Monday, September 25, 2006

பட்டியல் (தொடர்சி)

அடுத்து விழுந்தது நான் தான்

ஜனவரி / பிப்ரவரி 1988யில் ஆரம்பித்து ஜூனில் முடிந்தது எனது கல்யாணம்.நான் என்ன செய்தேன் என்பதை சொல்லலாம்,அதை என் நண்பர்கள் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.அவர்களும் வலைபதிய சில விஷயங்கள் வேண்டுமல்லவா?

இருந்தும் சில விஷயங்கள் மட்டும் சொல்லலாம்.விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கடிதம் எழுதினேன்.கடிதம் எழுதுவது என்றால் 3,4 பக்கம் எல்லாம் இல்லை.முதல் இரண்டு வரிக்கு மேல் திணறல் தான்.ஏனோ 2 வரிக்கு மேல் எதுவும் இல்லை போல் தோன்றும்.இவுங்களுக்கு மட்டும் இல்லை,அப்பா,அம்மாவுக்கும் எழுதும் போது இதே நிலை தான்.

நான் இங்கு இவ்வளவு எழுதுவதே அவர்களுக்கு கொஞ்சம் ஜீரணிக்கமுடியாத விஷயம் தான்.என்ன செய்வது அததற்கு நேரம் வரவேண்டாமா??

மற்றபடி அவர்களிடம் இருந்து சில புகைப்படங்கள் வந்தது.அவ்வளவு தான்.

சரி அடுத்த நண்பனை கூப்பிடுவோம்..

இவர் பெயர்: சேரன், இவர் ஊர் செய்யார்-சென்னைக்கு பக்கத்தில் உள்ளது.போன தடவை பாண்டிச்சேரி போகும் போது கிழக்குக்கடற்கரை சாலையோரம் பார்த்த ஞாபகம்.அதே ஊர் தானா என்று தெரியவில்லை.

இவரைப்பற்றி 4 வருடங்களுக்கு முன்பு "ஆனந்தவிகடனில்" செதுக்கியது யார்? என்ற கட்டுரை வந்தது.இயற்கையாகவே மரங்களில் உண்டாகும் உருவங்களை சேர்த்து வைத்திருந்தாராம்.

எங்களுடன் இருந்தபோது இந்த திறமையை காட்டவில்லை.ஆனால் ஒரு சிறந்த மோனோ ஆக்டிங் கலைஞர்.பல கலைஞர்கள் குரலில் பேசி நடித்தும் காட்டுவார்.விஜயகாந்த் மாதிரி நடிக்கும் போது அவரைப்போலவே இவர் புருவமும் ஏறும், இறங்கும்.எப்போதும் ஏதோ சிந்தனைவயப்பட்டவராக காணப்படுவார்.நல்ல நண்பர்.இவர் பேட்டி வந்த போது சென்னையில் Port Trust யில் வேலை செய்வதாக வந்தது.

ஆனந்தவிகடனுக்கு எழுதி அவர் விலாசம் கொடுக்கமுடியுமா? என்று கேட்டிருந்தேன்.

பதில் இல்லை.

மூலிகை விஷயங்களில் ஒரளவு ஞானம் பெற்றிருந்தார்.பாம்பு கடிக்கு என்ன மருந்து,தேள் கடிக்கு என்ன? என்று ஒரு பூங்காவில் முளைத்திருந்த செடிகள் பேரைச்சொல்லி காண்பித்தார்.இந்த மாதிரி ஆள் எப்படி கட்டுமானத்துறைக்கு வந்தார் என்று கேட்கிறீர்களா? அது தான் விதி.
எப்படியோ இங்கிருந்து விலகி கப்பல் துறைக்கு போய்விட்டார்.

ஒரு தடவை எங்கள் வீட்டுக்கு வந்தபோது பக்கத்து அறைக்கு போவதற்குள்ள கதவை தட்டினார்.ஞாயிறு மதியம் என்பதால் ராகவனும்,பத்மனாபனும் சின்ன குட்டித்தூக்கத்தில் இருந்ததால் இவர் கதவை தட்டியது கேட்கவில்லை போலும்.அவர்கள் எழுந்திருக்காததால் என் அறைக்கு வந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரத்தில் அவர்கள் வெளியே வந்ததும்..

ஏண்டா கல்யாணத்திற்கு முன்பே கதவை திறக்க மாட்டேன் என்கிறீர்களே?கல்யாணம் ஆனால் ஒவ்வொருவனும் எப்படி இருப்பீர்கள் என்று.. ஒரு சின்ன நாடகமே போட்டு மோனோ ஆக்டிங் கொடுத்தான்.சூப்பரோ சூப்பர்.

பத்மனாபன் வீட்டுக்கு போன அவன் பையன் குண்டாக இருப்பானாம்,இன்னும் போடு இன்னும் போடு என்று நன்றாக சாப்பிட்டுகொண்டிருப்பானாம்.மனைவி கதவு பக்கத்தில் இருந்துகொண்டு அவர் வீட்டில் இல்லை என்று சொல்வாராம்.

மத்தியானம் ராகவன் வீட்டுக்கு போனா,வீட்டு மேட்னியை கலைத்த கோபத்தில் எப்போது கிளம்புவான் என்று ஏனோ தானோ என்று பேசிக்கொண்டிருப்பானாம்.
மறக்காமல் ஏதோ ஒரு கோயில் குங்குமம் அவன் மனைவி கொடுப்பாராம்.

என் வீட்டுக்கு வந்த என் பையன் எடை தூக்கிக்கொண்டு Exercise செய்துகொண்டிருப்பானாம்.எங்க மேல போட்டுவானா என்று வீட்டில் உட்கார்ந்திருக்கவேண்டும்.

இப்படி பலவித கற்பனைகளையும் அவிழ்துவிடுவான்.

நல்ல பல கலைஞர்கள் இப்படி தளம் அமையாமல் எங்கெங்கோ சுற்றி வாழ்ந்துகொண்டிருப்பதை பார்க்கும் போது-கஷ்டமாக இருந்தது.

அடுத்து: சங்கர்.

இவரும் திருச்சிக்காரர்.சாதாரணமான குடும்பத்தில் இருந்து வந்தவன்.அதிகமாக பேசமாட்டான்.அந்த மெளனத்திலும் ஒரு புரிதல் இருக்கும்.இவனுடன் பல siteகளில் வேலை பார்த்தேன்.இப்போதும் L&T-ECCயில் பங்களாதேஷில் இருப்பதாக கேள்வி.

இன்னும் பலர் இருப்பதால்,அவர்களை பற்றி வேறொரு சமயத்தில் அங்கங்கே
எழுதுகிறேன்.

திரும்பப்போவாம் சிமினி உள்ளே!!

அடுத்த பதிவில்.

No comments:

Post a Comment

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?