுடைய வேலை செய்யும் முறையை அறிந்திருந்தார்.இங்கு வந்தவுடன் பல விஷயங்கள் என்னுடன் பேசி வேலை எப்படி குறிப்பிட்ட நேரத்துக்கு முடிக்கலாம் என்று idea கொடுப்பார்.அதில் எங்கள் சார்பில் உள்ள கஷ்டத்தை சொன்னால் அதையும் யோசித்து தேவையான மாறுதல்கள் செய்து வேலையை தள்ளிக்கொண்டிருப்பார்.ஒப்பந்தக்காரர்களுக்கு ஒரு இன்ஜினீயர் உதவுவது என்பது பெரும் குற்றமாக கருதப்பட்டு வந்தது.இப்படிபட்டவர்கள் மத்தியில் வேலை சீக்கிரம் முடிய ஒப்பந்தக்காரர்களுக்கு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உதவுவதில் தவறேதும் இல்லை என்ற கருத்து இவரிடம் இருந்தது.

மற்றவர்களுக்கும் இவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இது தான்.அதை ஒரு நாள் அவரிடமே கேட்டேன்.நீங்கள் மட்டும் எப்படி எங்களுக்கு உதவுகிறீர்கள் என்று?

வெங்கடேசா,நான் லிபியாவில் வேலை பார்த்தவன்.அங்கு இருந்த முதலாளி ஒரு நாள் வந்து இன்னும் ஒரு வாரத்தில் இங்கு ஒரு கட்டிடம் வேண்டும்,நீ என்ன செய்வாயோ ஏது செய்வாயோ தெரியாது,உனக்கு வேண்டிய ஆட்களையும் மெசின்களையும் வாங்கிக்கொள் என்றாராம்.

தனக்கு வேண்டிய ஆட்களை வைத்துக்கொண்டு ஒரு வாரத்தில் முடித்துக்காண்பித்தாராம்.அதனால் எனக்கு ஒப்பந்தக்காரர்கள் எப்படி செய்வார்கள் என்று தெரியும் அதே சமயத்தில் அவர்களுக்கு என்ன உதவி செய்தால் வேலை ஓடும் என்று தெரியும்-என்றார்.

இவருடைய எண்ணம் முழுவதும் வேலையை சுற்றியே இருந்ததால் பல விஷயங்கள் சுமூகமாக போனது.அதே சமயத்தில் தன்னுடன் வேலைசெய்யும் சக பொறியாளர்களையும் சம்மந்தப்படுத்தி அவர்களுடைய சம்மத்தையும் வாங்கிவிடுவார்.அதனால் வேலை என்று வரும் போது எல்லாருக்கும் எப்படி பண்ணப்போகிறோம் என்று தெரிந்துவிடும்-பிரச்சனை அடிபட்டு போய்விடும்.

மொத்தத்தில் ஒரு PR ஆக இருந்து அந்த Project முடிய முக்கிய காரணமாக இருந்தார்.இது வரை அவர் வேலையை பற்றி இனி அவருடைய இன்னொரு உலகத்தைப்பற்றி பார்ப்போம்.

ஒரு நல்ல மனிதருக்கு இன்னொரு பதிவையும் போடுவோம்.

மேலும் தொடரும் அடுத்த பதிவில்.

8 comments:

 1. இப்படி நல்லவங்களும் இருக்கறதாலேதான் உலகம் ஒரே சீரா ஓடிக்கிட்டு இருக்கு.

  நல்ல மனிதர்களொட நட்பு கிடைக்கிறதும் ஒரு வரம்தாங்க.

  ReplyDelete
 2. //வெங்கடேசா,நான் லிபியாவில் //

  உங்கள் முழு பெயர் தான் என்ன?

  வெங்கடேஷ் குமார் ஆ? இல்ல வெறும் குமாரா ?

  ஒர்ரே கன்பீசன் அதான்.:)

  அன்புடன்
  சிங்கை நாதன்.

  ReplyDelete
 3. சிங்கை நாதன்
  வீட்டிலே குமார்,அலுவலகத்தில் வெங்கடேசன்.

  ReplyDelete
 4. இப்படி சில பேர் இருப்பதால் தான் அரசாங்க வேலையில் இருப்பவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள் என்ற எண்ணம் வருகிறது.
  நன்றி துளசி.

  ReplyDelete
 5. வாங்க ராஜ்குமார்
  நன்றி

  ReplyDelete
 6. நம்மை சுத்தி நிறைய நல்லவர்கள் இருப்பார்கள். நாம் தாம் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

  அதை நீங்கள் சரியாக செய்திருக்கிறீர்கள்.

  அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 7. பாலாஜி
  பலமுறை தவறானவர்களிடம் அடிப்பட்டபிறகு ஏதோ இப்படி அத்திப்பூத்தாற் போல் சில மனிதர்கள் வந்து "Refresh" பண்ணிவிட்டு போகிறார்கள்.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?