Wednesday, August 02, 2006

வயதே தெரியாவிட்டால்?

இன்று காலை இங்குள்ள வானொலி ஒலி 96.8 ஒரு குட்டிக்கதை / கருத்து ஒன்று கேட்டேன்.
அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.

எப்போதும்,காலை 7 மணி செய்திக்கு முன்பு திருமதி.கீதா ஒரு குட்டிக்கதை சொல்வார்.

அவர் இன்று சொன்னது இது தான்.KFC யின் பராக்கிரமங்களை சொல்லிவிட்டு அவர் எங்கோ படித்தாக இதைச்சொன்னார்.

"வயதே தெரியாவிட்டால் உன்னுடைய வயதை எவ்வளவாக வைத்துக்கொள்வாய்??"

பார்பதற்கும் படிப்பதற்க்கும் சுலபமாக தெரிந்தாலும் இதில் ஒரு பெரிய உட்கருத்து இருப்பதாக தெரிகிறது.

எனக்கு இப்படி தோனுது. "நல்ல,இளமையான எண்ணங்களே உங்களை இளமையாக காட்டும்".

நீங்க என்ன நினைக்கிறீங்க?

11 comments:

 1. 'இப்பத்தான் பிறந்தேன்'னு வச்சுக்குவேன்.

  ReplyDelete
 2. எழுதிக்கொள்வது: சிங்கை நாதன்

  அதெல்லாம் விடுங்க. நான் கேட்ட சில புது மொழிகள் - ஓர் விளம்பரத்தில் ,

  கறிக்கு கறிவேப்பிலை இவரா நம்ம வீட்டு மாப்பிள்ளை

  (இதோ உங்களுக்கு மிகவும் பிடித்த முட்டை பற்றி)

  ஆம்லெட் போட முட்டை வேண்டும்.ஆனா ஆட்டம் போட திறமை இல்ல வேண்டும்

  :)

  அன்புடன்
  சிங்கை நாதன்

  10.9 2.8.2006

  ReplyDelete
 3. உங்கள் முதல் வலைப்பூவை படிக்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டுமே? துளசி

  ReplyDelete
 4. வாங்க சிங்கைநாதன்.
  அது திருச்செல்வி மற்றும் ரபியின் கூத்து.
  ஆஹா!! முட்டையை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா?

  ReplyDelete
 5. கிராமத்துல போய் சில பெருசுங்களைக் கேட்டா இதான் பதில் வரும்!
  "எனக்கு இன்னா தெரியும்!
  நீயே ஒரு குத்து மதிப்பா போட்டுக்க"

  அதெல்லாம் நமக்குத் தெரியாது சாமி! ஆனா, தாது வருச பஞ்சகாலத்துல நா பொறந்தேன்னு எங்க ஆத்தா சொல்லும்"

  அது இருக்கும் ஒரு மூணு மாமாங்கம்"

  4 களுத வயசு இருக்குமுங்க!"

  "தோ, இத்த கண்ணாலம் கட்டும்போதுதான் சப்பான்காரன் குண்டு போட்டான்"

  இப்படி இன்னும் பல!

  ReplyDelete
 6. அண்ண்ன் தம்பி அல்லது அக்கா தங்கை
  அல்லது பெற்றோர் வயசிலிருந்து
  கால்குலேட் பண்ண வேண்டியதுதான்

  ReplyDelete
 7. நன்றி SK & சிவஞானம்ஜி
  நமது ஒவ்வொரு அசைவும் இந்த வயதுடனே ஒப்பிட்டு பார்த்து நமக்கு பழக்கமாகிவிட்டது.
  வயது என்ற ஒரு நினைப்பு இல்லாமல் போய்விட்டால்??
  சிலரின் வயதை,நீங்கள் சொன்ன மாதிரி ஏதோ ஒரு பேரிடர் அல்லது நிகழ்வுகள் மூலம் தான் நினைவில் கொள்ளவேண்டிவரும்.
  40 வயதில் முட்டிவலி,60 வயதில் கண்பொரை 45 வயதில் சக்கரை..இது உதாரணம் தான்.
  இதில் ஒன்று எட்டிப்பார்க்கும் போது இந்த வயது தெரியாத மனிதன் அதன் உடல் இயற்கையான போக்கு என் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதல்லவா?
  அப்படியென்றால் இந்த வயது நம்மை இயற்கையில் இருந்து வெகுதூரத்துக்கு கொண்டுபோகிறதா?

  ReplyDelete
 8. Anonymous11:17 AM

  எழுதிக்கொள்வது: anitha

  வயதே தெரியாவிட்டால்
  நமக்கு வயசாகிடிச்சேங்கற எண்ணமே வராதோ என்னவோ  13.38 2.8.2006

  ReplyDelete
 9. அனிதா-இதுக்குப்பேர் தான் "நெத்தியடி"என்பது.
  நான் சொல்ல நினைத்ததை சுருக்கமாக சொல்லிடீங்க

  ReplyDelete
 10. Anonymous6:10 PM

  எழுதிக்கொள்வது: thurgah

  வயது தெரியாவிட்டால்,இந்த பெரிசுங்க எல்லாம் வயது குறைவு என்று சொல்லிக்கொள்ளலாம்.நானும் யோசித்துப்பார்க்கின்றேன்.என்ன பதில் என்று தெரியமாட்டேங்கிறது.....நீங்க கொஞ்சம் சொன்னால் நல்ல இருக்கும்.நீங்களும் யீசுன் வாசியா?ரொம்ப சந்தோசம்!  20.30 4.8.2006

  ReplyDelete
 11. துர்கா
  அனிதா இப்படி பின்னூட்டம் போட்டார்கள் ,எனக்கு தெரிந்தவரை இதுதான் சரியாக இருக்கும் போல் உள்ளது.
  "anitha
  வயதே தெரியாவிட்டால்
  நமக்கு வயசாகிடிச்சேங்கற எண்ணமே வராதோ என்னவோ"
  இல்லாவிட்டால் கீதாவைதான் கேட்கவேண்டும்.முடிந்தால் அவர்களை பிடிக்கவும்.என்னால் முடியவில்லை.
  பரவாயில்லை துளசி (துளசி தளம்.)ஊரிலே 2 பேர்தானாம்.
  யூசூன்=நியூசிலாந்து.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?