Monday, September 18, 2006

திரு.அருணாச்சலம்(சீர்காழி)

ஊருக்கு போய் திரும்பியதும் அவர் போய் பார்த்ததை சொன்னார்.அவர் மனைவி அந்த பெண்வீட்டுக்கு போய் சாதரணமாக பேசி வந்ததும்,தாரளமாக தொடரலாம் என்றார்.
இப்போதைய என் மனைவியை அன்று அவருடைய வீட்டில் பார்க்கமுடியவில்லை என்றாலும் ஏதோ ஒரு தட்டச்சு இன்ஸ்டியூட்டில் பார்த்துவிட்டு வந்து "Ok" சொன்னார்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அவர்மீது இருந்த எனக்கு இருந்த நம்பிக்கை.எதுவும் தவறாக போகாது,அதுமட்டும் இல்லாமல் அங்கு அவருக்கும் இருந்த மதிப்பு & நல்ல பெயர்.

இப்படி நான் அவுங்களை நூல் விட்டு பார்த்துக்கொண்டிருக்கும் போது என்னை அவர்கள் கயறு விட்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பது கல்யாணம் முடிந்தபிறகு தெரிந்தது.அது மற்றொரு சமயத்தில்.

மேட்டூரில் வேலை முடிந்தபிறகு அவர் காக்கிநாடா போக எனக்கும் அங்கேயே வாய்ப்பு வந்தது.

எதிர் எதிர் வீடு.என் மனைவிக்கும் அவர் மனைவிக்கும் நல்ல புரிந்துணர்வு இருந்தது.இங்கு தான் நான் இவரை கடைசியாக பார்த்தது.
இந்த வேலை முடிந்தபிறகு நான் ஒரு பக்கம் அவர் ஒரு பக்கம் போனதால் தொடர்பு விட்டுப்போனது.

கொஞ்ச நாள் கழித்து அவர் மலேசியா போய்விட்டதாக செய்தி கிடைத்தது.அதுவும் இதே கம்பெனி அவரை அங்கு அனுப்பியது அவரின் வேலை திறமைக்கு ஒரு சான்று.ஏனென்றால் இந்த மாதிரி வெளிநாட்டு வேலைக்கு இங்கு யார் நன்றாக வேலை செய்கிறார்களோ அவர்களுக்கு அடிக்கும் ஒரு பம்பர் பரிசு இது.

ஆனால் இவருக்கோ... ..

அவர் போன 2 மாதங்களில் என்னுடைய பேரும் அந்த பிராஜட்டில் அடிபட,என்னுடைய கடவுச்சீட்டு எல்லாம் தயார்படுத்தச் சொல்லியிருந்தார்கள்.

நடுவில் மற்றொரு வேலை அவசரமாக செய்யச்சொல்லி என்னை வடக்கே அனுப்பினார்கள்.அது முடிந்த பிறகு சென்னை அலுவலகத்துக்கு வந்து பிறகு மலேசியா கிளம்பவேண்டும்.

நான் இப்படி ஒரு வலைப்பூ உங்கள் அனுமதியில்லாமல் எழுதியுள்ளேன் படித்து பாருங்கள் என்று சொல்லலாம் என்றால்..

அதற்கு தேவையே இல்லாமல் ஒரு சின்ன விபத்தில் காணாமல் போய்விட்டார்.

கிழக்கு மலேசியா-குச்சிங் நகரம்-ஏப்ரல் 1992 ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பக்கத்தில் உள்ள ஒரு ஆலயத்துக்கு போகலாம் என்று வேனில் செல்லும் போது ஒரு திருப்பத்தில் குப்பை லாரி மோதி பொட்டில் அடிபட்டு சில மணி நேரங்களில் போய் சேர்ந்துவிட்டார்.பக்கத்து சீட்டில் உள்ளவர்களுக்கு சிறிய காயம் தான்.

வெறும் 39 வயதில் ஆட்டம் முடிந்தது.

இது இப்படி சோகமாக முடிந்தது என்றால் அடுத்த நண்பர் மிகவும் வித்தியாசமானவர்.

அது அடுத்த பதிவில்.

No comments: