Thursday, September 07, 2006

சிமினி-விளக்கம்.

இரண்டாவது முறையாக கான்கிரீட் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே எந்தெந்த வேலைகளில் கவனம் செலுத்தி இழந்த காலத்தை பிடிக்க முடியும் என்று எங்கள் மேலதிகாரிகள் விவாதம் நடத்த தொடங்கினார்கள் அது அப்படியே எங்கள் நிலைக்கும் வந்தது.
பலர் பலவித யோஜனைகளையும் முன்வைத்தபோது என்னுள்ளும் ஒரு யோஜனை தோன்றியது.அந்த யோஜனை சொல்வதற்க்கு முன்பு நான் Training எடுத்த டெல்லி site பக்கம் மீண்டும் ஒரு தடவை போய்விட்டு வருவோம்.அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியை வேண்டுமென்றே எழுதாமல் விட்டுவிட்டேன்.இங்கே போடுவதற்காக.

அது இது தான்..

டெல்லியில் இருந்தவர்களில் ஒரு தமிழ் மேற்பார்வையாளர், பெயர்:சந்திரசேகர்.வயதில் இளையவர்.
அவருக்கு கம்பிகட்டும் வேலைகளை மேற்பார்வையிடும் பணி கொடுக்கப்பட்டிருந்தது.அதில் ஒரு சிறிய சிக்கல் அதற்காக சில வேலை ஆட்களை வைத்துக்கொண்டு அதனுடைய Modelஐ கீழே கட்டிக்கொண்டிருந்தார்.
ஏதோ வேலையாக நான் கீழே போனபோது வேலை மும்மரத்தில் இருந்த அவரைப்பார்த்து என்ன ஏதாவது பிரச்சனையா? என்றேன்.

அதற்கு முன்னால்..

கீழே உள்ள படத்தை பாருங்கள்,

Photobucket - Video and Image Hosting

இது சிமினியின் குருக்கு வெட்டு தோற்றம்,தாவது சிமினியை குருக்காக வெட்டி பார்த்தால் இப்படி தான் இருக்கும்.
சின்ன சின்ன கட்டமாக உள்ளவைக்களுக்கு Corbel என்று பெயர்.இது நாங்கள் இப்போது கட்டிக்கொண்டிருக்கும் கான்கிரீட் சுவற்றின் உள் பக்கம் சுமார் 30 செ.மீ அளவுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்.

படத்தை பார்க்கவும்.

Photobucket - Video and Image Hosting

அதை இப்போது பண்ண முடியாததால் அதற்கு வேண்டிய கம்பிகளை மடக்கி வைத்து சுவர் கான்கிரீட் போடுவோம்.பிறகு அது வெளியே வந்த பிறகு அந்த இடத்தை கொத்தி கம்பியை வெளியே எடுத்து தேவையா அளவுக்கு போட்டுக்கொள்வோம்.இந்த Corbel கான்கிரீட் போட இப்போது நேரம் கிடைக்காது என்பதால் அதை இந்த வெளிச்சுவர் வேலை முடிந்த பிறகு தனியாக வேறு முறையில் கட்டுவோம்.அதை பிறகு சொல்கிறேன்.

ஆமாம் எதுக்கு இந்த கார்பெல்?

சிமினி கட்டுமான தொழிற் நுட்பத்தில்,முதலில் வெளிச்சுவர்(இதைத்தான் Slipform முறையில் கட்டுவோம்),பிறகு இந்த கார்பெல்.கார்பெலுக்கு மேல் ஒரு பீம்.அந்த பீமுக்கு மேல் Fire Brick Work.படத்தை பார்க்கவும்.

Photobucket - Video and Image Hosting

Slipform நடந்துகொண்டிருக்கும் போது இந்த வெளி/உள் சுவரில் இருந்து நீட்டிக்கொண்டிருக்கும் எதையும் இப்போது போட முடியாததால் மேலே சொன்ன மாதிரி தான் கட்டுமானத்தை நடத்தவேண்டும்.
இப்படி பார்க்கையில் ஒரு வேலை முடிந்த பிறகு தான் அடுத்த வேலையை ஆரம்பிக்கமுடியும்.இந்த மாதிரி சமயத்தில் இழந்த 3 மாதங்களை எப்படி ஈடுகட்டுவது?

திரும்ப சந்திரசேகர் பக்கம்.

சந்திரசேகருக்கு இந்த கார்பெல் கம்பி வைப்பதில் தான் பிரச்சனை.அதை திரும்ப சரியாக எடுக்கவேண்டும் என்பதால் ஏதோதோ யோசித்து ஒரு வழியாக கொண்டு வந்திருந்தான்.அப்போது ஏதோ ஞாபகத்தில்" வெங்கடேசா,இதை இப்போதே Slipform ஓடும் போதே போடுகிறமாதிரி இருந்தால் எப்படியிருக்கும்?"என்றான்.
அப்போது வழி தெரியாததால் மறந்துவிட்டோம்.

ஆனால் மண்டை உள்ளே ஏதோ ஒன்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.எப்போதோ யோசித்த கேள்விகளுக்கு எப்போதோ விடை தந்துகொண்டிருக்கிறது.அது தான் இப்போதும் தந்தது.

வழி பிறந்தது.

என்ன அது என்பதை அடுத்த பதிவில்.

8 comments:

Anonymous said...

எழுதிக்கொள்வது: மா சிவகுமார்

மர்மக் கதை போல போகிறது. :-)

குறுக்கு வெட்டுத் தோற்றம் என்று நீங்கள் போட்டிருக்கும் படம் சிம்னியைக் கீழிருந்து மேலே பார்க்கும் போது தெரிவதுதானே? இந்த கார்பெல்லின் வேலை இந்த ஃபயர் பிரிக் வொர்க்கைத் தாங்கிப் பிடிக்க மட்டும்தானா?

அன்புடன்,

மா சிவகுமார்

9.0 7.9.2006

Sivabalan said...

படங்களுடன் விளக்கியுள்ளீர்கள் ..

மிக அருமை..

நன்றி.

துளசி கோபால் said...

குமார்,

//மண்டை உள்ளே ஏதோ ஒன்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.எப்போதோ
யோசித்த கேள்விகளுக்கு எப்போதோ விடை தந்துகொண்டிருக்கிறது.அது
தான் இப்போதும் தந்தது.//

இது ரொம்பச் சரி. எப்பவும் ஓயாத குடைச்சல்தான். எதிர்பாராத நேரத்துலே ஒரு 'பளிச்'

வடுவூர் குமார் said...

துளசி-இந்த "பளிச்"-பல தடவை அனுபவித்திருக்கேன்.இதுவும் ஒரு புரியாத புதிர் தான்.

வடுவூர் குமார் said...

நன்றி- சிவபாலன்.

வடுவூர் குமார் said...

சிவகுமார்
ஆமாம்,கீழிருந்து மேல் பார்பது போல்.இந்த கார்பல் 10 மீட்டருக்கு ஒன்றாக இருக்கும்.வெறும் 3 லெவல் மட்டும் காண்பித்துள்ளேன்.
இந்த fire Brick யின் load அந்த ரவுண்டு பீம் மூலம் கார்பலுக்கு மாற்றப்படுகிறது.

Anonymous said...

எழுதிக்கொள்வது: SP.VR.Subbiah

நண்பரே, பதிவு கலராக கண்ணைப்பறிக்கும்படி உள்ளது.சைபார் அருகே அந்தப் பூ மட்டும் நகராமல் வாழ்த்துச்சொல்லும் பாங்கு- பாராட்டுக்கள்
ஆமாம் கட்டுமானத்துறைக்கு மட்டும்தான் உங்கள் சேவைகளா?

வாத்தியார்

12.36 8.9.2006

வடுவூர் குமார் said...

வாங்க சார்.
முதல் வருகைக்கு நன்றி.
அவ்வப்போது லினக்ஸ் பற்றி எனக்கு தெரிந்ததை எழுதிவருகிறேன்.