மேட்டூர் அநுபவங்கள்(1) &(2)
பழைய கான்கிரீடை உடைத்துவிட்டு புதிதாக போட்டு திரும்ப Slipformஐ தேவையான இடத்தில் மாறுதல்கள் செய்துவிட்டு ஆரம்பித்தோம்.
போனதடவை சூடுபட்டுக்கொண்டதால் இந்த தடவை கான்கிரீட் ஆரம்பிப்பதற்கு முன்பே சிமின்ட் மூட்டையில் உள்ள சிமின்ட்ஐ நன்கு சோதனை செய்து பிறகு ஆரம்பித்தோம்.
24 மணிநேர வேலை என்பதால் எங்கள் குழுவை இரண்டாக பிரித்து,ஒவ்வொரு குழுவும் 12 மணி நேரம் வேலை பார்த்தோம்.15 நாட்களுக்கு பின்பு Shift மாறவேண்டும்.அன்று மாத்திரம் 18 மணி நேர வேலை.
உடனே கணக்கு போடாதீங்க!! செம ஓவர் டைம் கிடைத்திருக்கும் என. ஒரு பைசா கிடையாது.நேரத்துக்கு டீயும் பிஸ்கட்டும் தான்.
ஒரு டீமில் கீழே ஒரு பொறியாளர்,ஒரு ·போர்மேனும் இருப்பார்கள்.இவர்களுடைய வேலை கான்கிரீட் மெசின்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா,அளவாக தண்ணீர் விட்டு கலக்குகிறார்களா மற்றும் ஜல்லி,மணல் மற்றும் சிமின்ட் தேவையான அளவு உள்ளதா என்று பார்க்கவேண்டும்.
மேலே தேவைப்படுகிற கான்கிரீட்டு,கம்பி & தேவையான Shutters கீழேயிருந்து Lift மூலம் தான் போகும்.அதே Lift ட்களும் உபயோகிப்பதால் அதையும் ஒழுங்கு படுத்தவேண்டும்.அவ்வப்போது கான்கிரிடின் தரக்கட்டுப்பாட்டுக்காக சின்ன சின்ன க்யுபு(Cubes) போடுவார்கள் (படத்தைப் பார்க்க).அதையும் கவனிக்கவேண்டும்.
அப்படியே மேலே போவோம்..
இங்கு தான் கான்கிரீட் போடுவார்கள் அதற்கு முன் இதன் அமைப்பை தோராயமாக சொல்லுகிறேன்.இந்த Slipform முன்றடுக்கு கொண்டது.
மேல் அடுக்கு:இங்கு தான் Lift மூலம் கான்கிரீட் வரும் இடம்.மேலே வருகிற கான்கீரிட்டை ·பனல் மூலம் Tube வழியாக இரண்டாவது தளத்திற்கு வரும்.கம்பி கட்டும் வேலையும் பாதி இங்கிருந்தும் 2வது தளத்தில் இருந்தும் நடக்கும்.
நடுத்தளம்:இதில் தான் பல வேலைகள் நடக்கும் இடம்.மேல் தளத்தில் இருந்து வரும் கான்கிரீட்யை Vibrate செய்யவும்.இந்த Slipform மொத்தத்தையும் தூக்கப்பயன்படும் Jack,Hydralic Pumps எல்லாம் இருக்கும்.சிமினி நேராகத்தான் போகிறதா என்று சோதனையிடவும் இந்த தளம் தான் உதவும்.கட்டுமானத்துக்கு வேண்டிய கம்பிகளை தரையிலிருந்து இந்த தளத்திற்கு மற்றொரு Winch மூலம் வரும்.
கீழ்தளம்:இங்கு வெளியே தெரியும் கான்கிரீடை Finishing செய்யும் இடம்.மற்றபடி தேவையான கான்கிரீட் கொத்தும் வேலைகளை செய்யும் இடமும் இதுவே.
இப்படி பல வேலைகளையும் முடித்துவிட்டு ஒரு நல்ல நாளில் 24 மீட்டரில் இருந்து கான்கிரீட் போட ஆரம்பித்தோம்.
நாங்க எல்லோரும் சேர்ந்து முழுங்கிய 3 மாதத்தை மீட்டோமா,இல்லையா?
EB க்கு அபராதம் கட்டினோமா?
வரும் பதிவுகளில்.
No comments:
Post a Comment